சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா நிபுணர்குழுவின் தலைவராக, நியுசிலாந்தைச் சேர்ந்த டேம் சில்வியா கார்ட்ரைட் என்ற முன்னாள் பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கிலவார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

dam-siviya
70 வயதான டேம் சில்வியா கார்ட்ரைட் அம்மையார், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின், இரண்டு நீதிபதிகளில் ஒருவராகப் பணியாற்றியவராவார்.

இவரது தலைமையிலான ஐ.நா நிபுணர்குழுவின் விசாரணை வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளது.

தனது பெயரை வெளியிட விரும்பாத முன்னாள் ஐ.நா அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

டேம் சில்வியா கார்ட்ரைட் அம்மையார், நியுசிலாந்தின் முதல் பெண் மாவட்ட நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்.

இவர் நீதிபதியாக இருந்த போது, மிகச் சிறப்பாகப் பணியாற்றியதற்காக பல கௌரவ விருதுகளையும் பெற்றவர்.

பின்னர், 2001ம் ஆண்டில் இருந்து2006ம் ஆண்டு வரை இவர் நியுசிலாந்தின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் களைவதற்கான குழுவிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

கார்ட்ரைட் அம்மையாரை சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா நிபுணர் குழுவின் தலைவராக ஐ.நா அடுத்தவாரம் அதிகாரபூர்வமாக நியமிக்கவுள்ளது.

இந்த விசாரணைகளுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டதும், சிறிலங்காவில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அங்கு செல்வதற்கு நுழைவிசைவுக்கு விண்ணப்பிக்கும் என்றும் முன்னாள் ஐ,நா அதிகாரி தெரிவித்ததாக

இதனிடையே, போர்க்குற்றங்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, எந்தவொரு அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத் தயார் என்று நோர்வேயின் முன்னாள் சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயமும், சாட்சியமளிக்க கேட்டால், அதனை வழங்கத் தயாராகவே இருக்கிறேன்.

eric-solh
2009 மே 17ம் நாள், விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளான, புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோரிடமிருந்து தாம் சரணடைய வேண்டும் என்று நோர்வேஜியர்களுக்கும், ஏனையோருக்கும் தொலைபேசி அழைப்புகள் வந்தன. எதையும் செய்வதற்கு மிகவும் தாமதமாகி விட்டதென்று நாம் அவர்களுக்கு கூறினோம்.எனினும், வெள்ளைக்கொடியை உயர்த்திக் கொண்டு செல்லும்படி அவர்களுக்கு ஆலோசனை வழங்கினோம்.மே 18ம் நாள் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக எமக்குத் தகவல் கிடைத்தது.

இலங்கையில் இடம்பெற்ற போர் மிகப்பெரிய விலை கொடுத்தே வெற்றி கொள்ளப்பட்டது.இலங்கையை விசாரிக்கும் எந்தவொரு அனைத்துலக அங்கீகாரம் பெற்ற தீர்ப்பாயத்தின் முன்பாகவும் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறேன்.இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஐ.நாவினாலும், அமெரிக்காவினாலும் வேறு பல இடங்களில் இருந்தும் என்னிடம் கேட்டார்கள். போரில் பெருமளவு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அது மிகப் பெரிய விலை.

இராணுவ நடவடிக்கையில்லாமல், அமைதிப் பேச்சுக்களின் மூலம் போருக்கு தீர்வு கண்டிருக்க முடியும்.2015 க்கு முன் வெளிவரவுள்ள எனது நூலில் நான் பொறுப்பேற்றதில் இருந்து மேற்கொள்ளப்பட்ட அனைத்து விடயங்களையும், விடுதலைப் புலிகளினதும், மிக முக்கியமாக இலங்கை அரசியல்வாதிகளினதும் நடவடிக்கைகள் குறித்த விபரங்களையும் வெளியிடவுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.