trinco_sampur_muthur_435[1]சிங்கள யாப்புக்குட்பட்ட தேர்தல்கள் எமக்கு நிரந்தர தீர்வை தரப்போவதில்லை என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ளும் அதே சமயத்தில் மறுவளமாக கிடைக்கும் வெற்றிகளினூடாக தாயக – சுயநிர்ணய கோட்பாடுகளை வலுப்படுத்துவதுடன் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிலிருந்து எம்மை தற்காலிகமாகக் காத்துக்கொள்ளவும் முடியும் என்ற உண்மையையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

 

அதை பல படிமுறைகளாக விளக்கம் செய்ய முடியும். அவற்றை வரும் காலங்களில் பேசுவோம். நாம் தற்போது உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டியது தென் தமிழீழத்தின் அதாவது கிழக்கு மகாணத்தின் தமிழ் பிரதிநிதி;துவத்தை அதிகப்படுத்துவது தொடர்பானது.

 

நாடாளுமன்றத் தேர்தலில் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.

 

எனவே கூட்டமைப்பிற்கு கிடைக்கவிருக்கும் தேசியப்பட்டியல் ஆசனங்கள் இரண்டையும் மட்டக்களப்பு. அம்பாறை மற்றும் திருகோணமலையை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு வழங்குவதனூடாக பெரும் நிலப்பறிப்புக்கும் இனச்சுரண்டல்களுக்கும் ஆளாகியுள்ள தென்தமிழீழ மண்ணை தற்காத்து வடக்கு கிழக்கு இணைந்த எமது தாயக சுயநிர்ணய கோட்பாட்டிற்கு வலுச்சேர்க்க முடியும்.

 

மட்டக்களப்பில் முதல் முறையாக பட்டிருப்புத் தொகுதிக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது. எனவே மீளவும் அதை தற்காத்துக்கொள்ள அங்கிருந்து தேசியப்டடியல் முலம் ஒரு பிரதிநிதி தெரிவு செய்யப்படுவது முக்கியமானது.

 

கட்டமைக்கப்படட் இனஅழிப்பிலிருந்து தமிழீழ எல்லையோர நிலங்களை காக்கவும் வடக்கு கிழக்கு இணைந்த தாயக சுயநிர்ணய கோட்பாட்டை வலுப்படுத்தவும் வடக்கு மகாணத்திற்கு நிகராக கிழக்கு மாகாணத்திலும் சம அளவில் தமிழ் பிரதிநிதித்துவம் பேணப்பட வேண்டும்.

 

எனவே கூட்டமைப்பு தலைமை தேசியப்பட்யல் முலம் கிடைக்க இருக்கும் இரு ஆசனங்களிற்கான பிரதிநிதிகளை தென்தமிழீழத்திலிருந்தே தெரிவு செய்ய வேண்டும்.

 

கூட்டமைப்iபின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்று சுயநிர்ணய உரிமைக்காக வாக்களித்த மக்களின் அவாவை இத்தகைய இராஜதந்திர நகர்வுகளினூடாகத்தான் வலுப்படுத்த முடியும்.

 

இதனூடாக ஒரு பேரம் பேசும் வல்லமையை வள்த்துக்கொள்ள முடியும்.

 

எனவே கூட்டமைப்பு இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 

ஈழம்ஈநியூஸ்.