சிறீலங்கா அரசும் அதன் பெரும்பான்மை மக்களும் எப்போதும் தம்மை ஒரு பேரினவாத பௌத்தர்களாகவே முன்னிறுத்துவதில் அதிக அக்கறை காண்பிப்பதுண்டு.

mahi-thiruppathy
தமது சிங்கள பௌத்த மதத்தை முன்னிறுத்துவதற்கும், அதனை சிறீலங்கா முழுவதும் பரப்புவதற்கும் அவர்கள் என்றும் பின்னிற்பதில்லை. சிறீலங்காவை முழுமையான ஒரு பௌத்த நாடாக மாற்றவேண்டும் என்பதற்காகவே இலட்டத்திற்கு மேற்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

பல ஆயிரம் இந்து ஆலயங்கள் குண்டுவீசித் தகர்க்கப்பட்டன. பிள்ளையர் சிலையின் கழுத்தில் வாகனத்தின் ரயரை போட்டு தீயிட்டுக் கொழுத்தியும் பௌத்த போரினவாதிகள் ஆனந்தக்கூத்தாடினார்கள்.

யார் அதிகளவில் தமிழ் மக்களை கொன்றது அல்லது யார் உண்மையான பௌத்தனாக சிங்கள பேரினவாதத்தை கட்டிக்காத்தது என்பதை தான் இந்த இனவாதிகள் தமது தேர்தல் பரப்புரையின் போதும் முன்வைப்பதுன்டு.

ஆனால் இன்று தனதும் தனது குடும்பத்தினதும் உயிரைக்காப்பதற்காக, தனது அரசதலைவர் பதவியை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்தியாவின் திருப்பதி பெருமாளின் பாதங்களில் பிச்சை வேண்டுகிறார் சிங்களத்தின் பேரினவாதத் தலைவர் மகிந்த ராஜபக்சா.

எந்த ஆலயங்களை குண்டுவீசித் தகர்த்தனரோ, எந்த தெய்வங்களின் கழுத்தில் ரயரைப் போட்டு எரித்தனரோ அதே கடவுளின் முன்னல் தனது பதவிக்காக கையேந்தி நிற்கின்றார் ஒரு தூய பௌத்தன்.

அதாவது எனது பதவிக்காக எதனை வேண்டுமானாலும் நான் செய்வேன், நான் ஒரு தூய பௌத்தனாக வேடமிட்டது உங்களின் வாக்குக்காகவே என உணர்த்தி, தனக்கு பின்னால் அணிவகுத்து நிற்கும் சிங்கள பேரினவாதிகளில் முகத்தில் கரியைப்பூசியுள்ளார் சிறீலங்கா அரச தலைவர்.

சிங்கள பேரினவாதிகளே ஒரு தரம் உற்றுப்பாருங்கள் உங்களின் பேரினவாதப் பௌத்தன் தற்போது பெருமாளின் கால்களில் தவம்கிடக்கின்றான். நீங்கள் கையேந்தி நிற்கும் புத்தரில் அவருக்கு நம்பிக்கையில்லையாம்.

இதன் மூலம் அவர் உங்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி ஒன்று தான் “நான் என்னையும் எனது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள எந்த வேடமும் தரிப்பேன்” என்பது தான்.

சிங்கள மக்களின் பேரினவாதச் சிங்களக் கனவை அதன் தலைவரே கலைத்துவிட்டார். எனவே வடக்கிலும் கிழக்கிலும் புத்தரின் சிலைகளை நாட்டுவதற்கு பதிலாக பெருமாளுக்கு சிலை வையுங்கள் உங்கள் தலைவருக்கு வணங்குவதற்கு வசதியாக இருக்கும்.

ஈழம்ஈநியூஸ்.