யாழ்.மாவட்டத்தில் 1996ம் ஆண்டு தொடக்கம் இறுதியுத்தம் வரையில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளதுடன், அரசாங்க அதிபருக்கு மகஜரும் கையளித்திருக்கின்றனர்.

 

யாழ்.குடாநாட்டில் வெள்ளை வாகனத்தில் படையினரின் சீருடையுடனும், அடையாளம் தெரியாமலும் வந்த ஆயுததாரிகளினால் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் காணாமல்போயினர்.

https://www.youtube.com/watch?v=jgBjcnklas0&feature=player_embedded

இவர்களுடைய உறவினர்களே இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது மக்கள் வீதியில் உட்கார்ந்து தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைத் தாங்கியவாறு கண்ணீர்விட்டழுது, தங்கள் பிள்ளைகள் எங்கே இருக்கின்றார்கள் என அறிந்து தகவல் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

 

இதன் பின்னர் யாழ்.மாவட்டச் செயலாளரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்த மக்கள், பின்னர் வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோரையும் சந்தித்துப் பேசியதுடன் அவர்களுக்கும் மகஜர்களை கையளித்தனர்.