ஐ.நாவின் மனித உரிமைக்கமிசன் துவக்கி இருக்கும் விசாரணை முன்வைக்கும் விவாதங்களின் அடிப்படையில் இந்த ஆய்வரங்கம் முன்னெடுக்கப்படுகிறது.

ஐ.நாவின் மனித உரிமைக்கமிசனின் விசாரணை ஏற்படுத்த இருக்கும் விளைவுகள், விசாரணையின் பலன்களும், பாதகங்கள், இருதரப்பு விசாரணை (இலங்கை ராணுவம் – விடுதலைபுலிகள்) என்பதன் பின்னுள்ள அரசியல், புவிசார் அரசியலில் இலங்கையின் நகர்வுகள், சர்வதேசத்தின் நிலைப்பாடுகள், ஏகாதிபத்தியத்தின் எதிர்பார்ப்புகள் தலையீடுகள் என விரிந்து செல்லும் தமிழீழ விடுதலையின் சமகால அரசியலைப் பற்றிய விரிவான ஆழமான விவாதங்களை நடத்திடும் முயற்சியாக இந்த ஆய்வரங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆய்வு பகிர்விற்கு பின்னரான கருத்தரங்க விவாதமும் திட்டமிடப்பட்டுள்ளது.
may17