ஈழத் தமிழர் இனப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு – பாசன அபயவர்த்தன

0
616

JAPAN-US-MILITARY-EXERCISE(ஜெர்மனியின் பிரேமன் நகரில் இடம்பெற்ற இலங்கைக்கான தீர்ப்பாயத்தில் ஊடகவியலாளரும் எழுத்தாளருமாகிய பாஷண அபேவர்த்தன வழங்கிய சாட்சியத்தின் சுருக்கமான வடிவம் இது)

இலங்கை அரச படைகளுக்கும் அமெரிக்கப் படைத்துறைக்கும் இடையே நிறுவனம் சார்ந்த இறுக்கமான, தொழில் முறை உறவுகள் உள்ளன. இவற்றின் பல அம்சங்கள் வெளியே தெரிந்தவை பல அம்சங்கள் இரகசியமானவை. இலங்கைக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. 1951ம் ஆண்டு அமெரிகக்காவின் ‘குரல'(Voice of America) வானொலி நிகழ்ச்சிகளைத் தென்னாசியப் பகுதிகளுக்கு ஒலிபரப்பும் அஞ்சல் நிலையமொன்றை இலங்கையில் அமைபப்தற்கு உடன்பாடு ஏற்பட்டது.

பிற்பாடு 1983ல் ஜே.ஆர். ஜயவர்த்தன அதிபராக இருந்தபோது 500 ஏக்கர் நிலத்தை இந்த வானொலி நிலையத்தை விரிவுபடுத்துவ தற்காக வழங்கினார். தென்னாசியாவிலேயே மிகப் பெரிய அமெரிக்க நிலையமாக இது அமைநத்து. அக்காலகடட்டத்தில் நுண் அதிர்வு அலைவரிசைகளை (Low Frequency) தீவிரமாகப் பயன்படுத்துகிற தளம் அமெரிக்காவுக்கு இலங்கையில் தான் இருந்தது.

1982ல் வெளியான அமெரிகக் அரசஅறிக்கை ஒன்றில் தென் ஆசியப் பகுதியில் அமெரிக்கக் கடற்படைக்கு தேவை ஏற்படுகிறபோதெல்லாம் பயன்படுத்தக்கூடிய துறைமுகமாக திருகோணமலைத் துறைமுகம் குறிப்பிடப்பட்டிருந்தது. 1980 அறிக்கையொன்றில் திருகோணமலை அமெரிக்க அரசின் வழங்குதளங்களில் ஒன்றாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. இலங்கை நாடாளுமன்றத்தில் இது பற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட போது உடனடியாகப் பதிலளிக்காது இரணடு வாரங்களின் பின்னர் ‘அந்தத் தகவல் ‘அச்சுப் பிழையால் நேர்ந்தது’ என்று அப்போதைய இலங்கைப் பிரதமர் தெரிவித்தார.; அமெரிக்க அரசம் அது அச்சுப்பிழைதான் என அறிக்கை வெளியிட்ட போதிலும் எவரும் அதனை நம்பத் தயாராக இருக்க வில்லை. 1982ல் அமெரிக்க ஜெனரல் வேர்ணன் வால்டர் இலங்கைக்கு வந்து இஸ்ரேல் அரசின் நலன்களைப் பேணுவதற்கான ஒரு சிறப்பு நிர்வாகப் பிரிவை (Israeli Interests Section) அமெரிக்கத் தூதரகத்தில் நிறுவ வழியமைத்தார். அதுவரை இருந்த இலங்கை அரசுகள் இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளைப் பேணவில்லை. எனினும் ‘பயங்கரவாத’ ஒழிப்புக்கு இஸ்ரேலிய அரசு, இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாட் ஷினபெத்(Shin Beth) ஆகியவற்றின் உதவியை இலங்கை அரசு பெற்றுக்கொள்வதற்கு வசதியாகவே அமெரிக்க அரசு இந்த ஏற் பாட்டைச் செய்தது. இலங்கைக் காவற்று றையின் ‘சிறப்புப் படையணி’ (SpecialTask Fone – STF) இஸ்ரேல் அரசின் துணை யுடனேயே உருவாக்கப்பட்டு, மொஸாட், ஷின்-பெத் மற்றும் இஸ்ரேலிய சிறப்புப் படையணிகளால் பயிற்றப்பட்டுக் கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கே ஏராளமான படுகொலைகளுக்கு இவர்கள் பொறுப்பாக இருந்தார்கள்.

