ஐ.நாவின் முன்னாள் உதவி செயலாளர் இலங்கை இனப்படுகொலை தொடர்பில் விளக்குவதற்கு கனடா விஜயம்!

0
638

NCCT_TOWARD_JUSTICE_GEN-ADஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவி செயலாளர் நாயகம் டெனிஸ் ஹாலிடே கனடியத் தமிழர் தேசிய அவையின் அழைப்பை ஏற்று 11ம் திகதி அன்று கனடாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்று பாராளுமன்ற கேட்போர் கூடத்தில் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக ஆதாரங்களுடன் விளக்கவுள்ளார்.

வரும் 16ம் திகதி அன்று நடைபெறும் நீதிக்கான இராப்போசன விருந்தில் [sheraton parkway hotel 600 Hwy 7, Richmond Hill, Ontario L4B 4R8] பங்குபற்றி பொதுமக்களுக்கு இனப்படுகொலை தொடர்பாக ஆதாரங்களுடன் விளக்கவுள்ளார்.

எதிர்வரும் 17ம் திகதி வரை கனடாவில் தங்கியிருக்கும் டெனிஸ் ஹாலிடே கனடியத் தமிழர் தேசிய அவையின் ஏற்ப்பாட்டில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சித் தலைவர்களையும் உயர்மட்ட அதிகாரிகளையும் மற்றும் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.