ஓர் தேசிய இனத்திற்கான சரியான உட்க்கூறுகளுடனும் புற ஒழுங்குடனும் தமிழினம் தன்னை அரசியல் படுத்தவேண்டும்

0
720

கட்டாய ஆட்சேர்ப்பு பூனைக்கு புலி என பெயர் வைக்கும். ஓர் தந்திர அரசியல். அவ்வளவே. ஆனால் அதே வேளையில் உலகளாவிய தேசிய இனங்களின் விடுதலைக்கான கோட்பாட்டை முன் வைக்கும் ஓர் இனமாக நாம் இதனை விடுதலைக் கோட்ப்பாட்டிர்க்குள் அர்த்தப்படுத்தும் விதமாக விளங்கப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம். இதனை தந்திர அரசியலாக இரு தரப்பும் பேதை அரசியலாக ஓர் தரப்பும் அணுக வாய்ப்புள்ளது.

 

இதனை தந்திர அரசியலாக இவ்வுலகத்தாரும் எமது நேரடி எதிரியும் எம்மீது தொடுக்கலாம். பேதை அரசியாலாக எங்கள் மக்கள் எமது இறைமையை அணுகலாம். ஆகா நாம் முதல் இருத் தரப்பினருக்கும் ஓர் எதிர் அரசியலையும், மூன்றாவதான எமது மக்களுக்கு ஓர் விளக்க அரசியலையும் நாம் செய்தாக வேண்டும்.

 
தேசிய இறைமை.

 
எமது தேசிய இறைமை கட்டாய ஆட்சேர்ப்பு என்ற சொற்பதத்தை, எமது இறைமையின் போக்கிலேயே அணுகுகிறது. அந்த வகையில் நாம் கட்டாய ஆட்சேர்ப்பு என்ற சொர்ப்பதத்தையே நிராகரிக்கின்றோம். எதிரி தமது படைவலுவை ஆயுத மற்றும் தொழில்நுட்ப ரீதியாக விரிவாக்கம் செய்துகொள்ளும் போது, அவனுக்கு நிகராகவோ, அல்லது அவனைவிட அதிகமாகவோ நாம் எம்மை விரிவாக்கமும் மேம்பாடும் செய்துகொள்கிறோம். இயலாத பட்சத்தில் வள நிலை அடிப்படையில் நிகர் செய்ய முனைகின்றோம்.

 

இது எமது தேசத்தின், அதன் இறைமையின் பாதுகாப்பிற்கான, இருப்பிற்கான ஓர் சவால். ஓர் நெருக்கடி நிலை. அவ்வளவே. இதற்குப் பெயர் கட்டாய ராணுவ விரிவாக்கம் அன்று. அப்படியே எதிரி தனது ஆட்பலத்தை விரிவாக்கம் செய்துகொள்ளும் பொழுது நாமும் எமது ஆட்பலத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டிய ஓர் சவால் எம்மை சந்திக்கிறது. அதன் அடிப்படையிலையே நாமும் ஆளணிகளை அதிகப்படுத்திக்கொள்கிறோம். இந்நிலைக்கு பெயர் இராணுவ ஆளணி சமநிலையே தவிர, கட்டாய ஆட்சேர்ப்பு அன்று.

 
மேலும் ஓர் அரசப்பயங்கவாதமானது, மொழி, இனஇ கலாச்சார அடிப்படையில் வேறுபட்ட ஓர் மக்கள் கூட்டத்தை அழித்தொழிக்க முனையும்பொழுது, அம்மக்கள் கூட்டம் அவ்வரசப்பயங்கரவாதத்தை எதிர்க்க அம்மக்கள் கூட்டத்தின் ஆளுமையாளர்களால், பிரதிநிதிகளால் அணிதிரட்டப்படுவது, என்பது அம்மக்கள் கூட்டத்தின் இருப்பிற்க்கான, பாதுகாப்பிற்க்கான அவசியத்தேவை. இதனை எந்தவகையிலும் கட்டாய ஆட்ச்சேர்ப்பு என வரையறை செய்ய முடியாது. இதனை அனிச்சை செயல் அடிப்படியில் ஓர் பாதுகாப்பு யுக்தியாகவே நாம் நோக்க வேண்டும் அல்லது ஓர் எதிர் யுக்தியாகவே நாம் நோக்க வேண்டும். இனவாத எதிர்ப்புக்கும், இன அழிப்புக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அந்தவகையில் இனவாத எதிர்ப்பு நிலையில் கூட நாம் இதனை குற்றம்சுமத்த இயலாது.

 

அப்படியிருக்கையில் அழித்தொழிக்கும் நோக்கோடு ஓர் அரசபடை மக்களை நோக்கி நகருகையில், அந்த அனிச்சையான செயலானது, பாதுகாப்பு, மற்றும் இருப்பு கருதி இதனை ஓர் எதிர் யுக்தியாக வரையறுக்கிறோம். இவை இப்படியிருக்க சனநாயகப்போர்வையில் பிறிதொரு தேசிய இன மக்களை அழித்தொழிக்கும் நோக்கோடு அசுர பலத்தோடு, அரசப்பயங்கரவாதம் எம்மை நோக்கி நகருகையில், அவ்வரசபயங்கரவாதை எதிர்த்து எமது இறைமைக்கு அப்பால் அதன் எல்லையிலையே அவ்வரசபயங்கரவாதத்தை முறியடிக்க, அல்லது தடுத்து நிறுத்த எம்மை கட்டாயம் அணிதிரட்டவேண்டிய கடமை எமது இறைமைக்கு உண்டு.

