கனடா வழியில் இந்தியாவும் இலங்கை காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்

0
412

common-CHOGM-300x225கனடாவைப் போல இந்தியாவும் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேணடும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர். சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் இந்த உலகமே அறிந்தது. அப்பாவி மக்களை மேலும் தம் சொந்த நாட்டு மக்களை போர் என்ற பெயரில் லட்சக்கணக்கில் கொன்று குவித்தது ராஜபக்சே அரசு.

இதை உணர்ந்த அனைத்து நாடுகளும் இலங்கையைக் கண்டித்து வரும் நிலையில் இந்தியா மட்டும் உறவை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார். தமிழர்கள் மீது அக்கறை கொண்டு இந்தியா காமன்வெல்த் மாநாட்டு புறக்கணிப்பு முடிவை எடுப்பது, அங்கே வாழும் தமிழர்கள் மீது மேலும் கவனத்தையும், பாதுகாப்பையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

எனவே, மத்திய அரசு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க முன்வர வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது, அதில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது,தோழர்.தியாகுவை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை கண்டித்தும் நிற வெறிக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவை புறக்கணித்ததைப் போல இனப் படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் நாடுகளில் இருந்து நீக்கக்கோரியும் நந்தனம் கலைக் கல்லூரியில் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு சார்பாக 07/10/13 அன்று மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காமன்வெல்த் மாநாட்டை நடத்த விடாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சியினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு நடத்திய பொதுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன் நல்லக்கண்ணு ஆகியோர் வலியுறுத்தியுள்ளார்கள்.

காமன்வெல்த் மாநாட்டை நடத்த விடாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி யினரும் ஒன் றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் பழ.நெடு மாறன் நல்லக்கண்ணு வலியுறுத்தி யுள்ளனர்.

பொதுக்கூட்டம்

இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என வலியுறுத்தி விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் தமிழீழ விடு தலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிரபு தலைமை தாங்கினார். இதில் தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடு மாறன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு ஆகியோர் கலந்துகொண்டு சிறப் புரையாற்றினர்.

கூட்டத்தில் பழ.நெடு மாறன் பேசியதாவது:-

மாணவர்கள் போராட்டம்

2009-ம் ஆண்டு ஈழத்தில் ஏற்பட்ட பிரச்சினையை கண்டித்து தமிழகத்தில் பெரிய அளவில் மாணவர் போராட்டம் நடைபெற்றது. அப்போது யாரும் மாணவர் களை தூண்டிவிடவில்லை. மாணவர்கள் எந்த நாட்டில் எழுச்சி பெறுகிறார்களோ அந்த நாடு எழுச்சி பெறும். காமன்வெல்த் அமைப்பு எதற்காக தொடங்கப் பட்டது? அதனை நினைத்து இலங்கையில் நடைபெற்ற அத்துமீறல்களை இதுவரை யாரும் கண்டிக்கவில்லை.

தற்போது இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளதால் அங்கு வேண்டுமென்றே மாகாண தேர்தலை நடத்தியுள்ளனர். மாணவர்களின் தொடர் போராட்டத்தினால் பல்வேறு நாடுகள் வீழ்ந்துள்ளது. அதற்கு உதாரணம் எகிப்து சிரியா போன்ற நாடுகளை கூறலாம். மாணவர்களின் போராட்டம் தமிழ்நாட்டில் தொடங்கி விட்டது. ஈழத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அம்பு எய்த தொடங்கி விட்டார்கள். இதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

அனைத்துக்கட்சியினரும் குரல் கொடுக்க தமிழகத்தில் இருக்கிற அரசியல் கட்சிகளுக்கிடையே ஒற்றுமை குறைவு. காமன்வெல்த் மாநாட்டை நடத்த விடாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சியினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப் பினர் நல்லக்கண்ணு பேசிய தாவது:-

மாணவர்களின் உணர் வுகளை மதிக்கின்றேன். 25 முதல் 30 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான மக் களை ஈழத்தில் இழந் துள் ளோம். பல்லாயிரக் கணக் கான பெண்கள் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாகி யுள்ளனர். ஐ.நா. உறுப்பினர் நவநீதம்பிள்ளை இலங்கை யில் உள்ள ஈழத்தை பார்வை யிட்டு ராஜபக்சே போர் குற்றவாளி என்று கூறி யுள்ளார். இந்நிலையில் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்கிறது.

வியட்நாம் போராட்டத்தை விட இலங்கையில் நடந்த ஈழப்போர் கொடுமையானது. காமன்வெல்த் மாநாட்டை நடத்த விடக்கூடாது. இதற்கு இந்தியாவில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இந்த ஒரு விஷயத்திலாவது தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். மாணவர்களின் உணர்வு நியாயமானது. அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் தமிழீழத் திற்கான மாணவர் போராட் டக்குழு இளையராஜா தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு பாரிமைந்தன் உலக தமிழ் கூட்டமைப்பு பிரபாகரன் பாலச்சந்திரன் மாணவர் கூட்டமைப்பு சிபி லட்சுமணன் தமிழீழ விடு தலைக்கான மாணவர் கூட்டமைப்பு ராஜா அனைத்திந்திய மாணவர் பெருமன்ற சத்தியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.