தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடும் அனைத்துக் கனடிய மக்களுக்கும் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Canada-harper
நன்றிகூறும் விழாவான தைப்பொங்கல் விழாவை நீங்கள் உற்சாகமாக‌ கொண்டாடுவதன் மூலம் செழிப்பான ஒரு வாழ்வை அடைவீர்களென நான் நம்புகின்றேன்.உலகின் மிக அமைதியான, பன்மைத்துவ நாடுகளில் ஒன்றாக இருக்கும் கனடாவில் அறுவடை விழாவான பொங்கல் விழாவைக் கொண்டாடும் அதிர்ஷ்ட முள்ளவர்கள் நீங்களென நினைவூட்ட விரும்புகின்றோம்.

இவ்வாண்டு இப்பொங்கல் விழாவை கொண்டாடுவதன் மூலம் உங்களின் பெருமைகள் வெளிப்படுவதோடு, நீங்கள் கனடாவிற்கும் மற்றும் கனடிய சமூகத்திற்கும் உங்களின் பங்களிப்பை மிகவும் சிறப்புற ஆற்றுகின்றீர்களென நான் ஆணித்தரமாக நம்புகின்றேன்.

மறக்க முடியாத இந்த நாளில் கனடிய அரசின் சார்பாக என்னுடைய வாழ்த்துக்களை தயவு செய்து ஏற்றுக்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

இப்படிக்கு

மதிப்புக்குரிய கனடிய பிரதமர்
ஸ் ரீபன் காப்பர், P.C, M.P