இன அழிப்பிலிருந்து தப்பி வந்தவர்களை தடுப்பு முகாமில் தடுத்து வைத்து மீளவும் இனஅழிப்பு தேசத்திற்கு திருப்பி அனுப்பும் அவுஸ்திரேலிய அரசின் போக்கை கண்டித்து லியோ சீமான்பிள்ளை தன்னைத்தானே எரித்து மாண்டிருக்கிறார்..

இன அழிப்பிற்கு துணை நின்றது மட்டுமல்ல அதிலிருந்து தப்பி வந்தவர்களை இப்படி பந்தாடும் கேடு கெட்ட உலகத்தை என்ன சொல்லித் திட்டுவது?

Leo-seemanpillai
அவர் தன்னை எரித்து கொண்டது கவலையளித்தாலும், இந்த இனத்தின் ஓயாத போராட்டத்தின் குறியீடாக லியோ மாறியிருக்கிறார்..

எந்த ஆர்ப்பாட்டங்களும், மனித உரிமையாளர்களின் போராட்டங்களும் அவுஸ்திரேலிய அரசை அசைக்கவில்லை.. இந்த நிலையில்தான் தான் அழிந்து போனாலும் பரவாயில்லை, எஞ்சியுள்ளவர்களாவது தனது சாவையடுத்து தப்பிக்கட்டும் என்று தன்னை அழிக்க துணிந்துள்ளார் லியோ..

பெரும் இன அழிப்புக்கு பிறகும் இந்த இனத்தின் நம்பிக்கையும் ஓயாத போராட்டங்களும் இத்தகைய தியாகங்களிலிருந்தே கருக்கொள்கின்றன..

தம்மை அழித்து இந்த இனத்தை காத்த மாவீரர்களின் தொடர்ச்சி இது..

தனது உடலுறுப்புக்களை தானமாக எழுதி வைத்திருந்த லியோ சீமான்பிள்ளையின் விருப்புக்கு அமைவாக அவரது உடலுறுப்புக்கள் அகற்றபட்டுள்ளன..

துரோகம், கழுத்தறுப்பு, தமக்காக போராடியவர்கள் மீது வசைபாடுதல், தமது நலன்களுக்காக இனத்தை காட்டிக்கொடுத்தல் என்பதற்கும் இந்த இனத்திற்குள்ளிருந்துதான் பலர் குறியீடாகிறார்கள்..

ஆனால் இவை அனைத்தையும் தாண்டி இந்த இனத்தை நம்பிக்கையுடன் நடைபோட வைப்பது “தம்மை அழித்தாவது இனத்தை காக்க வேண்டும்” என்ற இத்தகைய தியாகங்கள்தான்…

வெள்ளை வேட்டி கட்டிய அரசியல்வாதிகள் மீதோ, கோட்சூட் போட்ட படித்த மேதாவிகளின் மீதோ எந்த நம்பிக்கையும் இந்த இனத்திற்கு இல்லை… இந்த இனம் இன்னும் “மாவீரர்”களையே நம்புகிறது.

மே 18 இற்கு பிறகும் “தம்மை அழித்தாவது இனத்தை காக்க வேண்டும்” என்ற உயரிய உள்ளம் கொண்டவர்களை வரலாறு உருவாக்கிகொண்டேயிருக்கிறது..

அவர்களே இந்த இனத்திற்கு கவசம்.. வழிகாட்டி..

அவர்களின் தியாகங்களே இந்த இனத்திற்கு விடுதலையை பெற்றுத்தரும்..

ஈழம்ஈநியூஸ்.