kosovo3கொசோவே நாட்டின் விடுதலையின் நினைவுநாளான நேற்றைய தினத்தை முன்னிட்டு இந்த பத்தியை ஈழம் ஈ நியூஸ் மறுபிரசுரம் செய்கின்றது.

கொசோவோ பெப்ரவரி 17, 2008 ல் தனிநாட்டுக்கான சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. அதனையடுத்து அதற்கு ஆதரவானதும், எதிரானதுமான கருத்துக்கள் இலங்கைத் தீவு உள்ளடங்கலாக உலகெங்கும் ஒலித்தன. அவற்றில் ஒன்றாக எனது கருத்துக்களும், பெப்ரவரி 24, 2008 தொடக்கம் 30 மார்ச், 2008 வரை “ஞாயிறு தினக்குரலில்” வெளிவந்தன.

அந்தத் தொடர்களை தொகுத்து இங்கு மாற்றங்கள் எதுவுமின்றி மறுபிரசுரம் செய்கின்றேன். சுதந்திரப் போராட்டங்கள் தொடர்பான எனது ஆய்வுப் பயணத்தில் இதுவும் ஒரு படிக்கல்.

கொசோவோவின் சுதந்திரப் பிரகடனமும் ஈழத் தமிழர்களின் போராட்டமும்!

சுதந்திரத்தை சுவாசிப்பதற்கான கொசோவோ மக்களின் நீண்ட நாள் காத்திருப்பு, பல நாள் எதிர்பார்ப்பு கடந்த பெப்ரவரி 17 இல் கைகூடியது. “இந்த தினத்திற்காய் நாம் நீண்ட நாள் காத்திருந்தோம்” என தெரிவித்து விடுதலைப் பயணத்தில் வித்தாகிய வீரர்களுக்கு மரியாதை செலுத்திய பின் சுதந்திரப் பிரகடனத்தை அந்நாட்டுப் பிரதமர் மந்திரி ஹசிம் தசி வாசித்தார். எந்த வித எதிர்ப்பும் இன்றி சுதந்திரப் பிரகடனம் கொசோவோ பாராளுமன்றில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தெருக்கள் எங்கும் மக்கள் வெள்ளம் விழாக்கோலம் பூண்டது. கோசோவோ தேசம் மகிழ்ச்சியில் திளைத்துப் போனது. கோசோவோவின் பழைய கொடியுடன் கருநீலத்தில் மஞ்சள் நட்சத்திரங்கள் பொதித்த புதிய கொடி நிமிர்ந்த மிடுக்குடன் பட்டொளி வீசிப்பறந்தது. விடுதலைக்கான பயணம் நந்தவனத்தில் நடப்பது போன்றதல்ல மாறாக கரடு முரடான பாதைகளினூடாக பயணிக்க வேண்டிய சவால் மிகுந்த இலக்கு. ஆனால், முடிவு எல்லையில்லா ஆனந்தத்தை அளிக்கும். அதற்கான மிக அண்மைய சிறந்த உதாரணமே கொசோவோ.

காலனித்துவம், அடக்குமுறை இனச்சுத்திகரிப்பு, அடக்குமுறைக்கு எதிரான கொசோவோவின் அல்பேனிய இனக்குழுமத்தின் போராட்டம், அதனால் மக்கள் சந்தித்த அவலங்கள், சர்வதேச தலையீடுகள், தீர்வுமுயற்சிகள், அதில் ஏற்பட்ட இழுபறிகள், விட்டுக் கொடுக்காத மனோபாவம், தொடர்ச்சியான இன்னல்களை சந்தித்த பின்னும் மனோபலம் குன்றாத விடுதலை மீதான பற்று இறுதியாக சுதந்திரம்.

இப்படி பல்வேறு பரிமாணங்களை கொண்டது கொசோவோவின் சுதந்திரத்திற்கான போராட்டம். அந்த வகையில் தனித்து சுதந்திரத்தையும் அதற்கு அண்மையான சம்பவங்களை மட்டும் ஆராயாமால், காலத்தின் தேவை கருதி கொசோவோவின் முக்கியமான வரலாற்று பாதைகளையும் புதிய உலக ஒழுங்கையும் ஷ்ரீலங்கா அரசாங்கத்தின் அச்சத்தையும் மற்றும் தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகளையும் அதற்கான சாத்தியப்பாடுகளையும் அலச முற்படுகிறது இந்தத் தொடர்.

