ஜ. நா முன்றலில் நடைபெற இருக்கின்ற கவனயீர்ப்புப்பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்று லண்டனில் ஈருருளிப்போராட்டம் ஆரம்பமாகி உள்ளது.

 

உணர்வோடு எம் மக்களுக்கான நீதி வேண்டி உலக மக்களுக்கு எடுத்து சொல்லி மேடு பள்ளம் மலைகள் குளிர் மழை என பாராமல் நாடுகள் கடந்து பயணிக்கவுள்ள இந்த உறவுகளுக்கு வாழ்த்துக்களை நெஞ்சார கூறுகின்றேன்.

 

ஜநாவில் நடைபெற இருக்கின்ற 39 ஆவது கூட்டத்தொடரை முன்நிலைப்படுத்தி எதிர்வருகின்ற 17.09.2018 அன்று ஜெனீவாவில் அமைந்திருக்கும் ஜநா முன்றலில் “பொங்கு தமிழ்” மாபெரும் கவனயீர்ப்புப்பேரணி நடைபெற இருக்கின்றது.

 

இப்போராட்டத்திற்கு வலுச்சேர்கும் வகையில் இன்று லண்டனில் ஈருருளிப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இப்போராட்டமானது பிரான்ஸ் ஜேர்மனி நெதர்லாந்து பெல்ஜியம் ஆகிய நாட்டுச்செயற்பாட்டாளர்களோடு கூட்டாக இணைந்து எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை பல்லின மக்களுக்கு எடுத்துக் கூறியவாறு ஜநாவை எதிர்வரும் 16.09.2018 அன்று சென்றடய இருக்கின்றது.

 

இதேவேளை எதிர்வரும் 09.09.2018 அன்று கண்காட்சி ஊர்திப்பயணம் நோர்வே நாடாளுமன்றத்திலிருந்து சுவீடன் டென்மார்க் ஜேர்மனி ஆகிய நாடுகளை ஊடறுத்து ஜநாவை 17.09.2018 அன்று சென்றடய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கனடிய மண்ணிலும் இப்போராட்டத்திற்கு வலு சேர்க்கும் கண்டன கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற இருக்கின்றது.

 

நாமும் இப்போராட்டத்தில் பொங்குதமிழராய் இணைவோம்!