mulli-5641. இந்திய மக்கள் தொகையில் 8 கோடி தமிழர்கள் இருந்தும் ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலையை ஏன் தடுத்து நிறுத்தமுடியவில்லை?.

 

2. இந்திய மக்கள் தொகையில் 8 கோடி தமிழர்கள் செலுத்திய வரிப்பணத்தில் வாங்கப்பட்ட / தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் தானே ஈழத்தமிழர்களை படுகொலை செய்யப் பயன்பட்டது?.

 

3. இந்திய மக்கள் தொகையில் 8 கோடி தமிழர்கள் இருந்தும் இலங்கையுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை ஏன் மாற்றமுடியவில்லை?.

 

4. இந்திய மக்கள் தொகையில் 8 கோடி தமிழர்கள் இருந்தும் தன் சொந்த நிலத்தை(கச்சத்தீவை) சிங்களவனிடம் பறி கொடுத்துவிட்டு இந்திய பெருங்கடலில் தொழில் செய்ய முடியாதநிலைக்குக் காரணம் என்ன?

 

5. இந்தியாவில் எல்லா இடங்களிலும் விரட்டியடிக்கப்படும் ஆபத்தான தொழிற்சாலைகள், திட்டங்கள், அணுஉலைகள் தமிழகத்தில் மட்டும் நிறுவப்படக் காரணம் என்ன?

 

இந்தியா தமிழர்களை வஞ்சிக்கிறது. இந்தியாவில் தமிழர்கள் உரிமை அற்றவர்களாய் இருக்கிறார்கள்.நமது முன்னோர்கள் இந்தியாவுடன் இருக்க விரும்பினார்கள். இந்திய சுதந்திரத்திற்காக போராடினார்கள். ஆனால் கடந்த 68 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்ததால் தமிழர்கள் இழந்தது தான் அதிகம். மெழி, இன, மண் உரிமைகளை இழந்துவிட்டோம்.

 

இன்று கண்ணீர் சிந்துவதாலும் , புலம்புவதாலும், மன்றாடுவதாலும், ஆண்டுக் கொரு நினைவேந்தலாலும் மாற்றங்கள் நிகழப்போவது இல்லை.
நமது மண்னை மீட்க, இனத்தைக் காக்க நமது எதிரிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்.

 

தமிழ்த்தேச மக்கள் கட்சி

http://tdmk2013.blogspot.in/