தனது வாழ்நாளில் இதுவரை செய்யாத ஒன்றைச் செய்திருக்கிறார் ஜெயலலிதா அவர்கள். முன்னர் ஏன் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இதனைத் தொடர்ந்து செய்துவருகிறார் என்று நானும் கோபமடைந்திருக்கிறேன். என்னால் அவர் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்திருக்கிறது. இன்று ராஜீவ் காந்தி மறைந்த தினமாகும் இதனை இந்திய தேசியப் பயங்கரவாத எதிர்ப்புத் தினமாகக் கொண்டு வந்திருந்தது காங்கிரஸ். ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரும் அவர்களின் அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள். இதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் ஜெயலலிதா அவர்கள் இன்று இதனை மறுத்துவிட்டார்.

இன்று தலைமை செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனை அறிந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறான்.

மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட நாள், இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நாள், இவர்களின் நினைவு நாட்களில் இந்திய தேசியப் பயங்கரவாத எதிர்ப்புத் தினம் என்பது உருவாக்கப்படவில்லை, ஆனால் ஈழத்தில் இனவழிப்பிலும் போர்க்குற்றங்களிலும் ஈடுபட்ட ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாள் மட்டுமே இந்திய தேசியப் பயங்கரவாத எதிர்ப்புத் தினமாக உருவாக்கியிருக்கிறது தமிழர் விரோதக் காங்கிரஸ். உண்மையில் இத்தினம் என்பது தமிழர் எதிர்ப்புத் தினமாகும்.

6000-க்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களையும், நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களின் கற்பைச் சூறையாடி போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ஒரு கொடூர அரச பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட தினத்தை பயங்கரவாத எதிர்ப்புத் தினம் என்று கூறிவிடலாமா? ஜெயலலிதா பயங்கரவாத எதிரப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம் ஆனால் அது ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் எடுத்துக்கொள்வது தமிழர்களுக்கு எதிரானதாகும். இன்று உலகத்தமிழர்கள் ஜெயலலிதா அவர்களை மீண்டும் பாராட்ட வேண்டும்.

லிங்கேஸ்வரனின் முகநூலில் இருந்து.