parnal098765456789பரணகம அறிக்கையை அதன் நுண் அரசியல் தெரியாமல் பலர் காவத் தலைப்பட்டுள்ளார்கள். இது குறித்து விரிவாக எழுத வேண்டும்.

 

தற்போது சின்னதாக ஒரு விளக்கம் மட்டும்.

 

டெஸ்மன் டி சில்வா குறித்து பலரும் அறிந்திருக்கலாம்.

 

காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கான வெளிநாட்டு நிபுணர் குழுவின் தலைவராக சேர் டெஸ்மன் டி சில்வாவை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த 2014ஆம் ஆண்டு நியமித்திருந்தார்.

 

இந்த விசாரணைக் குழுவின் பணி 2014 ஓகஸ்ட் மாதம் போரின் இறுதிக்கட்டங்களில் அரசபடைகளால் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதா என்று விசாரிக்கும் வகையில் விரிவாக்கப்பட்டது.

 

இந்த டெஸ்மன் சில்வாவிடம் 2014 பெப்ரவரி மாதம் சிறிலங்கா அரசாங்கம் போரின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக அனைத்துலக சட்டங்களுக்கு அமைவாக எவ்வாறு அணுகலாம் என்பது குறித்து எழுத்து மூலமான சட்டஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தது.

 

அதன் பிரகாரம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தனது நிபுணத்துவ ஆலோசனைகளை எழுத்து மூலம் வழங்கியவர்.

 

இதனால் இவர் எப்படி காணாமல் போனோர் குறித்த நிபுணர் குழுவிற்கு ஆலோசனை வழங்கலாம் என்ற ஒரு பஞ்சாயத்து எற்கனவே நடந்து கொண்டிருககிறது. அதன் பிரகாரம் அவர் இதனால் பிரித்தானியாவில் இதற்காக ஒரு வழக்கையும் எதிர்கொண்டுள்ளார். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

 

இவர் இந்த விசாரணைகளின் முடிவாக ஒரு அறிக்கை ஒன்றை தயார் செய்து சிங்களத்திடம் கையளித்தார். அது இன்னும் பகிரங்கபப்டுத்தப்படவில்லையே ஒழிய அதன் உள்ளடக்கம் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

 

அதில் சிங்களப்படைகளின் கொலைகளை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் மூன்று லட்சம் மக்களை காக்கும் நோக்கில் சில ஆயிரம் மக்களை கொல்ல நேரிட்டது என்று முடித்திருந்தார். அது பாதுகாப்புபடைகளின் அறம் என்ற ரீதியில் நியாயத்தையும் கற்பித்திருந்தார்.

 

இங்கு குறிப்பான விடயம் என்னவெனில் கூட்டமைப்பு கூட இவரது நியமனத்தையும் இவரது அறிக்கையையும் நிராகரித்ததுதான். அத்தோடு பிரித்தானியாவில் நடக்கும் அவருக்கு எதிரான வழக்கிற்கு கூட்டமைப்பும் ஆதாரங்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

(எம்மிடம் எப்போதும் திட்டு வாங்கும் கூட்டமைப்பு தாம் செய்த பணிக்காக நாம் மனம் திறந்து பாராட்ட வேண்டிய விடயங்களில் இதுவும் ஒன்று)

 

தற்போது வெளியாகியிருக்கும் பரணகம அறிக்கை என்பது டெஸ்மன் டி சில்வாவின் அறிக்கையின்: மறுபிரதிதான் என்பதை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கே புரியும்.

 

ஒரு சில சிங்கள படையினரை மட்டும் குறிவைத்து குற்றம் சாட்டும் தொனியில் பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா போன்றவர்களின் விடயங்களை கூடுதலாக இணைத்து ஒரு போலி பிம்பத்தை உருவாக்கி ‘உளள்க விசாரணை’ மோசடிக்கு வலுச்சேர்க்கும் தந்திரம்தான் இந்த பரணகம அறிக்கையாகும்.
ஐநா மனித உரிமை தீர்மானத்தின் விளைவாக எழுந்த ‘கலப்பு நீதிமன்ற’ நெருக்கடியை சமாளிக்க டெஸ்மன் டி சில்வா குழுவினரிடம் போதிய ஆலோசனையை பெற்றே இந்த பரணகம அறிக்கை முழுமைப்படுதத்ப்பட்டுள்ளது.

 

அதுதான் படையினரின் குற்றங்களை ஏற்றுக்கொள்வதாகவும், அனைத்துலக நிபுணர்களின் ஆலோசனையை பெறும் விசாரணை பரிந்துரை என்று முலாம் பூசப்பட்டுள்ளது.

 

எனவே சிங்களத்தின் குறிப்பாக ரணிலின் இந்த தந்திரத்தை தமிழர் தரப்பு தெளிவாக புரிந்துகொண்டு காய் நகர்த்துவதனூடாகவே நீதிக்கான எமது பாதையை வகுக்க முடியும்.

 

ஈழம்ஈநியூஸ்.