paraquayஇலங்கை தொடர்பில் பராகுவே பாராளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க சர்வதேச பொறிமுறைமை அவசியமானது என வலியுறுத்தி இந்த தீர்மானம நிறைவேற்றப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மனம் நிறைவேற்றப்படவுள்ள நிலையில் பராகுவேவில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென பராகுவே பாரர்ளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுக்ள மனித உரிமைப் பேரவையின் ஒத்துழைப்புடன் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, பராகுவே அரசாங்க அதிகாரிகள் அண்மையில் நாடு கடந்த தமிழீழ இராச்சிய பிரதிநிதிகளை சந்தித்து இலங்கை விவகாரம் குறித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

பரகுவே அரசவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் ஈழத்தமிழ் மக்களது நீதிக்கான போராட்டத்துக்கு வலுச்சேர்த்துள்ளதோடு, பரகுவேயில் உள்ள பல மனித உரிமைவாதிகள் எமக்காக குரல் கொடுக்க தொடங்கியிருப்பது, புதிய நம்பிக்கைகளை நமக்கு அளிப்பதாக, நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மாணிக்கவாசகர் கருத்து தெரிவித்துள்ளார்.

 
பரகுவேயின் பிரபல மனித உரிமைவாதியான María Stella Cáceres அவர்கள், ஈழத்தமிழ் மக்களது நீதிக்கான போராட்டத்தில் தன்னையும் தற்போது இணைத்துள்ளதோடு, அதற்கான குரலியினையும் பரகுவே ஊடகங்களில் வெளிப்படுத்துகின்றார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.