ஈராக்கின் பல்தேசிய இனமக்களை ஐ.எஸ்.ஐ.எஸ் குழுக்கள் அழித்துவருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். குர்திஸ்தானின் தன்னாட்சி பிரதேசத்திற்குள் தஞ்சம் புகுந்துள்ள லட்சக்கணக்கான சிறுபான்மை மக்களின் வாழ்வு அச்சத்திற்குள்ளாகி உள்ளது. இரண்டாயிரம் யசிதி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என செய்திகள் வருகிறது.

iraq-kruthis
யசிதிக்கள் என்பவர்களின் நம்பிக்கைகள் பழைய ஜொராஸ்டிரய, கிருத்துவ, சூஃபி நம்பிக்கைகளின் கலவையாக இருக்கிறது. இதனை பின்பற்றும் மக்கள், மேலும், ஷாபா, சியா மக்களும் குர்து போராளி குழுவின் பாதுகாப்பில் தஞ்சமடைந்திருந்தார்கள். பல லட்சம் இவ்வாறு குர்து பகுதிகளுக்கு சென்றார்கள்.

குர்து போராளிகள் ஈரான் – ஈராக் – துருக்கி- சிரியா ஆகிய நாடுகளில் தமது நிலப்பரப்பினை கொண்டு விடுதலைக்காக நீண்ட காலமாக போராடி வருகிறது. ஈராக்கின் குர்து பகுதியான தன்னாட்சி பிரதேசமாக இருக்கிறது.. இப்பகுதியை பேஷ்மெரா எனும் இவர்களது குர்து போராளி படைகள் பாதுகாக்கின்றன. குர்து போராளிகள் நீண்ட காலமாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள். ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைக்கான போராட்ட ஆதரவு களத்தில் இன்றுவரை பின்வாங்காது ஆதரவளிப்பவர்கள்.

தற்பொழுது குர்து போராளிகள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் நடத்தி அவர்களது பகுதிகளை கைப்பற்றி குர்து, பிற தஞ்சம் புகுந்த மக்களை கொலை செய்கிறார்கள். இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினை எதிர்க்கும் பலத்தினை குர்து போராளிகள் பெற்றிருக்கவில்லை. மத அடிப்படைவாதம் இப்பிராந்தியத்தினை கொலைக்களமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. அனைத்துக்கும் பின்புறத்தில் அமெரிக்கா-மேற்குலகம் மேற்காசியாவினை நின்று கொண்டு சிதைத்துக்கொண்டிருக்கிறது.

குர்து மக்களின் பகுதியில் இருக்கும் எண்ணைக் கிணறுகளை ஐ.எஸ்.ஐஎஸ் கைப்பற்றுவதும் ,இதன் பின்னால் மேற்குலகின் கைகளில் இவைகள் செல்வதுவும், ஈராக் மூன்றாக உடைக்கப்படுவதும் நிகழும் ஆபத்து இருக்கிறது.

குர்திஸ்தான் , பாலஸ்தீனத்தினைப் போல, காசுமீரைப் போல, ஈழத்தினைப் போல பாதுகாக்கப்படவேண்டும், விடுதலையடைய வேண்டும். குர்து மக்கள் நமது தோழர்கள். குர்து பகுதியில் நிகழும் இனப்படுகொலைகளை தடுக்க முன்வருவோம். குர்து விடுதலையை கோருவோம்.

இந்த பிராந்தியப் போரினை அவசியம் கவனிப்போம். தொடர்ந்து பேசுவோம்.

குறிப்பு:

வட ஈராக்கில் நிகழும் போர் நிலைகள், குர்திஸ்தானின் பிராந்தியம் ஆகியவற்றின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. போர் நிக்ழும் பகுதியும், எண்ணை வழிகளும் கடைசிப் படத்தில் இணைக்கப்பட்டுள்ளது,…
iraq-kruthis-2iraq-kruthis-3

திரு திருமுருகன்காந்தி
தலைவர்
மே பதினேழு இயக்கம்.