இந்திய உளவுத்துறையின் அனுசரணையுடன் தமிழகத்தில் முன்னனி நடகர்களாக கொண்டுவரப்பட்ட வேற்று மாநில நடிகர்களில் ஒருவரான ரஜனிகாந்தின் 2.0 திரைப்படம் நாளை வெளிவருகின்றது.

 
யார் இந்த ரஜனிகாந்?

 
தமிழர்களின் வரலாறு தெரியாது, கன்னடத்தையே தனது மூச்சாகக் கொண்டு தமிழகத்தை ஆட்சி புரிய ஆவலாக உள்ள ஒரு இந்திய வியாபாரி.

 
தூத்துக்குடியில் உள்ள நட்சு ஆலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும், அந்த ஆலை உருவாக்கும் நட்சுப் பொருட்களில் இருந்து எதிர்காலச் சந்ததியை காப்பாற்றவும் போராடியவர்களை இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இனப்படுகொலை செய்தபோது தமிழக அரசுக்கும், படுகொலைகளை புரிந்த காவல்துறைக்கும் ஆதரவாக குரல்கொடுத்வரும் இவரே.

 
இந்திய முன்னாள் பிரதமரும், பல ஆயிரம் தமிழ் மக்களை படுகொலை செய்வதற்கு இந்திய இராணுவத்தை அனுப்பியவருமான ராஜீவ் காந்தியின் மரணத்தில் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு உலகின் நீதிகளுக்கு புறம்பாக 27 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 7 அப்பாவித் தமிழ் மக்களையும் யார் அவர்கள் என எள்ளி நகையாடியதும் இவர் தான்.

 
தமிழகத்தை ஆட்சி புரியும் கனவுடன் இருக்கும் இவருக்கு இந்த அப்பாவி தமிழர்களை இந்திய சிறையில் இருந்து மீட்பதற்கு தமிழ் மக்கள் மேற்கொண்ட பெருமளவான போராட்டங்களும், உயிர்த் தியாகங்களும் தெரியாமல் போனது உலக அதிசயங்களில் ஒன்றே.

 
தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் கன்னட அரசு அவர்களுக்கு வழங்கவேண்டிய நீரைக்கூட கொடுக்காமல் மறுக்கின்றபோதெல்லாம், கன்னட அரசை (அதாவது தனது தாய் நிலத்தை) எதிர்த்து இந்த மனிதர் குரல் கொடுத்ததில்லை.

 
மாறாக நதிகளை இணைக்கப்போகின்றேன் என நடைமுறைச்சாத்தியமற்ற ஒன்றை கூறித் தமிழ் மக்களை ஏமாற்றவே முற்பட்டுள்ளார்.

 
இந்திய மத்திய அரசின் அடிமையாக செயற்பட்டு தமிழ் இனத்தின் அழிவுக்கான பாதை இவரின் இலட்சியம். ஆதற்காக உருவாக்கப்பட்ட ஒரு விம்பமே ரஜனி என்ற இந்திய அம்பு.

 
ஆம் தெலுங்கு நடிகர் விசால் தமிழகத்தில் கட்சி தொடங்குகின்றார், மற்றுமொரு தம்பி தமிழகத்தில் வாழும் தெலுங்கர்களுக்கு தமிழகத்தில் கட்சி ஒன்றை ஆரம்பிக்கின்றார். நடிகர் கமலஹாசன் ஆரம்பித்த கட்சியின் பெயரில் மிகவும் நுட்பமாக தமிழ் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டுள்ளது. காரணம் கேட்டால், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆந்திராவை உள்ளடக்கிய கட்சியம்???

 
அதாவது தமிழகத்தை கூறுபோடுவதற்கான பணிகளை வேற்று மொழி, வெளி மாநில நடிகர்களின் மூலம் இந்திய உளவுத்துறை ஆரம்பித்துவிட்டது.

 

தமிழீழத்தில் வடக்கையும் கிழக்கையும் துண்டாடுவதற்கு சிங்கள தேசம் மேற்கொண்ட சதிக்கு ஒப்பானதே இதுவாகும்.

 
இந்த வலையில் தமிழ் மக்கள் வீழ்ந்தால் தமிழ் மக்களின் அழிவு என்பது உறுதியானது.

 
ஆனால் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், வேற்று மாநில நடிகர்களால் தமிழ் இனத்தின் கலாச்சாரம் மற்றும் இனவிழுமியங்கள் அழிகின்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர்களை வைத்து திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களுமே.

 
வேற்று மாநில நடிகர்கள் மற்றும் நடிகைகளை ஊக்குவிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை முற்றாக புறக்கணிப்பதன் மூலம் தான் தமிழ் மக்களை யாரும் ஆட்சி புரியலாம், அவர்களை யாரும் அடிமையாக வைத்திருக்கலாம் என்ற கருத்தை ஒழிக்கமுடியும்.

 
அதற்கான ஒரு எழுச்சிப் போராட்டத்தை தமிழகம் ஆரம்பிக்கவேண்டும். தமிழ் இனம் தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வரை நாம் அதனை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.

 
யாரால் அது முடியும்?

 
சிந்திப்போம், அதன் முதல் அடியாக கன்னட நடிகரை தமிழ் அரசியல் சூழலில் இருந்து அகற்றும் முதற்பணியை நளைய திரைப்படத்தை புறக்கணிப்பதன் மூலம் ஆரம்பிப்போம்.

 
ஈழம் ஈ நியூஸ்.