அண்மையில் இந்தியா சென்று திரும்பிய கூட்டமைப்பு அங்கு பேசியவற்றை மக்களுக்கு மறைப்பதுடன் இந்தியா தமிழ்மக்களுக்கு ஆபத்பாந்தவனாக இருக்கும் என்றும் கதைவிட்டு வருகிறார்கள்.

ஆனால் கள யதார்த்தம் தலைகீழாக இருக்கிறது.

jaffna201
ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகம் என்ற பெயரில் RAW அமைப்பின் தமிழக பிரிவாக செயற்படும் சந்திரகாசன் தமிழகத்திலுள்ள அகதி முகாம்களுக்கு சென்று ஐநா விசாரணைக்குழுவுக்கு யாரும் தமது வாக்குமூலங்களை எழுதி அனுப்பக்கூடாது என்று வெருட்டியிருக்கிறார்.

இது RAW இன் பணிப்புரை என்பதை சொல்ல பெரிய அரசியல் அறிவொன்றும் தேவையில்லை.

ஐநா விசாரணைக்குழுவுக்கு எதிராக இனஅழிப்பு அரசு தானே அறிவித்த “சர்வதேச விசாரணக்குழுவில்” RAW இனால் மகிந்தவின் நீண்டகால நண்பர் அவ்தாஷ் கௌஷல் உட்செருகப்பட்டிருக்கிறார்.

அவர் தன் பங்கிற்கு நிறைய வாந்தியெடுத்து வருகிறார்.

அரசியல் தீர்வையெல்லாம் விடுவோம். மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தடுக்கவே இவ்வளவு தகிடுதத்தம் செய்யும் இந்தியா எப்படி நமக்கு ஆபத்பாந்தவனாக இருக்கும்?

நிலமை இப்படியிருக்க யாருக்கு கயிறு விடுகிறது கூட்டமைப்பு?

“மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள். வெற்றியை அவர்கள் பெற்றுத்தருவார்கள்” என்பது மக்கள் போராட்டம் குறித்த எளிய பால பாடம்..

கூட்டமைப்பு மக்களுக்கு உண்மையை சொல்லி மக்கள் போராட்டத்திற்கு வழி விட்டு எப்போது ஒதுங்கி நிற்கப்போகிறது?

ஈழம்ஈநியூஸ்.