nagaயேர்மனியின் தமிழ் கல்விக் கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு.இரா.நாகலிங்கம் ஆசிரியர் அவர்கள் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவர் இறைவனடி சேர்ந்தார்.

 

யேர்மனியில் தமிழை வளர்ப்பதற்கு யேர்மனி நாட்டில் 130 மேற்பட்ட தமிழாலயங்களை உருவாக்கி புலம்பெயர் தேசத்தில் தமிழ் மொழி, கலை, பண்பாட்டை வளர்த்தமைக்காக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் தாயகத்திற்க வரவழைக்கப்பட்டு அவரின் பணிக்காக மதிப்பளிக்கப்பட்டிருந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.

 

யேர்மனியில் தமிழ் மொழி கற்பித்தலுக்கு வித்திட்ட முதல்வர். தமிழாலயங்களின் கல்விப் பணியின் பொறுப்பாளராக உழைத்த உத்தமன். தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளராக வழிகாட்டிய உலகத் பெருந்தமிழர் திரு.நாகலிங்கம் அவர்களின் மறைவிற்கு பழ நெடுமாறன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை.

nedumaran-2