 

ஒருவேளை எமது தேசிய இறைமை இதை செய்யத்தவரியிருந்தால், தேசியத்தை நம்பி அதன் பின் அணிவகுத்த எமது மக்களுக்கு அது செய்யும் ஓர் அநீதி ஆகும். அதுமட்டுமின்றி அது ஓர் தேசிய இறைமைக்கான தகுதியையும் இழக்கிறது. ஆகையால் கட்டாய ஆட்ச்சேர்ப்பு என்ற சொல்லாடலையே தேசிய இறைமை நிராகரிக்கிறது.

 
கட்டாய ஆட்ச்சேர்ப்பு பற்றிய தமிழ் தேசிய இறைமையின் எதிர் அரசியல்.

 
தேசிய இறைமைகளுக்கான வரையறைக்கிணங்க, தமிழ் தேசிய இறைமை கட்டாய ஆட்சேர்ப்பு என்ற தந்திர அரசியலை கண்டு நகைக்கிறது. மேலும் எமது போர் மரபிற்கு முன்னால் இத்தந்திர அரசியலை நாம் இலுக்காக கருதுகிறோம். இத்தகைய கீழான அரசியலுக்கு நாம் பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை என்றாலும். நாம் இங்கு சில விடையங்களை இவ்வுலகத்தாருக்கும், எமது எதிரிக்கும் தெளிவு படுத்தி விட்டு நகர்கிறோம். வழியது வாழும் என்கிற இயற்க்கையின் விதிப்படி, ஓர் பெருத்த தேசிய இனமாக எம்மை நாம் வலிமையுடன் கட்டமைத்துக்கொள்ளவேண்டியது ஓர் அவசிய தேவை. அந்தவகையில் எமது இறைமை, எம்மை வலிமை மிக்கவர்களாக அணி திரட்டி தயார் செய்வதென்பது, எமது இறைமைக்குட்பட்ட விவகாரம். அதனை கேள்வி கேட்க எவருக்கும் உரிமை கிடையாது.

 

அதுமட்டுமின்றி எமது இறைமைக்குள் அத்துமீறி மூக்கை உள் நுழைக்கும் ஓர் அநாகரீக செயலாகவும், எம்மை சினமூட்டுவதாகவும் இது அமைகிறது. எதிரியாட்களை எமது களமுனையில் அவர்களின் விருப்பமின்றி நிறுத்திவைத்தால் தான் அது கட்டாய ஆட்ச்சேர்ப்பாக கருதப்படும். மாறாக எம்மை நாம் தற்காத்துக்கொள்ள எமது இறைமை எம்மை அணிதிரட்டுவது என்பது அதன் தார்மீக கடமை. உதாரணம் போருக்கு பின் தமிழ் யுவதிகளை சிறி லங்கா இராணுவம் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக இராணுவத்தில் இணைத்து பயிற்சி என்ற பெயரில் சித்தரவதைகளை செய்ததை இவ்வுலகும், எதிரியும் எப்படி வரையறை கொடுப்பீர்கள். தமிழர் இறைமையையும் அதன் உட்விவகாரத்தையும் நகைக்கும் எது ஒன்றையும் நாம் அனுமதிக்க முடியாது, அது மட்டுமின்றி குற்றவாளிகளான இவர்கள் எம்மை கேள்விகேட்க்கும் அருகதையற்றவர்கள்.

 
பேதை அரசியலுக்கான விளக்க அரசியல்.

 
தமிழீழ மற்றும் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு மரபு ரீதியான குறைகளும், எதார்த்த தவறுகளும் உண்டு தான். இது மறுப்பதற்கில்லை. இப்படி எமது இறைமை விட்ட சில அரசியல் தவறுகள் தான், பேதை அரசியலாக வடிவம் கொண்டு, இற்று எம்மையே அது எதிர்க்கவும், சில வேளைகளில் துரோகம் செய்யவும் துணிந்து விடுகிறது. இதற்க்கு தமிழ் மக்களை எந்த வகையிலும், குறைகூற முடியாது. தாய்மைத் தன்மையோடு முழுப்பழியையும், பொறுப்பையும், தமிழர் தேசிய இறைமையே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

 

இப்பேதை அரசியலை தவிர்க்க இனிமேலாவது, எம்மை எமது இறைமை ஓர் தேசிய இனத்திற்கான சரியான உட்க்கூறுகளுடனும், புற ஒழுங்குடனும் எம்மை அரசியல் படுத்தவேண்டும். எமக்கான இனக்கட்டமைப்பு நேர்த்தி செய்யப்படவேண்டும், எமக்கான வழிபாடும், அதன் பலனான எமது வரலாறும், அரசியல் மயப்படவேண்டும். தமிழர்கள் தம்மை தமிழராக உணராது, மக்களாகவும், பிற இறைமையின் கீழ் வாழும்இ குடிவாசிகலாகவும், உணருவதாலையே, இப்பேதை அரசியல் விளைச்சல் கொள்கிறது. யூதப்போராளிகளால் உச்சரிக்கப்பட்ட ஓர் அரசியல் எதார்த்த வரிகளை இங்கு எமக்காக நினைவு கூறுகிறேன். செருசேல நகுருக்குள் யார் வேண்டுமானாலும் உள் நுழையலாம், யூத இனத்திற்குள் யாராலும் உள்நுழைய முடியாது. என செருசேலத்தை முற்றாக கைவிட்ட நிலையில் அவர்கள் கூறியது. இதன் முக்கியத்துவத்தை நாம் அரசியற்ப்பாடமாகக் கொள்ளவேண்டும்.

 

நன்றி: அஸ்வின்