அன்புடையீர், வணக்கம்

இலங்கை மீதான ஐ.நா மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணைக்கு (OISL) சாட்சியங்களையும் ஆதாரங்களையும் அனுப்ப இன்னும் இரண்டு வாரங்களே மீதம் உள்ள நிலையில் – அது குறித்து சில முக்கியமான தகவல்களை அளிக்க விரும்புகிறோம்..

ஐ.நா விசாரணை ஆணையத்துக்கு அனுப்பப்படும் எல்லா தகவல்களையும் விசாரணை ஆணையம் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, வெளியிலிருந்து யாரும் தகவல்களை கேட்டு அனுப்பத் தேவை இல்லை.

சட்டத்தரணி எதிரில் கையொப்பம் இடப்பட்ட தகவல்கள் அவசியமற்றவை. ஏனெனில், ஐ.நா விசாரணை என்பது நீதிமன்ற விசாரணையோ, தீர்ப்பாய விசாரணையோ அல்ல. இது ஒரு உண்மை அறியும் விசாரணை மட்டுமே.

விசாரணைக்கு தேவைப்படும் முக்கிய தகவல் எது?

குற்றங்களை நேரில் பார்த்த அல்லது பாதிக்கப்பட்ட நேரடி சாட்சியங்களே மிக முக்கியமாகும் தேவை. குற்றங்கள் நடந்தன என்பது அறிந்த செய்திதான். இப்போது குற்றங்களை நிரூபிக்கும் அளவிலான நேரடிசாட்சிகளே தேவை.

எடுத்துக்காட்டாக, வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்தோர் கொல்லப்பட்டது தெரியும். அதனைப் பார்த்தநேரடி சாட்சிதான் தேவை. அதுபோல, அறிந்த குற்றங்கள் அனைத்தையும் நிரூபிக்க சாட்சிகள் தேவை.

எனவே, எல்லோரும் அறிந்த குற்றச்செயல்கள் (வெள்ளைக் கொடி, பாலச்சந்திரன் கொலை, இசைப்பிரியா கொலை, சரணடைந்தோர் சித்தரவதை, மருத்துவ மனைகள் மீது தாக்குதல் போன்ற நிகழ்வுகள்) குறித்த நேரடி சாட்சியங்களே மிக முக்கியமானவை. போரில் பங்கேற்ற, குற்றம் நடந்த போது அங்கிருந்த insider தகவல்கள் மிக முக்கியமானவை.

– மொத்தத்தில் நேரடி சாட்சிகளே இந்த விசாரணையில் இன்றியமையாதவை. எனவே, நேரடி சாட்சி மற்றும் அந்த சாட்சி குறித்த ஒரு சுறுக்கத்தை உடனடியாக ஐ.நா விசாரணை ஆணையத்துக்கு (OISL) அனுப்பினால், அவர்கள் பாதுகாப்பான வகையிலும், இரகசியமாகவும் சாட்சியம் பெறுவார்கள்.

இது குறித்து மேலதிக தகவல்கள் தேவை எனில் தெரிவிக்கவும்.

நன்றி

அன்புடன்

அருள்

பசுமைத் தாயகம்,

சென்னை.

தகவல்களைப் பார்க்க பின்வரும் இணைப்பை அழுத்தவும்.
Handbook – OHCHR Investigation on Sri Lanka- Sept 2014