கொசோவோவின் பின்னணி

சிதறுண்ட யுகோஸ்லாவியாவின் மொன்ரிநிக்ரோ, பொஸ்னிய, குறொரியா, ரொமேனியா, மஸிடோனியா, அல்பேனியா ஆகியவற்றுக்கு நடுவிலும் மற்றும் சேர்பியாவிற்கு அருகிலும் உள்ள தேசமே கொசோவோ. சுதந்திரமடைந்த வேளை இந்த தேசத்தின் சனத்தொகை சுமார் 2 மில்லியன். அதில் 90 வீதமானவர்கள் அல்பேனிய இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள். கொசோவோவில் சிறுபான்மையாக 6 வீத சேர்பியர்களும் ஏனையோர் 4 வீதமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

கொசோசோவோ வாழ் பெரும்பான்மை அல்பேனிய இனக்குழுமத்தின் சுதந்திர பிரசாரத்தின் மீது முன்னாள் யுகோஸ்லாவியாவின் ஜனாதிபதி சுலோபோடன் மிலேசேவிக் கடும் அடக்குமுறையை மேற்கொண்டமை மற்றும் யுகோஸ்லாவியா மீதான நேட்டோ நாடுகளின் வான்தாக்குதல் ஆகியவற்றைத் தொடர்ந்து 1990களின் பிற்பகுதியில் கொசோவோ சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியது. ஆனால், சேர்பியர்களுக்கும் அல்பேனியர்களுக்கும் இடையிலான இனக்குழுமமென் தீவிர மோதுகை ஆகக்குறைந்தது 125 வருட கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. ஓட்டோமன் இராச்சியத்தின் கீழ் சுயாட்சியுடைய அல்பேனிய தாயகத்தை இலக்காகக் கொண்டு 1878 இல் அல்பேனிய லீக் கொசோவோவில் நிறுவப்பட்டது. முதலாவது உலகப் போரைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சேர்பியர்கள் கொசோவோவில் குடியேறத் தொடங்கினர்.

1928 இல் கொசோவோ வாழ் சேர்பியர்கள் எண்ணிக்கை 38 வீதம். ஆனால், 2 ஆம் உலகப் போர் காலத்தில் இத்தாலி அல்பேனியாவின் ஒருபகுதியாக கொசோவோவை ஆட்சி செய்தது. இக்காலப்பகுதியில் சுமார் 70 ஆயிரம் சேர்பியர்கள் கொசோவோவை விட்டு வெளியேற்றப்பட்ட வேளை 75 ஆயிரம் அல்பேனியர்கள் கொசோவோவுக்கு குடியேறினார்கள். போருக்கு பிற்பாடு ஜோசிப் புறொஸ் ரிட்ரோ அவர்கள் ரஷ்யாவின் ஆதரவுடன் யுகோஸ்லாவியாவின் ஜனாதிபதியானார். அதனைத் தொடர்ந்து 1963 இல் கொசோவோ சுயாட்சியுடைய மாநிலமாக உருவாக்கப்பட்டதுடன், 1974 இல் யுகோஸ்லாவிய பாராளுமன்றில் முழுமையான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதனூடாக இறைமையற்ற ஆனால், முழுமையான சுயாட்சியுடைய தேசமாக மிளிர்ந்தது. இதில் ஆழமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் கொசோவோவின் தலைவிதி என்பது அதிகாரம் மிக்க நாடுகளாலேயே நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச போக்கு

