batty_missingprotest_002இன்று யாழ் நகரில் காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறு கண்ணீர் மல்க மக்கள் போராட்டம் நடத்திகொண்டு இருக்கிறார்கள்..

 

உள்ளக விசாரணை, தென்னாபிரிக்க முன் மாதிரியை கொண்ட தீர்வு பொறிமுறை என்று இனஅழிப்பு அரசும் அதற்கு விளக்கு பிடிக்கும் ஐநா தொடக்கம் இந்தியா வரையான இனஅழிப்பு பங்காளிகளும் ஒத்து ஊதிக்கொண்டிருக்கும் சமகாலத்தில் புதிய இனஅழிப்பு அரசிடம் மக்கள் தமது உறவுகளை விடுவிக்குமாறு கோரிக்கை வைக்கிறார்கள்..

 

உண்மையிலேயே கொடுமையான காட்சி இது..

 

அதிகம் தேவையிலை, 4 நாட்களுக்கு முன்பு யாழ் நகரில் வைத்து ஒரு மாணவியும் 2 நாட்களுக்கு முன்பு வல்வெட்டித்துறையில் வைத்து ஒரு குடும்பஸ்தரையும் வெள்ளைவானில் கடத்தியிருக்கிறது இனஅழிப்பு அரசின் புலனாய்வுத்துறை..

 

ஆட்சி மாறியது.. ஆனால் காட்சி மாறியதா?

 

புதிதாக காணாமல் போனவர்களின் பட்டியல் பெருத்துக்கோண்டேதான் போகிறது…

 

தீர்வை புதிய அரசும் தரப்போவதில்லை.. சிங்கள அரசியல் யாப்புக்குட்பட்ட தேர்தல்களும் தரப்போவதில்லை.. மேற்குலக பிராந்திய அரசுகளும் தரப்போவதில்லை.. அவற்றின் கைப்பாவையான ஐநாவும் தரப்போவதில்லை..

 

மக்களுக்கு உண்மையை சொல்லி அவர்களை ஒன்றிணைத்து ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை நடத்துவதனூடாக ஒரு பேரம் பேசும் வல்லமையை வளர்த்து மேற்குலக, பிராந்திய, சிங்கள சக்திகளை அடிபணிய செயவ்தன் மூலம்தான் எமது விடுதலையை – சுதந்திர வாழ்வை மீட்டெடுக்க முடியும் என்ற உண்மையை எப்போது தமிழ் அரசியல்வாதிகளும் மேட்டுக்குடி – கனவான் அரசியல் செய்யும் மெத்த படித்த மேதாவிகளும் சொல்லப்போகிறார்கள்?

 

அல்லது உண்மையை சொல்லிவிட்டு மக்கள் போராட்டத்திற்கு வழி விட்டு எப்போது ஒதுங்கி நிற்கப்போகிறார்கள்?

 

ஈழம்ஈநியூஸ்.