ஒடுக்கப்படும் மக்கள் ஒருவர் வலியை ஒருவர் புரிந்துகொள்வர்

0
431

“ஒடுக்கப்படும் மக்கள் ஒருவர் வலியை ஒருவர் புரிந்துகொள்வர்!
ஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேருவர்!
ஒடுக்கப்படும் மக்கள் ஒருவருக்காக ஒருவர் போராடுவர்!”

நேற்று ஜெனிவாவில் ஜ.நா மன்றத்தின் முன் ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும் திபெத்திய மக்கள் போராடியுள்ளார்கள்!

புத்தரை வணங்கும் அவர்கள் புத்தரின் பெயரால் சத்தமின்றி நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து குரல் கொடுத்துள்ளார்கள் என்பதை சிங்கள பௌத்த இனவெறியர்கள் புரிந்து கொள்ளவேண்டும்!

நன்றி அந்த நல்மாந்தரின் மாந்த நேயத்திற்கு!

அரசுகளின் கால்பிடிக்கும் அரசியலில் இனிப் பயன் இல்லை; உலக மக்களை வென்றெடுக்கும் போராட்ட வடிவமே எமக்கு நீதியையும் விடுதலையையும் பெற்றுத் தரும் என்பதை இனியேனும் எம் தமிழினம் நன்கு உணர வேண்டும்!

ஏற்கனவே காஸ்மீர் , சீக்கிய மற்றும் குர்திஸ் போராடும் மக்கள் தமது ஆதரவை ஈழத் தமிழர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இன்று கறுப்பின மக்களின் போராட்டத்தில் கனடா வாழ் தமிழ் இளையவர்கள் அவர்களுக்குக் குரல் கொடுக்க தம்மை இணைத்துள்ளனர்!

போராடும் உலக மக்களின் மனங்களை வென்றெடுப்பதன் மூலமே எந்த விடுதலைப் போராட்டமும் வெற்றி பெற முடியுமேயன்றி வல்லரசுகளின் கால் பிடித்தல்ல என்பதை இனியாவது தமிழ் மக்கள் உணர்ந்து இயங்கினால் எமக்காக உலக மக்களையே போராட வைக்க முடியும்!

நன்றி: சிவந்தினி பிரபாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here