நாம் இங்கு இன்றியமையாத வரலாற்றுப் பணிகளை செய்ய வேண்டிய காலத்தில் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம். இந்த காலத்தில் செய்ய வேண்டிய எம் இனத்துக்கான கடமைகளில் அவசியமானவற்றில் ஒன்றாக ஐ. நா. விற்கு சமர்ப்பிக்க வேண்டிய சாட்சியங்களை திரட்டும் பணி எமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அன்புறவுகளே அடுத்து வரும் மூன்று மாதத்திற்குள் நமக்கு இரண்டு லட்சம் சாட்சியங்களை ஐ.நா.வில் சமர்பிக்க வேண்டி உள்ளது, இப்போது வெறும் நாற்பதாயிரம் சாட்சியங்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என அறிகின்றோம்.

இரண்டு இலட்சம் சாட்சியங்கள் ஒன்றும் பெரிய பணியே அல்ல. அன்பு உறவுகளே இந்த காலப் பணியை முதன்மைப் பணியாக ஆற்றுங்கள். நீங்கள் அறிந்த சாட்சியங்களை தொகுத்துக் கொடுங்கள்.

எத்தனையோ பணிகள் நடுவில் நீங்கள் இருந்தாலும் நேரமின்மை ஒரு காரணமாக இருந்தாலும் இனத்துக்கான இன்றியமையாத காலத்துக்கான பணியை செய்யத் தவறாதீர்கள். காரணம் எமக்கு அதனைக் கடந்த சாட்சியங்களை ஒப்படைக்க வலிகள் போதியனவாக உள்ளன. சாட்சிகளும் இன்று உலகெங்கும் வாழ்கின்றார்கள்.

sivavathani-pra
எனவே உங்களிடம் இனப்படுகொலை சம்பந்தமாக காணொளி ஆதாரத்துடன் இருந்தாலோ , ஈழத்தமிழரின குரல் வளை நெரிக்கபட்ட சாட்சியம் இருந்தாலோ கனடிய தமிழர் தேசிய அவையுடன் தொடர்பு கொண்டு ஒப்படையுங்கள்.

தமிழக உறவுகள் மற்றும் மேலைத்தேய நாட்டு ஈழ அகதிகள் முகாமுக்குசென்று அங்கு வாழும் சாட்சிகளை நேரில் சந்தித்து அவர்களின் நேரடி பதிவுகளை பெற்று ஹாட் டிஸ் மூலமாகவோ cd மூலமாகவோ தயார் செய்து அனுப்பலாம்.

மிக விரைவாக இந்த பணியை செய்து ஈழப் படுகொலை சாட்சியம் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம்.

வாருங்கள் உறவுகளே. இவ்வருடம் ஒக்டொபர் மாதம் 31ம் திகதிக்கு முதல் ஈழத்தமிழருக்கு இலங்கை அரசு இழைத்த குற்றங்களை முன் கூட்டியே பதிவு செய்வோம். ஐ நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் முன்னெடுக்கும் விசாரணைக்குரிய கால எல்லையாக 21.02.2002 முதல் 15.11.2011 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்கும் பொழுது உங்கள் தனிப்பட்ட பாதிப்புகளை மட்டும் சமர்ப்பிக்காமல் உங்கள் நீண்ட கால பட்டறிவுகளையும் ஆதாரத்துடன் உள்ளடக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறான பதிவுகள் தான் விசாரணக்குழு அடுத்த கட்ட விசாரணையான இன அழிப்பிற்குரிய பாதையைத் திறந்து விடும்.

கனடாவில் 2009 ம் ஆண்டுற்குப் பின் அனைத்து விதமான மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் ‘போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் (Center for War Victims and Human Rights – CWVHR) ஈடுபட்டுள்ளது. இத் தன்னார்வ தொண்டர் நிறுவனம் இது வரைக்கும் நூற்றுக்கணக்கான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு தேவையான வடிவத்தில் மிகவும் கவனமான முறையில் அவ்வாதாரங்களை தொகுத்து வருகின்றது. இன்நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்கள் பதிவை விரைவில் மேற்கொள்ள வேண்டுகின்றோம்.

CWVHR மின்னஞ்சல்: info@cwvhr.org

கனடா வாழ் அன்புறவுகளே உங்கள் தொகுதியில், உங்கள் தொடர்பில் இருக்கும் கனடியத் தமிழர் தேசிய அவை உறுப்பினர்களை அணுகினால் உங்களுக்கு தேவையான உதவிகளைப் புரிவார்கள். மேலதிக விபரங்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் தொடர்பு இலக்கமான 416.830.7703 ஐ தொடர்பு கொள்ளவும்.

– சிவவதனி பிரபாகரன்