2008 மாவீரர்நாள் உரையில் தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் குறிப்பிடும்போது இனி வரும் காலங்களில் இளைஞர்கள் வேகமாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்து செல்வார்கள் என்று நான் நம்புகின்றேன் என தெரிவித்திருந்தார்.

தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்கு அமைய மண்ணின் விடுதலைக்காகவும் மக்களின் விடுதலைக்காகவும் தமிழீழத்திற்கான உரிமைப்போராட்டத்திற்கு இளைஞர்களால் பல்வேறு களங்கள் திறக்கப்பட்டு தமிழகத்திலும் புலத்திலும் நம்பிக்கையோடு முன்னநகர்த்தப்பட்டு வருகின்றது.

http://www.youtube.com/watch?v=j7_ms7LEcC4&feature=player_embedded

அதில் ஒன்றுதான் உதைபந்தாட்டக்களம், இந்த விளையாட்டுத்தான் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் மக்களால் அதிகமாக கவரப்பட்ட விளையாட்டாக விளங்கி வருகின்றது. இந்த களத்தைத்தான் புலத்து இளைஞர்கள் தமிழீழத்திற்கான புதிய போராட்ட களமாக திறந்துள்ளார்கள்.

அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான உலக உதைபந்தாட்டம் உலகப்பந்தில் நடைபெற்று வருவதை அறிந்து கொண்ட இளைஞர்கள் 2012 இல் தமிழீழத்திற்கான தேசிய உதைபந்தாட்ட அணியை ஆரம்பித்துள்ளார்கள். அதனை தொடர்ந்து குருடிஸ்தானில் நடைபெற்ற உலகக்கிண்ணத்திலும் லண்டனில் நடைபெற்ற உதைபந்தாட்டப்போட்டியிலும் பங்கெடுத்து தமிழீழத்திற்கும் மாவீரர்களின் உதிரத்தால் உருவாகிய தேசியக்கொடிக்கும் உரிய கௌரவத்தை கொடுத்து சர்வதேசப்பரப்பில் தமிழருக்கான தேசம் தமிழீழம் என்பதையும் தமிழர்கள் தனித்தேசிய இனம் என்பதை மீண்டும் மீண்டும் பதிவுசெய்து வருகின்றார்கள்

தமிழீழதேசத்தின் வரைபடத்தையும் தமிழீழ தேசத்தின் தேசிய விலங்கான சிறுத்தையையும் தேசிய உதைபந்தாட்ட விளையாட்டு அணியின் அடையாளமாக கொண்டு ஆடுகளத்தில் தமிழர்களின் பெருமதிப்புகுரியவர்களாக மிளிர்ந்து வரும் தமிழீழ அணியின் விளையாட்டு வீரர்கள் 01.06.2014 அன்று சுவீடனில் CONIFA என்ற அமைப்பால் நடாத்தப்படுகின்;ற அங்கீகரிக்கப்படாத தேசங்களுக்கான உலகக்கிண்ணபோட்டியில் பங்கெடுப்பதர்காக நோர்வேயில் தமிழ் இளையோர் அமைப்பின் ஆதரவோடு பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள்.

இந்த உலகக்கிண்ணத்தில் தமிழீழம் உட்ப்பட பன்னிரண்டு நாடுகள் பங்கெடுக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ அணியினர் இறுதிப்பயிற்சியை முடித்துவிட்டு 31.05.2014 அதிகாலை சுவீடன் நாட்டுக்கு புறப்பட தயார் ஆகியவேளை அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு தேசியக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறு சென்ற நேர்ர்வேவாழ் தமிழீழ உணர்வாளர்கள் தமிழீழ அணி வீரர்களை புன்னகை முகத்தோடு வாழ்துகள் கூறி வழியனுப்பிவைத்துள்ளனர்