கடந்த வருடம் 05.09.2013 அன்று தமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்து தமிழீழத் தேசியத் தலைவர் மீது தீராத பற்றுக் கொண்டு தமிழீழ விடிவிற்காய் போராடிய இரத்தினசிங்கம் செந்தில்குமரன் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர் தமிழீழ விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக ஜெனிவாவில் தீயினில் தன்னையே ஆகுதியாக்கினார்.

senthilkumaran
இந்நாளில் அன்னாரை நினைவு கூறுவதோடு, அவரின் இலட்சியக் கனவுகள் நிறைவேறவும் எம் மக்களின் நீதி கிடைக்கும் வரை ஓயாது பணி செய்யும் கடைமையும் இந்த தமிழ் சமூகத்திற்கு உள்ளது என்பதையும் நினைவு படுத்துவோம்.

தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம் !