அன்று யுகோஸ்லாவியா கொசோவோவிற்கு சுயாட்சியை வழங்கியது இன்று அமெரிக்காவும் பிரித்தானியா உட்பட பெரும்பான்மை ஐரோப்பிய நாடுகளும் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்துக்குப் பின்னணியில் இருந்ததோடு அதனை அங்கீகரித்துமுள்ளன. இரண்டாவது முறையாக கொசோவோவினுடைய சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 1989 இல் கொசோவோவின் சுயாட்சி உரிமையை சுலோபோடன் மிலேசேவிக் நீக்கியதைத் தொடர்ந்து 1990 ஜூலையில் கொசோவோ வாழ் அல்பேனிய இனக்குழும சட்டவாளர்கள் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை முதன்முறையாக அறிவித்தார்கள். அதனை 1991 இல் அல்பேனியா அங்கீகரித்தது. இறுதியில் முதலாவது சுதந்திரப் பிரகடனம் ஆக்கபூர்வமற்றதாகியது. இது குறைந்தது ஒரு பலம்மிக்க நாடாவது சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரிக்க வேண்டிய தேவையையும் அத்துடன், சுதந்திரப் பிரகடனம் என்பது உலக ஒழுங்கின் போக்கிற்கு ஏற்பவே இடம்பெறவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி விடுலையை வேண்டி நிற்கும் தேசம் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டியதுடன், சில சம்பவங்களில் அவற்றின் தலையீடுகளையும் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. எனது பார்வையில், கொசோவோவின் சுதந்திரம் என்பது அந்த தேசம் விடுதலைக்கு கொடுத்த விலையென்பது ஒரு புறமிருக்க சக்திமிக்க நாடுகளின் தேசிய நலனையும் கருத்தில் கொண்டதென்ற கசப்பான உண்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பமென்பது அடக்குமுறை, இடையூறுகள் போன்றவற்றினை நோக்கிய மீள்பயணம் அல்ல. ஆனால், விடுதலைக்கான எதிர்பார்ப்புடன் பல இனக்குழுமங்கள் காத்திருக்கின்றன. வூட்ரொ வில்சன் அவர்களின் சுயர்நிர்ணய உரிமைக்கான கோட்பாடும் அதனை ஏற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது அத்தியாயத்தின் இரண்டாவது பந்தியும் இன்னும் உயிர்த்துடிப்புடனேயே இருக்கின்றன. அதேவேளை, சூடானில் தென்சூடான் மற்றும் டாபூர் அல்ஜீரியாவில் பேபர்ஸ் மற்றும் பயபிறா, தாய்லாந்தில் தென்தாய்லாந், சீனாவில் உய்குர், இந்தோனேசியாவில் மலுகு மற்றும் செலிபெஸ் தீவுகள், ஈரானிலுள்ள அக்வஸ் அரேபியர்கள், ரஷ்யாவில் செச்சினியா மற்றும் டயெஸ்ரன், துருக்கியில் குர்திஸ், இந்தியாவில் கர்மீர், நாகலாந்து போன்றவை மற்றும் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் போன்றவற்றினை விஞ்சி கொசோவோவின் போராட்டம் முதன்மைபெற்றமையென்பது வல்லரசுகளுக்கிடையிலான போட்டியையும் உலக ஒழுங்கில் ஏற்படத் தொடங்கியுள்ள மாற்றத்தையும் பறைசாற்றுகிறது. ரஷ்யாவினுடைய மறுமலர்ச்சியை நோக்கிய பணயமும் சீனாவின் துரித வளர்ச்சியும் அமெரிக்காவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளமை மறுதலிக்கப்பட முடியாது. ரஷ்ய சோவியத் குடியரசையும் யுகோஸ்லாவியாவையும் துண்டாக்கிய அமெரிக்கா ரஷ்யாவின் `மீளுருவாக்கப் பலத்தை’ சிதைப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவே பால்கன்ஸில் மற்றுமொரு தேசத்தின் சுதந்திரப் பிரகடனத்தின் பின்னணியில் இயங்கியது. சுதந்திரம் என்பது ஒரு அடக்குமுறை ஆட்சியிலிருந்து விடுபடுகின்ற அதேநேரம் சக்திமிக்க நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய சூழலை 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்படுத்தி நிற்கிறது. 1999 இல் யுகோஸ்லாவியா மீது மேற்கொள்ளப்பட்ட வான்குண்டுத் தாக்குதல், அதே ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு சபை கொ சோவோவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமை, கொசோவோ சுதந்திரப் பிரகடன தினத்தன்று கொசோவோ மக்கள் அமெரிக்கா தொடர்பாக வெளிப்படுத்திய நன்றியுணர்வு, ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான ஆழமான நல்லபிப்பிராயம், கொசோவோ சுதந்திரப் பிரகடனத்தில் அழுத்தம் திருத்தமாக மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறப்படும் ஐ.நா. சபை விசேட தூதுவரின் கொசோவோ தொடர்பான ஆக்கபூர்வமான சட்டவரைபு பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான ஈடுபாடு போன்றவை உலக ஒழுங்கில் `தங்கியிருத்தலை’ சுட்டிக்காட்டிகிறது.

ரஷ்யாவும் சேர்பியாவும் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை `சர்வதேச சட்டத்தை மீறும் செயல்’ என கூறிவருகின்றமையும் அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பன் கீன் மூன் அவர்களும் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் `பிராந்தியத்தில் அமைதியையும் உறுதிப்பாட்டையும் பேணும் நடவடிக்கை’ என தெரிவித்து வருகின்றமையும் சர்வதேச சட்டம், பிராந்திய உறுதிப்பாடு, சுதந்திரப் போராளிகள், பயங்கரவாதிகள் போன்றவற்றிற்கு இடையில் உலகில் ஏற்பட்டுள்ள முரண்நிலையை வெளிப்படுத்துகிறது.