1996ல் இலங்கைப் படையினருடன் இரா ணுவப் பயிற்சி ஒத்திகைகளை அமெரிக்கஅரசு துவங்கியது. Green Beret, NavySeals போன்ற அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படையணிகள் இலங்கையின் சிறப்புப் படையணிகளுக்கு பயிற்சி அளிக்கத் துவங்கினர். இலங்கைப் படையணிகளின் எல்லாச் ‘சிறப்புப் படையணி’களும் இவ்வாறுதான் வடிவம் பெற்றன. இந்தப் படையணிகள் அமெரிக்காவின் John F. Kennedy Special Warfare School, US General Stact college ஆகிய இடங்களில் பயிற்சி பெற்றன. 2006 – 2007 காலப்பகுதியில் மட்டும் 382 இலங்கை இராணுவ அதிகாரிகள் இவ்வாறு அமெரிக்க அரசினால் பயிற்றப்பட்டனர். இது சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடந்தபோதும் தொடர்ந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். 2002ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் போர் நிறுத்த உடன் பாடு எட்டப்பட்டு நிரந்தர சமாதானத் துக்கான பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகின. அக்காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலஙகைப்; படைகளுக்குமிடையில் வலுச் சமநிலை காணப்பட்டது. பேச்சு வார்த்தைகளின் போது இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமத்துவம் கொண்டவர்கள் என்ற அடிப்படையிலேயே இடம் பெற்றன(Parity of Status). ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தன. போர் நிறுத்தம் முறிவுற்றமைக்கும் பேச்சுவார்த் தைகளிலிருந்து விடுதலைப்புலிகள் வெளி யேறியமைக்கும் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் காரணமல்ல. திருப்திகரமான முன்னேற்றம் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டிருந்தது. எனினும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளை அமெரிக்கா தடைசெய்தமையும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும் வடக்கு – கிழக்கின் அபிவிருத்தி தொடர்பாகவும் வாஷிங்டனில் அமெரிக்க அரசு ஏற்பாடு செய்த மாநாட்டுக்கு விடுதலைப் புலிகளை அழைக்க மறுத்தமையும் தான் இலங்கையில் சமாதான முயற் சிகள் சீர்குலைந்து போனமைக்குக் காரணம்.

இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் சமத்துவம் கொண்ட தரப்புகளாக அமெரிக்கா ஏறறுக்கொள்ளாத் தொடர்ச்சியாக மறுத்து வந்தமையின் விளைவு தான் போர் மறுபடி மூண்டெழக் காரணமாக அமைந்தது. எத்தகைய பேச்சுவார்த் தைகளும் வெற்றி பெறுவதற்கு அரசியல் ரீதியான சமத்துவ நிலையிலேயே இரண்டு தரப்பினரும் கலந்து கொள்ளவேண்டும் என்பதும் அச்சமநிலை தொடர்ந்தும் பேணப்படவேண்டும் என்பதும் அடிப்படையான நிபந்தனைகள் ஆகும். இலங்கைச் சூழலில் இந்த அடிப்படை விதியை மிகவும் திட்டமிட்ட வகையில் உடைத்தெறிந்த பொறுப்பு அமெரிக்க அரசையே சாரும்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை à®…à®° சுக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்கா இன்னுமொரு நடவடிக்கையிலும் இறங்கியது. 2007ல் இலங்கை அரசுடன் Acquisition and Cross Services Agteement (ACSA) எனப்படும் இராணுவ ஒப்பந் தத்தை ஏற்படுத்தியது. NATO வுக்கு வெளியே உள்ள நாடுகளுடன் நெருக்கமான இராணுவ உறவுகளையும் பயிற்சிகளையும் பேணுவதற்காக அமெரிக்கா உருவாக்கியிருப்பதே ACSA. இந்த ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் இரகசியமாகவே பேணப்பட்டன. ‘இராணுவத் தளபாடங்கள் இந்த ஒப்பந்தத்தில் சம்பந் தப்படவில்லை’ என ரொபர்ட் பிளேக் பத்திரிகைக் குறிப்பு ஒன்றில் சொல்லியிருந்தாலும் இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் வெளியே தெரியவரும் போது உண்மை தெளிவாகப் புலப்படும். உலகின் 89 நாடு களுடன் அமெரிக்கா ACSA. ஒப்பந்தம் செய்து வைத்துள்ளது. 2002ல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெ ழுத்தான உடனேயே அமெரிக்காவின் பசுபிக்கடற்பகுதி இராணுவக்கட்டளைத் தலை மையகம் (Pacific Command)திருகோணமலை, பலாலி, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் போர் தொடர்பான படைத்துறை சார்ந்த மதிப்பீடுகளை மேற்கொள்ளத் துவங்கியது. மார்ச் 2002ல் இந்தப் பகுதிகளுக்குச் சென்ற அமெரிகக் உயர் அதிகாரியான கிறிஸ்டினா ரொக்கா, ‘எமது படைத்துறை ஆய்வுகள் மூலம் இலங்கை அரசைப் பலப்படுத்துவதுதான் எங்களுடைய நோக்கம்’ என வெளிப்படையாகவே தெரிவித்தார்.

