“லைகா” என்ற பெயரை மட்டும் நீக்கிவிட்டு வெளியிடலாம் என்ற உடன்பாட்டின் அடிப்படையில் நாளை தமிழகத்தில் “கத்தி ” திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையடுத்து இந்த முடிவு சரியானதுதானா.? போராட்டம் தோற்றுவிட்டதா? என்ற அடிப்படையில் விவாதங்கள் நடக்கின்றன.

இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கும் ஒரு நிறுவனம் “ஏன் தமிழகத்திற்குள் நுழைந்தது?” என்ற ஆழமான பார்வையுடன் இதை அணுகினால் இது எமக்கு குறிப்பிடத்தகுந்த வெற்றி என்றே கூறவேண்டும்.

மே 18 க்கு பிறகு தமிழீழ விடுதலையின் மையமாக உள்ள தமிழகத்தின் போராட்டங்களை மடைமாற்றி தளம்பச்செய்து உணர்வாளர்களை பிரித்து தமிழகத்தில் ஆதிக்கம் செய்யும் சினிமாவினுள் தனது வேர்களைப்பரப்பி “லொபி” செய்யலாம் என்ற பல நோக்கங்களுடன்தான் லைகாவை சிங்களம் தமிழகத்திற்குள் களம் இறக்கியது.

பொருளாதாரம் என்பது அதன் ஒரு உதிரி காரணம் மட்டுமே!

எனவே தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்து லைகாவை முளையிலேயே கிள்ளியெறிந்த இந்த போராட்டம் உண்மையில் தோற்றுவிடவில்லை.

லைகாவின் முதலும் கடைசியுமான முயற்சி இது. இனி அவர்கள் திரைத்துறையில் மட்டுமல்ல இனி எந்த பொருண்மிய கட்டுமானங்களையும் தமிழகத்தில் நிறுவ முடியாது. அந்தளவிற்கு பாடம் படிப்பிக்கப்பட்டிருக்கிறது.

லைகா போட்ட காசை மட்டும் எடுத்து கொண்டு போகவேண்டியதுதான். மற்றபடி தமிழகத்தில் அதன் நுழைவிற்கான எந்த காரணமும் வெற்றிபெறவில்லை.

அதை மாணவர்களும் போராட்ட இயக்கங்களும் தமது தொடர் போராட்டங்களினூடாக தடுத்து நிறுத்தியிருக்கின்றன.

எனவே இதை நாம் வெற்றி என்று கூறாவிட்டாலும் தோல்வி என்று கருதத் தேவையில்லை.

ஈழம்ஈநியூஸ்.