missiகாணாமற்போனவர்கள் குறித்து அரசு உடனடியாகத் தீர்வை வெளியிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து காணாமல் போரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை நடாத்தப்பட்டது.

 

போர்க்குற்றம் குறித்த உள்நாட்டு விசாரணை நீதியை தேடித்தராது என்று குறிப்பிட்டும், காணாமற்போனவர்கள் குறித்து அரசு உடனடியாகத் தீர்வை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

 

யாழ்ப்பாணத்தில் அரச செயலகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எங்கள் உறவுகளுக்கு என்ன நேர்ந்தது: அரசாங்கம் பதில் தரவேண்டும்

வடக்கு, கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வினை பெற்றுத்தரவேண்டும், இலங்கையில் நடைபெறும் உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் இன்று கல்முனையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இங்கு வந்திருந்த மக்கள் தங்களது உள்ளக்குமுறல்களை இங்கு வெளிக்காட்டினார்கள், பல வருடங்களாகியும் தமிழ் ஒட்டுக்குழுக்களாக இருந்த கருணா, இனியபாரதி ஆகியோர் தங்களுடைய பிள்ளைகளை பலவந்தமாக பிடித்து, அடித்து கொண்டு சென்று இதுவரைக்கும் அவர்களை எங்களுடைய கண்களில் காட்டவில்லை, அவர்களுக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாத நிலையிலே இன்றும் எந்த வாக்குறுதியும் அற்றவர்களாகவே வாழ்ந்து வருகின்றோம்.

 

 

எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்திருக்கின்றது என்பதனை தற்போதுள்ள அரசாங்கம் தேடி கண்டு பிடித்து மிகவிரைவில் தெரியப்படுத்த வேண்டும். கொலைகாரர்கள் தற்போதும் இந்த அரசாங்கத்திலே இருக்கின்றார்கள் இன்று இந்த அரசாங்கத்தில் இருக்கும் சரத்பொன்சேகாவும் எங்களுடைய உறவுகள் இல்லாமல் போவதற்கு உடந்தையாக இருந்தவரே.

 

இவர்களை வைத்து எங்களுடைய பிள்ளைகள் இப்போது எந்த முகாமில் அல்லது இரகசிய தடுத்து முகாம்களில் வைத்திருக்கின்றார்கள் என்பதனை தெரியப்படுத்தி எமது உறவுகளை எங்களுடன் சேர்ப்பதற்கு அனைவரும் ஆவண செய்து தரவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.