போர்க்களத்தில் இஸ்ரேலுக்கும், பிரச்சாரமுனையில் ஹாமஸுக்கும் இப்போர் வெற்றி என தெரிகிறது. இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் ஐரோப்பாவில் உச்சமடைகின்றன. அதே சமயம் இஸ்லாமிய நாடுகளிடையே ஹமாஸ் தோற்கவேண்டும் என்ற எண்ணம் காணபடுகிறது. ஒரு காரணம் ஐசிஸ், முஸ்லிம் பிரதர்ஹூட் மாதிரி அமைப்புகள் அரேபியா, யுஏஇயில் ஆட்சியை பிடிக்ககூடாது என்ற ஆட்சியாளர்களின் எண்ணமே

Gaza-2014-1
எகிப்தில் ஹமாஸை கடுமையாக கண்டித்து எகிப்திய டிவிக்களில் செய்யும் பிரச்சாரத்தை இஸ்ரேலிய தொலைகட்சிகளில் காட்டும் அளவு அங்கே ஹமாஸ் மேலான எதிர்ப்புணர்வு ஆட்சியாளர்களால் காட்டபடுகிறது. மக்கள் ஹமாஸ் ஆதரவு மனநிலையில் தான் இருக்கிறார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் இஸ்ரேலே பரவாயில்லை எனும் மனநிலையில் உள்ளார்கள்.

ஐரோப்பாவில் வழக்கமாக இஸ்ரேலை ஆதரிப்பவர்கள் எண்ணிக்கை இப்போது மிக குறைந்துவிட்டது. அதே சமயம் இப்போது ஆண்டிசெமிட்டிக் வாதத்தை இஸ்ரேல் கையில் எடுததால் ஐரோப்பிய நாடுகளின் இஸ்ரேல் எதிர்ப்பு சுருதி குறைந்துவிட்டது. அது என்ன ஆண்டிசெமிடிக்?

யூதர்களுக்கு எதிராக 2000 ஆண்டுகள் ஐரோப்பிய நாடுகளில் கடும் ஒடுக்குமுறை நிலவியது. அதனால் தான் இஸ்ரேலே உருவானது. இஸ்ரேல் எதிர்ப்பு ஐரோப்பிய மக்களின் யூத எதிர்ப்புணர்வை காட்டுவதாக இஸ்ரேலியர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக சென்ற வாரம் பாரிஸில் நிகழ்ந்த காஸா ஆதரவு பேரணியில் யூத ஆலயங்கள் தாக்கபட்டன. இது போன்ற பேரணிகளில் எழும் ஹிட்லர் ஆதரவு முழக்கங்கள், யூத எதிர்ப்பு முழக்கங்கள் ஆகியவற்றை வைத்து இஸ்ரேல் எதிர்ப்பு ஆன்டி செமிடிக் என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்யும் பிரச்சரம் பலனை அளித்துள்ளது..பிரான்சு அரசு பாலஸ்தின ஆதரவு பேரணிகள் அனைத்துக்கும் தடை விதித்துள்ளது. ஆண்டிசெமிடிக் என்ற குற்றசாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் மிக சென்சிடிவ் ஆக இருக்கும்.

அமெரிக்காவில் பாலஸ்தின ஆதரவு தெரிவித்த பல பிரபலங்களும் “நான் ஆண்டிசெமிடிக் அல்ல” என விளக்கம் கொடுக்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளார்கள். நடிகை பெனிலோப் க்ருஸ் சமீபத்திய உதாரணம்.

– நியாண்டர் செல்வன்