missing-battiதமிழர்களின் தேசிய திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடும் அனைத்து தமிழ் மக்களுக்கும் எமது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்ளுகின்றோம். இத் தைத்திருநாளில் எமது மக்களுக்கு விடுதலையையும், நீதியையும் பெற்றுத்தரவேண்டும் என்றும் மனதில் நினைத்துக்கொண்டு எமது பணியை தொடருவோம்.

 

அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எமது மக்கள் மீளவும் தமது சொந்த நிலங்களுக்கு சென்று அடுத்த ஆண்டு தைப்பொங்கலாவது சொந்த நிலத்தில் நடைபெறச் செய்யவேண்டும் என்பதை நினைத்து தமிழ்மக்களின் தலைவர்கள் போராட வேண்டும்.

 

தமது அரசியல் இருப்புக்காக தமிழ் மக்களின் விடுதலை உணர்வையும், இதுவரை செய்த தியாகத்தினையும் கொச்சைப்படுத்தாது, எமது சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுக்கவேண்டும்.

 

பல ஆண்டாண்டு காலமாக பல சிங்களத் தலைவர்களால் பல வழிகளில் ஏமாற்றுப்பட்ட தமிழினம் மீண்டும் ஏமாந்து போய்விடாமலும், சர்வதேசத்தின் உதவியுடன், கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வேண்டியும், சிங்கள அரசின் நயவஞ்சக வலையில் விழுந்து விடாமல் தமிழ் மக்களுக்கான விடுதலைக்கு தமிழ்தலைவர்கள் உழைக்கவேண்டும்.

 

இத் தைத்திருநாளில் உலகத்தின் பல பாகங்களிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் தமிழர் விடுதலை மட்டுமே தீர்வு என்ற சிந்தனையில் செயற்பட்டு சிங்களத்தினை குற்றவாளிக் கூட்டில் ஏற்றி சர்வதேசத்தின் அனுசரணையுடன் தனிநாடாக பிரிந்து போவதற்கன பொவாக்கெடுப்பு நடைபெறுவதற்கு அந்தந்த நாடுகள் மூலம் முயற்சி எடுப்போம் என்று இந்நாளில் உறுதி எடுத்து கொள்வோமாக!

 

நன்றி :

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு