கூட்டமைப்புக்கு வாக்களிப்பதென்பது உங்கள் விருப்பம் – உரிமை. அதற்கு உங்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் வாக்களிப்பதென்றால் தயவுசெய்து உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்.

முழுமையாக இல்லாவிட்டாலும் கொஞ்சூண்டாவது புலி அரசியல்/ புலிப் பண்பாடு/ புலி மரபைக் கற்றுத் தேர்ந்தவனாகச் சொல்கிறேன், 2009 இற்குப் பிறகும் புலிகள் தமிழ்த் தேச அரசியலில் ஆளுகை செலுத்தும் சக்திகளாக இருந்திருந்தால் கூட்டமைப்பை எப்போதோ கலைத்திருப்பார்கள். அது மட்டுமல்ல அதில் ஒரு சிலரைப் ‘போட்டும்’ தள்ளியிருப்பார்கள்.

ஏனென்றால் தமிழ்த் தேசியத்தின் பெயரால் இனத்தை அடகு வைக்கும் உரிமையைப் புலிகள் யாருக்கும் வழங்கவில்லை.

‘இறைமையை கைவிட்டு இனத்தை அடகு வைத்தால் தான் கூடச் சொல்லுக் கொல்லப்பட வேண்டிய ஆள்தான்’ என்று அறிவித்து தன்னைக் கொல்லும் உரிமையை மக்களுக்கு கொடுத்தவர் தலைவர் பிரபாகரன்.

இதுதான் புலி மரபு/ புலிப் பண்பாடு.

அடுத்து புலிகள் காலத்திற்குக் காலம் தேவை கருதி அரசியல் அமைப்புக்களை உருவாக்கியதும் பின்பு கலைத்ததும் வரலாறு.

உதாரணத்திற்கு மாத்தையா தலைமையில் ‘ விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி’ என்ற கட்சியை உருவாக்கியதும் பின்பு கலைத்ததும் பலரும் அறிந்ததே. பிற்பாடு அதே மாத்தையா தேசத்திற்கு எதிராக சிந்தித்தபோது ‘போட்டுத்’ தள்ளப்பட்டதும் வரலாறு.

இது கூட்டமைப்புக்கும் – கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் கூடப் பொருந்தும்.

எனவே சிந்தியுங்கள்.

நன்றி : பரணி_கிருஷ்ணரஜனி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here