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பன் கீன் மூன் அவர்கள் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்துக்கு எதிரான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என அறிவிப்பும் விடுத்துள்ளார். ஆனால், ரஷ்யாவோ சேர்பியாவுடன் இணைந்து அதனைத் தொடர்ந்து எதிர்ப்பதோடு ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் `செல்லுபடியற்றது’ என்ற தீர்மானத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இருப்பினும் ரஷ்யாவின் தீர்மானமே செல்லுபடியற்றதாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகத் தென்படுகின்றன. ஏனெனில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை வலுவாக ஆதரிக்கின்றன. ரஷ்யாவின் முயற்சி தோல்வியடையும். ஆயினும், தனக்கு எதிரான கூட்டணிக்கும் ஐ.நா.வுக்கும் நெருக்கடியையும் அழுத்தத்தையும் கொடுக்கும் முகமாக அப்ஹாஸ்யா மற்றும் தெற்கு உஸ்டியா South Ossetia ஆகியவை ஜோர்ஜியியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கான அல்லது சுதந்திரமடைவதற்கான அங்கீகாரத்தை வழங்கப்போவதாக ரஷ்யா மிரட்டத் தொடங்கியுள்ளது.

துண்டாடல்கள் ஊடாக உருவான கொசோவோவின் சுதந்திரம் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச உறவை பிளவுபடுத்தியுள்ளது. கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை தொடர்ந்து இன்று மேற்கு கிழக்கு ஐரோப்பாவென்று மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியமே `அங்கீகரித்தல்’ மற்றும் நிராகரித்தல் என்ற மாறுபாடான நிலைப்பாடுகளால் கூறுபட்டுபோயுள்ளன.


நார்வே, பின்லாந்து, ஜேர்மனி, சுவீடன், டென்மார்க், இத்தாலி, பிரான்ஸ், ஒஸ்றியா, துருக்கி, அல்பானியா, ஆப்கானிஸ்தான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா என்பவை கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்துக்கு ஆதரவளிக்கின்றன. மறுமுனையில் ஷ்ரீலங்கா, சைப்ரஸ், ஸ்லோவாக்கியா, ருமேனியா, ஸ்பெயின், சீனா, ரஷ்யா என்பவை கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்கின்றன. சீனாவிற்கு தாய்வானும் ஷ்ரீலங்காவிற்கு தமிழீழமும் மனதில் இருப்பதால் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை வலுவாக எதிர்க்கத் தூண்டுகின்றன. கொசோவோ தாய்வானுக்கோ, தமிழீழத்திற்கோ முன்னுதாரணமாக இருந்துவிடக்கூடாது என்பதில் இருநாடுகளும் கவனமாகச் செயற்படுகின்றன.

இவர்கள் போன்றவர்களின் அச்சம், சுதந்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களின் அவா, கொசோவோவும் இலங்கைத் தீவிற்கும் இடையிலான பொருத்தப்பாடுகள், வேறுபாடுகள், கொசோவோ சுதந்திரத்தால் பிரதான வகிபாகமாக இருந்த கொசோவோ விடுதலை இராணுவம் (Kosovo Liberation Army) போன்ற முக்கியமான விடயங்களை அடுத்தவாரம் அலசுவோம்.

————————————————————————————

அடக்குமுறைகள் விடுதலைக்கான பாதையை விரைவுபடுத்துகின்றன. தலைமையின் கரங்களை பலப்படுத்தி, தளராத துணிவோடும், உறுதிகுன்றா நம்பிக்கையோடும் முன்னெடுக்கப்படும் போராட்டம் தோற்றதாக சரித்திரம் இல்லை. மக்கள் மயப்படுத்தப்பட்ட சுதந்திரத்திற்கான போராட்டங்களின் வரலாறு, காலத்திற்கு ஏற்ற சிந்தனை, களத்திற்கு ஏற்ற முடிவு, உயர்ந்தபட்ச மனோபலம் போன்றவை அதனையே சுட்டிக்காட்டுகிறது.

