ஒருத்தர் அதீத ஆர்வக்கோளாறின் காரணமாக பாலச்சந்திரனுக்கு வரிப்புலி போட்டு படம் எடுத்ததுதான் மிச்சம் இணையம் மற்றும் ஊடக உலகம் முழுக்க ஒரே அக்கப்போரா இருக்கிறது. படத்தை பார்க்காமல் எந்த கருத்தும் சொல்ல முடியாது என்பதால் அதற்குள் போக விரும்பவில்லை.

ஆனால் “எப்படா புலிஅடிப்பம்” என்று காத்திருக்கிற ஒரு கும்பல் இதை தமக்கு சாதகமாக்கி “ஏன் புலிகள் குழந்தைபோராளிகளாக இருக்கவில்லையா? குழந்தைகளை படையில் இணைக்கவில்லையா?” என்று இனஅழிப்புக்கு, அரச பயங்கரவாதத்திற்கு விளக்கு பிடிக்கக் கிளம்பியிருப்பதால் சிலதை எழுத வேண்டியிருக்கிறது.

புலிகளின் போராட்டம் என்பது பல காலகட்டங்களை கொண்டது. அதற்கு ஏற்றமாதிரி படையணி உருவாக்கங்களும் பயிற்சி முறைகளும் மாறிக்கொண்டிருந்தன.

Eelam-kids-1eelam-kids-2eelam-kids-3
18 வயதிற்கு குறைந்த யாரையும் படையணியில் இணைப்பதில்லை என்ற ஒரு இறுக்கமான கலகட்டம் தொடக்கம் பல்லுப்போன பாட்டி உட்பட அனைவருக்கும் ஆயுத பயிற்சி என்ற காலகட்டம் வரை ஈழப்போராட்டம் பல வடிவ மாறுதலுக்குட்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் எழுத புறப்பட்டால் இந்த ஜென்மத்தில் எழுதித் தீராது.

அதனால் நாம் சிறுவர் போராளிகள் என்ற தர்க்கத்தை மட்டும் ஆராய்வோம்.

முன்பு நடந்ததை விடுவோம். கீழே உள்ள படங்களில் உள்ள குழந்தைகள் மே 18 இற்குப் பிறகு பல்லாயிரம் கேள்விகளுடன் வீதியில் நிற்கிறார்கள்.அவர்களுக்கு பதில் தரவோ, தீர்வு தரவோ யாரும் தயாராக இல்லை.

முதல் படத்திலுள்ள குழந்தையின் மனவோட்டம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்..

“ஆமிக்காரங்களை இங்கேயிருந்து போகச்சொல்லிவிட்டு இந்த முட் கம்பிகளை யாராவது வெட்டிவிடுங்களேன்.. நாங்கள் வெளியே போய் விளையாடுவதற்கு…

இல்லையெனில் நிற்கிற ஆமிக்காரங்களை சுட்டுவிட்டு எனது அம்மாவையும் கூட்டிக்கொண்டு 10 வருடம் கழித்து நானே இதை உடைத்து வெளியே வருவேன்..

அப்போது நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். என்னை குழந்தைப்போராளி, பயங்கரவாதி என்று பெயர் சொல்லி அழைக்காமல் விட்டாலே போதும்.” என்பதுதானே!

இந்தக் குழந்தையிடம் இந்த உலகத்திடம் கேட்பதற்கு – சொல்வதற்கு வேறு என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள்..

இந்தக் குழந்தைகள் கேட்பது கிடைக்காவிட்டால் நாளை ஏனைய குழந்தைகளும்; ஒரு பத்து வருடம் கழித்து ஒன்றிணைந்து ஆயுதத்துடன்தானே திரிவார்கள்..

அப்போதும் குழந்தை போராளிகள் என்று வகுப்பு எடுக்கப்போகிறீர்களா?

தம்மை காக்காதது மட்டுமல்ல தாம் விரும்பிய வாழ்வையும் தராதுவிட்டு விட்டு தாம் போராடும் போது, “குழந்தைப்போராளிகள், பயங்கரவாதிகள்” என்று வகுப்பு எடுப்பது மட்டுமல்ல அவர்களது போராட்டத்தையும் காட்டிக் கொடுக்கும்போது அவர்கள் இப்படியானவர்களை கடத்திகொண்டுபோய் மண்டையை பிளந்து தலைகீழாக மின்கம்பத்தில் தொங்கவிட்டு “துரோகி” என்ற அட்டையையும் தொங்கவிடத்தானே செய்வார்கள்.

அப்போது சொந்த மக்களையே சுடுகிறார்கள் என்று ஒப்பாரி வைக்கப்போகிறீர்களா?

பத்து வருடங்களுக்கு முன்பு அவர்களின் வாழ்வை காக்க முடியாதவர்களுக்கு அவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்த மட்டும் எங்கிருந்து தகுதி வந்தது.?

அப்படியே அவர்கள் அழிவின் விளிம்பிலும் துயரத்தின் மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் போது குழந்தைப்போராளிகள், பயங்கரவாதிகள் என்று எந்த சொரணையுமின்றி இலக்கியம் படைக்கவும் பலக்லைக்கழக ஆய்வுகள் செய்யவும் ஓடித்திரிவார்கள்.

போங்கடா நீங்களும் உங்கட வியாக்கியானமும்…

முடிந்தால் போலி வியாக்கியானங்களைத் தூக்கி எறிந்துவிட்டு மக்கள் போராட்டத்தை விரிவு படுத்தி இந்த குழந்தைகளை இனஅழிப்பு அரசிடமிருந்து, அரச பயங்கரவாதத்திடமிருந்து காக்க ஒன்றிணையுங்கள்..

அல்லது பொத்தி கொண்டு இருங்கள்.. தொடர்ந்து இப்படித்தான் கதைத்து கொண்டிருக்கப் போகிறீர்கள் என்றால் இந்த குழந்தைப் போராளிகள் பத்து வருடம் கழித்து உங்களை “துரோகி” என்று எழுதப்பட்ட அட்டையுடன் மின்கம்பத்தில் தொங்கவிடுவார்கள். அதுவரை காத்திருங்கள்..

ஏனென்றால் அரச பயங்கரவாதத்தின் விளைவான வன்முறையில் பிறந்த புலிகளின் காலம் முடிந்திருக்கலாம்..
இனி இந்தக் குழந்தைகளின் காலம்.

எதிரிகளும் துரோகிகளும் மாறாதவரை வரலாறும் மாறப்போவதில்லை..

ஈழம்ஈநியூஸ்.