canada-1ஐ.நா சபையின் மனித உரிமைக் கூட்டத் தொடரின் 29 ஆவது அமர்வு ஜூன் 15, 2015 அன்று ஆரம்பித்து எதிர்வரும் ஜூலை 3, 2015 வரை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் சிறிலங்கா அரசினால் தொடர்ந்து இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த பலதரப்பட்ட ஆவணங்களோடும் சாட்சிகளின் வாக்குமூலங்களோடும் கனடியத் தமிழர் தேசிய அவையினரின் அரசியல் குழு உறுப்பினர்களும் இளையோர் அமைப்பினர் உட்பட 5 பேர் கொண்ட குழு ஒன்று கனடாவில் இருந்து சென்று 28 நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

 

இச்சந்திப்புக்களில் மூலோபாய முக்கியத்துவமான நாடுகளைத் தேர்ந்தெடுத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர்.

 

இரண்டாம் பட்ச முக்கியத்துவம் உள்ள சில நாடுகளுடனும், எதிரணியில் இருக்கும் சில நாடுகளுடனும் நீண்ட கால நன்மை கருதி கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

சந்தித்த சில நாடுகள் பின்வருமாறு: USA , UK, Russia, Canada, Switzerland, Estonia, Argentina, Ghana, Latvia, Argentina, Montenegro, Namibia, Guatemala, Colombia, Ethiopia, Germany, Congo, Singapore, Malaysia, Indonesia, Thailand, Morocco.

 

இக்கலந்துரையாடல்களில் முக்கிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. அவற்றில் சில விடயங்கள் கீழ்வருமாறு:

 

தொடர்ந்தும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் பற்றியும்; மாறி மாறி வருகின்ற இனவெறிப் போக்கு மாறாத சிங்கள அரசாங்கங்கள் தமிழ் மக்களின் மனித உரிமைகள் குறித்தோ அல்லது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்தோ எந்தவித முன்னேற்றங்களையும் ஏற்படுத்த முயலமாட்டார்கள் என்ற உண்மையை வரலாற்று ரீதியாகவும் சாட்சியங்களூடாகவும் தெளிவுபடுத்தியும்; குறிப்பாக நில அபகரிப்பு, சிறைகளுக்குள் துன்புறுத்தப்படும் அரசியல் கைதிகளின் அவலங்கள், சொந்த மண்ணில் மீள் குடியேற்றப்படாத மக்களின் வாழ்வியல் அவலங்கள், தொடரும் அரச பின்னணியிலான சமூக குற்ற செயல்கள், மற்றும் படுகொலைகள் போன்ற பல்வேறு விடயங்களை தெளிவுபடுத்தியும்;

 

இவ்வருட ஆகஸ்ட் மாதத்தில் வெளிவரும் அறிக்கைக்கு முன்னர் அனைத்துலகம் கொடுக்கக் கூடிய அழுத்தங்கள் தொடர்பாகவும்; மற்றும் சரியான அரசியல் தீர்வுக்கு நீண்ட கால அடிப்படையில் இலங்கை அரசுக்கு கொடுக்கக் கூடிய அழுத்தங்களைப் பற்றியும்;

 

· ஆகஸ்ட் மாதம் வர இருக்கும் அறிக்கை குறித்தும்; பூரணமான பன்னாட்டு விசாரணைகளை வலியுறுத்தியும்; உள்ளக பொறிமுறை விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்;

 

· கனடியத் தமிழர் தேசிய அவையின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற பொது ஆயத்தின் முடிவுக்கிணங்க, கனடாவின் சுமார் 80 க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்புகளின் ஏக குரலாக கனடியத் தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்தும்;

 

· தமிழர்களுக்கான சரியான பிரதிநிதித்துவத்தை தெளிவுபடுத்தியும்;

 

· முழுமையான விசாரணையை நடத்துவதற்கும் அதனை அமுல்படுத்துவதற்கும் ஒரு சர்வதேச நீதி விசாரணைக்குழு ஒன்றை நிறுவும் படியும்;
பலதரப்பட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டு; சகல கூட்டங்களும் சுமூகமாகவும் ஆரோக்கியமாகவும் நடந்தேறியது.

 

இக் கூட்டங்களில் கலந்து கொண்ட சில முக்கிய நாடுகளும், ஐ.நா மனித உரிமை அமைப்பின் இலங்கையை மையப்படுத்திய பிரதிநிதிகளும் தமக்கு மேலும் பல சாட்சியங்களை கொடுத்துதவும் படியும் க.த.தே.அவையினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.