கூழாவடி ஆனைக்கோட்டை என்னுமிடத்தில் பொது மக்கள் பலருக்குச் சொந்தமான காணிகள் வீடுகள் கடந்த இரண்டு தசாப்தங்களாக இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அக் காணிகள் ஸ்ரீலங்கா அரசினால் சுவீகரிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைப்பதற்காக வழங்கப்படவுள்ளது.

ஜே-133 இல கிராமசேவகர் பிரிவில் சுவீகரிக்கப்பட்ட மேற்படி காணிகள் வீடுகளை ஸ்ரீலங்கா இராணுவத்தின் 11வது சிங்க றெஜிமென்ற் ‘பி’ அணிக்கான நிரந்தர நிலையத்தை ஸ்தாபிப்பதற்காக வழங்கப்படவுள்ளது. மேற்படி இராணுவ முகாம் அமைப்பதற்காக இராணுவத்தினரிடம் காணி கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை நடைபெறவுள்ளதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலரினால் குறித்த காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

ananthy
மேற்படி காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக வழங்கும் நடவடிக்கைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அதே இடத்தில் இன்று கலை 08.00 மணிக்கு ஆரம்பமானது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , அனந்தி சசிதரன் , சஜீவன் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். வழமை போல் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவுப் புலனாய்வாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னேரே அங்கு வந்திருந்தனர்.