ஒன்பதாவது நாளாக தொடரும் போரட்டம் முடிவு இல்லையேல் நிறுத்தப்படாது மக்கள் திட்டவட்டமாக அறிவிப்பு

0
603

முல்லை மாவட்டம் கேப்பாப்பிளவு பகுதியில் தொடரும் பொதுமக்களின் உரிமை போராட்டம் ஆறாவது நாளாகவும் இன்று தொடர்கிறது. மேலும் இப்போராட்டம் பற்றி தெரியவருவதாவது கேப்பாப்பிளவு பிலக்குடியிருப்பை சேர்ந்த 84குடும்பங்களை சேர்ந்த உறவுகள் இலங்கை விமானப்படையால் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள தமது பாரம்பரிய நிலத்தை விடுவித்து தமது தமது நிலத்தை தமக்கே தரும்படி தொடர்ச்சியான போராட்டம் ஒன்றை வீதியில் இறங்கி போராடிவருகின்றனர். இவர்களுக்கு இந்த இடத்தில் குடி நீர் இல்லை என்பன போன்ற பல இன்னல்களுக்கு மத்தியில் இந்த போரட்டம் நடை பெறுகிறது.