kalaiyarasan-3கல்முனை என்பது தமிழர்களது பூர்வீக இதயம் ஆனால் இன்று கல்முனை எமக்கு சொந்தமானதா? என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

கல்முனை பிரஜைகள் குழவின் 9வது ஆண்டு நிறைவு விழாவும், வாழும்போது வாழ்த்தும் நிகழ்வும் சிரேஸ்ர பிரஜைகள் குழுவின் தலைவர் கா.கதிர்காமத்தம்பி தலைமையில் நேற்று கல்முனை 2 பல்தேவைக் கட்டடத்தில் நடைபெற்றது.

 

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

 

கல்முனை என்பது தமிழர்களது பூர்வீக இதயம் ஆனால் இன்று கல்முனை எமக்கு சொந்தமானதா? என்ற கேள்வியும் தொக்கி நிற்கும் அளவிற்கு நிலமை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு போவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

 

வடகிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரை சிறுபான்மை சமூகமாக இருக்கும் முஸ்லிங்களால் தமிழர்கள் பெரிதும் துன்பநிலையை அனுபவித்து வருவதனை நேரடியாகவே பாரக்கவேண்டி உள்ளது.

 

பொத்துவிலில் உள்ள தமிழர்களது பூர்வீக உறுதி நிலங்களை முஸ்லிங்கள் தன்வசப்படுத்தும் படலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது அதனை போன்று பல இடங்களில் இவ்வாரான காணி அபகரிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தவண்ணமே உள்ளது.

 

கல்முனையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் எல்லை நிர்ணயித்திலும் எமது சகோதர முஸ்லிங்கள் தமிழர்களுக்கு தொல்லை கொடுப்பவர்களாகவே செயற்பட்டு வருகின்றாரகள்.

 

இவர்களது இவ்வாரான செயற்பாடுகளை அவதானிக்கும்போது தமிழர்களாகிய நாங்கள் எதிர்காலத்தில் சகல வழிகளிலும் பலம்பொருந்தியவரகளாக திகழவேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும்.

 

இன்று தேர்தல் பற்றி பலராலும் பேசப்பட்டு வந்தாலும் இந்த நாட்டிலே என்ன வகையான தேர்தலை நடத்துவது என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லாத நிலையே இருக்கின்றது.

 

சிறுபான்மை சமூகத்தினரை பொறுத்தவரையில் விகிதாசார முறையினையே ஆதரிக்கும் ஒரு நிலையில் அனைத்து சிறுபான்மைக்கட்சிகளும் செயற்பட்டுக்கொண்டு வருவதனை அதாவதானிக்கமுடிகின்றது தொகுதிவாரியான தேர்தல் ஒன்று நடைபெறுமாக இருந்தால் அது ஒட்டு மொத்த சிறுபான்மைச்சமூகத்தையும் பாதிக்கும் ஒரு செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.

 

எனவே எதிர்காலத்தினை கட்டிக்காத்து எமது உரிமையை வென்றெடுக்க வேண்டியது அனைத்து தமிழ் மக்களினதும் கடமையாக இருக்கின்றது என்பதனை அனைவரும் உணர்ந்து செயற்படவேண்டும் அவ்வாறு செயற்படுவதற்கு இங்குள்ள புத்திஜீவிகள், கல்விமான்கள் சிவில் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும் எனக்கூறினார்.