தமிழீழ பயணத்தின் நினைவுகளோடு ஈழத் தமிழ் சிறுமியின் “என் தாய் நாட்டில் நான் முகவரி அற்றவளா?” நூல் வெளியிட்டு விழா. 02.08.2014 அன்று மாலை 6 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடை பெறுகிறது.வைகோ வெளியிட காசி ஆனந்தன் பெற்று கொள்கிறார்.

book-norwaytamil
நோர்வே நாட்டை சேர்ந்த மாளவி சிவகணேசன் என்னும் ஈழத் தமிழ் பெண் எழுதிய புத்தகத்தை உணர்வாளர் வைகோ அவர்கள் வெளியிட்டு வைக்கிறார். சமாதான காலப் பகுதியில் சிறுமியாக இருந்தவேளை வன்னிப் பெருநிலப் பரப்புக்குச் சென்று, விடுதலைப் புலிகளோடு பழகிய தனது நினைவுகளையும். அங்கே தனி நாடு ஒன்றை அவர்கள் பராமரித்து வந்த விதங்களையும் மாளவி ஆங்கிலத்தில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். நொஸ்க் மற்றும் ஆங்கிலத்தில் வெளியான இந்த புத்தகத்தை தற்போது தமிழில் மொழிபெயர்த்து அவர் சென்னையில் வெளியிட உள்ளார். உணர்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஐயா அவர்கள் மற்றும் மதிமுக தலைவர், உணர்வாளர் அண்ணன் வைகோ அவர்களும் இணைந்து இப் புத்தகத்தை சென்னையில் வெளியிட உள்ளார்கள்.

தமிழகத்தில் உள்ள பல ஈழத் தமிழ் உணர்வாளர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.வரும் சனிக்கிழமை (02) இந்தப் புத்தகம் வெளியிடப்பட உள்ளது. டாக்டர் எழிலன், தமிழக மாணவர் அமைப்பினர், அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.