ஈழ ஆய்வு நிறுவத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

0
675

1975 ஆம் ஆண்டு இலண்டன் நகாில் கருக்கொண்ட ஈழ ஆய்வு நிறுவனம் 2015 ஆம் ஆண்டு 40 வருட பயணத்தை நிறைவு செய்வதினை முன்னிட்டு, நிறுவனம் கருக்கொண்ட லண்டன் நகாில், ஈழத்தமிழர்களின் நாடற்ற துயரம் எனும் தலைப்பில் பகிரங்க கருத்தரங்கொன்றை லண்டன் நகாின் ரெட்லயன் சதுக்கத்தில் அமைந்துள்ள கொன்வெய் மண்டபத்தில் எதிா்வரும் ஜீன் மாதம் 27 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வானது காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடம் பெறும்.

 

peterசுவீடன் நாட்டின் உப்சலா பல்கலைகழக ஒய்வு பெற்ற பேராசிாியர் பீட்டர் ஸ்கால்க் “ஈழத்தமிழர்களின் நாடற்ற துயரம் எனும் தலைப்பில் கருத்துரை வழங்க உள்ளார். பேராசிாியர் பீட்டர் ஸ்கால்க் ஒய்வு பெற்ற சமயவரலாற்ற துறை பேராசிாியர் என்பதுடன் இந்து, பௌத்த மத வரலாறு தொடர்பான சிறப்பு பேராசிாியரும் ஆவார். ஆரம்ப காலங்களில் ஈழப்போராட்ட களத்திலும் பின் வெளியிலும் நின்று பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர் ஒய்வு பெற்ற பின்னரும் ஆய்வு பணிகளை தொடர்வதோடு தொடர்ச்சியாக ஈழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல்கொடுத்து வருபவர் ஆவார்.

 

கருத்தரங்கின் பின்னர் தமிழக திரைப்பட இயக்குனர் ஆனந்த் மூா்த்தி இயக்கி வெளிவரவிருக்கும் தியாகி திலீபனின் தியாக வரலாற்றை சித்தாிக்கும் “திலீபன்” திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி வெளியிடப்பட்டு திரையிடப்படவிருக்கின்றது.

 

நாற்பதாவது ஆண்டை நிறைவு செய்திருக்கும் ஈழ ஆய்வு நிறுவனமானது, ஈழத்தமிழர்களின் தேசிய, சமூக ,அரசியல் பிரச்சினைகளை வர்க்க கண்ணோட்டத்தோடு அணுகி தர்க்கீக அடிப்படையில் முரண்பாட்டை வெளிப்படுத்தி அதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற முன்னோடி அமைப்பாகும். ஈழர்களின் தேசிய அபிலாசையையும் அதற்கான போராட்டத்தையும் எடுத்துக்காட்டிய “ஈழவர் இடர்தீர”, மலையக மக்களின் வரலாற்றை வெளிப்படுத்திய “இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் ஆகிய நூல்கள் ஈழ ஆய்வு நிறுவனத்தின் குறிப்பிடதக்க பணிகளாகும். ஈழ ஆய்வு நிறுவனம் தொடர்ந்து ம் தமிழ் நாட்டில் வழிக்காட்டி எனும் வெளியீட்டை தமிழகத்தில் வெளியிட்டு தன் பணிகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடதக்கதாகும்.

IMG_3261