May172015001May172015002May172015003May172015006May172015009May172015011இனப்படுகொலையை மறுப்பது என்பது மீண்டும் ஒரு இனப் படுகொலைக்கு வழி செய்யும்.  இனப்படுகொலை நடந்து ஆறு ஆண்டுகள் கடந்து இன்று வரை சர்வதேசத்திடம் இருந்து இனப்படுகொலைக்கான குரலோ அங்கீகாரமோ கிடைக்காமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.

 

2009 ஆம் ஆண்டு கொடூரமான சிங்களம் இராணுவம் தமிழீழத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட இன அழிப்பும், வலி மற்றும் வேதனையை உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே17 ஆம் தேதி தமிழர்கள் நினைவு கூறுகிறார்கள்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு மே 17 ஆம் தேதி ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவு கூறல் அமெரிக்கா நாட்டில் கனெக்டிகட் மாநிலம் கேபிடல் கட்டிடத்துக்கு எதிரில் உள்ள புஷ்நெல் பூங்காவில் நடைபெற்றது.

 

இதில் பல்வேறு தரப்பு மக்கள் கலந்து கொண்டார்கள். குறிப்பாக ஆர்மேனியர்கள், அமெரிக்கர்கள், சீக்கியர்கள், தமிழர்கள் என சுமார் 100 பேர் க்கு மேல் பங்குபெற்று மெழுகுவர்த்தி ஏந்தி இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

 

இந்த நிகழ்வின் பொழுது தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் சில கோரிக்கையை மிக வலிமையாக முன் வைத்தனர். தமிழீழ படுகொலை விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்து தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்து கோரியும், நடைமுறையில் இருந்த தமிழீழ அரசாங்கத்தை மீண்டும் நிறுவதற்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்வு அமெரிக்காவில் வாழும் தமிழர்களால் கட்டமைக்கப்பட்ட “அமெரிக்க மனிதநேய சமூகம்” என்ற அமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்டது.

 

நிகழ்வின் பொழுது இனப்படுகொலையை சித்தரிக்கும் சில புகைப்படங்கள் வைக்கப்பட்டது. அதனை பார்த்த ஆர்மேனியர் ஒருவர் கூறியது “இனப்படுகொலை என்பது அரசாங்கத்தால் மிகவும் கவனமாக திட்டமிட்டு ஒரு இனத்தை துடைத்து வெளியேற்று ஒரு செயல் தான்.  இது மிகவும் கொடூரமாக இருக்கறது. இதனை நாங்க எதிர்பார்க்கவில்லை” என்று கூறினார். இந்த புகைப்பட தொகுப்பு இனப்படுகொலையின் ஆழத்தை வெளிக்காட்டியது.

 

நிகழ்வில் பங்கேற்ற சீக்கியர் இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கூறிய பொழுது ”இந்தியாவுக்கு ஈழ தமிழர்களை பூண்டோடு அழிக்க அயோக்கியத்தனமான குற்ற என்னம் இருந்தது அதனால் தான் அவர்கள் தமிழர்களை கொல்ல பயங்கரமான கனரக ஆயுதங்களை பரிசளித்தனர். மேலும் இந்திய சர்வதேச அழுத்தங்களை தடுத்தது. இந்தியாவினால் இனப்படுகொலையை தடுத்திருக்க முடியும் ஆனா அது அவர்கள் எண்ணம் இல்லை” என்று சீக்கியர்களுக்கு நடந்த இனப்படுகொலையின் மூலம் தெரிவித்திருந்தார்.

 

தமிழர் ஆர்வலர் ஒருவர் பேசுகையில் “ஈழ இனப்படுகொலைக்கு பின்னர் எப்படி தமிழ்நாடு தந்திரமாக வளைக்கப்பட்டது என்று கூறினார். மேலும் அவர் தமிழ்நாட்டில் அமைய இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையம், தஞ்சையின் மீத்தேன் பிரச்சனை, காவேரி நதிநீர் மற்றும் முல்லை பெரியாறு பிரச்சனை, தேனி நுயுற்றினோ பிரச்சனை என்று தமிழர்களை சுற்றியிருக்கும் ஆபத்துகளை எச்சரித்தார். இதன் மூலம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை போல 80 மில்லியன் தமிழ்நாட்டு தமிழர்களும் இனப்படுகொலையாவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்று எச்சரித்தார்.

 

நிகழ்வுக்கு வந்திருந்த மக்கள் பல்வேறு கோரிக்கைகள் தாங்கிய பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பி தனது உணர்வை வெளிப்படுத்தியிருந்தனர். பல பதாகைகள் ‘ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று வலியுறுத்தியது. மேலும் அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற மாநிலங்களின் இராஜதந்திர ஏமாற்று வேலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

 

சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு கோரி கோஷங்களை எழுப்பிய மக்கள் எதிர்கால செயல்பாடுகள் குறித்த கோரிக்கைகளை முன்னணியில் வைத்திருந்தனர்.

 

பிறகு பாலச்சந்திரன், இசைப்ரியா படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.  பிறகு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேய பிரபு ஈழத்தின் வரலாறு, விடுதலைப் புலிகளின் நல்லாட்சி, புவிசார் அரசியலில் இலங்கையின் முக்கியத்துவம், இலங்கை தீவில் சர்வதேச நாடுகள் தங்களின் படை தளம் அமைக்க வேண்டி நடத்தி முடித்த இனப்படுகொலை பற்றி விவரித்தார்.  மேலும் அவர் 2009-க்குப் பிறகும் நடந்த கொண்டிருக்கும் இனப்படுகொலை, இராஜதந்திர திசைதிருப்பல்கள், ஏமாற்றங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச சமூகத்தால் மறுக்கப்பட்ட நீதி, எதிர்கால நகர்வுகள் மற்றும் செயலாற்ற வேண்டிய நடவடிக்கைகளை பற்றி எடுத்துரைத்தார். அவர் இந்த நிகழ்வின் மூலம் வைக்கும் சர்வதேச சமூகத்திடம் வைக்கும் கோரிக்கையை பற்றி விரிவாக பேசினார்.

 

கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அமெரிக்கர் ஒருவர் “ இது மெழுகுவர்த்தி நினைவேந்தல் வெளிச்சம் அல்ல, ராஜதந்திர சதிகளின் மீது செலுத்தும் வெளிச்சம்’ என்று கூறினார். மேலும் அங்கு கூடயிருந்த அனைவரும் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி கிடைத்திட துணை நிற்பதாக உறுதியளித்தனர்.

 

நாம் அமெரிக்க மற்றும் சர்வதேச சமூகத்திடம் கீழே உள்ள கோரிக்கைகளை வைக்கிறோம்
ஈழ இனப்படுகொலையை சர்வ தேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய் !
தனி தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்து !
நடைமுறையில் இருந்த தமிழீழ அரசை மீண்டு நிறுவு !

 

இந்த செய்தியை தங்களது இணையத்தில் வெளியிட்டு தமிழர்களின் குரலை வலுபடுத்த வேண்டுகிறோம்.

 

நன்றி
அமெரிக்க மனிதநேய சமூகம்