trinco_sampur_muthur_435[1]
திருகோணமலைப் பகுதியை விடுதலைப்புலிகள் தமது கட் டுப்பாட்டில் வைத்திருந்தால் அவர்களைத் தோற்கடிக்கமுடியாது. எனவே, ‘கிழக்கிலிருந்து புலிகளை இல்லாதொழிப்பது அவசியம்’ என்ற நிலைப்பாட்டில் இருந்தே அமெரிக்காவின் பசுபிக் கடற்பகுதி இராணுவக் கடட்ளைதத் லைமையகம் தொழிற்பட்டது. 2009ல் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது ‘இரவிலும் குண்டு வீச்சுத் தாக்குதலில் ஈடுபடும்திறன் வாய்ந்த விமானங்களை இலங்கை விமானப் படை பெற்றுக் கொள்ளவேண்டும்’ எனவும் ‘இஸ் ரேலிய KFIRவிமானங்கள் பெருமளவுக்குத் தரமுயர்த்தப்படுவதன் மூலம் இது சாத்தியம்’ எனவும் அவர்கள் அறிவுரை வழங்கினர். கொத்துக்குண்டுகள் வீசுவதும் அவசியம் என்று அமெரிக்க ஆலோசகர்கள் அறிவுறுத்தியதாக Paul Moor craft, jd;Dila ‘Total Destruction of the Tamil Tigers: The Rare Victory of Sri Lanka’s Long War’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். இவர் உலகின் முக்கிய இராணுவக் கல்லூரிகளில் ஒன்றான Royal Military Academy, Sandhursty விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பிரித்தானியாவின் இராணுவக் கல்லூரிகளிலும் பணியாற்றிப் பின்னர் அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் தொடர்பாளராகக் கடமையாற்றினார். மே 2009ல் போர் முடிவுறும்வரை இத்தகைய ஆலோசனைகளும் உதவிகளும் இலங்கை அரசுக்குத் தொடர்ச்சியாக வழங் கப்பட்டன. • முள்ளிவாய்க்கால் பேரழிவுகள் பற்றிய ஏராளமான செய்ம்மதி ஒளிப்படங்கள் அமெரிக்காவிடம் இருந்தபோதும் அவற்றைஅது வெளியிடவில்லை. • போர் முடிந்த பிற்பாடும் அமெரிக்க அரசுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்ச் சியான, நெருக்கமான படைத்தரப்பு உறவுகள் பேணப்படுகின்றன. • இந்த நாட்டு இராணுவங்களுக்கும் à®…à®° சுக்கும் இருக்கக்கூடிய இத்தகைய அமைப் பார்ந்த (Structural) படைத்துறை உற வுகள் ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு அமெரிக்க அரசும் உடந்தை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

நன்றி : காலச்சுவடு