வெளித்தெரிந்த வகையில் கொசோவோவின் சுதந்திரத்திற்கான போராட்டம் 10 வருடங்கள். குறித்த 10 வருடகாலப்பகுதியில் வன்முறைகாரணமாக வாழ்வை பறிகொடுத்த மக்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரம். அக்காலப் பகுதியில் 5 இலட்சம் மக்கள் கைதுசெய்யப்பட்டனர். ஒரு இனக்குழுமத்தின் 25 சதவீதமான மக்கள் ஒடுக்குமுறையாளர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணமபோயினர். அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் அவலங்களை சுமக்கும் இடம்பெயர்வும், அகதிவாழ்வும் அவர்களையும் விட்டுவைக்கவில்லை. உலகம் தன் நீதிக்கான கண்களை கொசோவோ நோக்கி திருப்பும் வரையும் கொசோவோ புலம்பெயர்ந்த சமூகமே அவர்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் முதுகெலும்பாக திகழ்ந்தது. அவர்கள் தனித்து போராட்டத்துக்கு வேண்டிய நிதியை மட்டுமன்றி சிறியளவிலான இராஜதந்திர செயற்பாடுகளிலும் முனைப்பு காட்டினார்கள். கொசோவோவின் சுதந்திரத்திற்கான கவனயீர்ப்பு போராட்டங்களை தேவையான காலகட்டங்களிலெல்லாம் சளைக்காமல் நடத்தினார்கள். குந்த ஒரு குடிநிலம் வேண்டும் என்றால் போராடு. சும்மா இருக்க சுதந்திரம் கிடைக்காது. போராட்டம் என்பது என்றைக்கும் கடினமான பாதைகளை தன்னகத்தே கொண்டது. கொசோவோவும் இதனைத்தான் சொல்லி நிற்கிறது.

இந்த நிலையிலேயே இலங்கைத் தீவுக்கும் கொசோவோவுக்கும் இடையிலான பொருத்தப்பாடுகளையும், வேறுபாடுகளையும் இணையத்தளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் இந்தப் பகுதி அலசுகிறது.

1850ஆம் ஆண்டளவில் பிரித்தானியர் நிர்வாக ரீதியாக யாழ்ப்பாண இராச்சியம், கண்டி இராச்சியம் மற்றும் கோட்டே இராச்சியம் ஆகியனவற்றை இணைத்திருந்தது. 1945இல் கொம்யூனிச இயக்கம் சேர்பியா, மொன்ரி நிக்ரோ மற்றும் கொசோவை இணைத்து யுகோஸ்லாவியாவை உருவாக்கியது. இதில் கொசோவோ 1913இலேயே சேர்பியாவுடன் பிணைப்பை ஏற்படுத்தியது. நாடுகளுக்கும், இராசதானிகளுக்கும் இடையில் வேறுபாடுள்ளமை இத்தருணத்தில் அவதானிக்கப்படவேண்டு

யுகோஸ்லாவியாவின் 10 மில்லியன் சனத்தொகையில் 8 மில்லியன் சேர்பியர்களும் 2 மில்லியன் அல்பேனியார்களும் காணப்பட்டார்கள். சேர்பிய மொழிபேசும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த மக்கள் சேர்ஃப்ஸ் என அழைக்கப்பட்டனர். கொசோவோ மக்கள் அல்பேனிய இனக்குழுமத்தை சார்ந்தவர்கள். அவர்களுடைய மொழி அல்பேனியன் ஆகவும் மதம் இஸ்லாமாகவும் இருந்தது. இலங்கைத் தீவின் சனத்தொகை பரம்பலை நோக்கும் போது, 20 மில்லியன் சனத்தொகையில் 16 மில்லியன் மக்கள் சிங்களவர்களாகவும், பௌத்த, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். ஏனைய 4 மில்லியன் மக்கள் தமிழ் பேசும் சமூகமாகவும் கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படு கின்றனர்.

வரலாற்று ரீதியான முக்கிய நிகழ்வுகளை எடுத்து நோக்குகையில், 1990இல் இடம்பெற்ற போல்கன் போர் மற்றும் இனச்சுத்திகரிப்பு, 199இ ல் இடம்பெற்ற கொசோவோ மக்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைகள், 1999இல் கொசோவோ மீதான நேட்டோவின் தலையீடு, 2006இல் மொன்ரி நிக்ரோ சுதந்திர தேசமாக பிரிந்து சென்றமை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.. இலங்கைத் தீவை எடுத்து நோக்குபோது கொழும்பு சுதந்திரத்தை கொண்டாடியதற்கு பின்னரான அடுத்த ஆண்டே(1949) தமிழரசுக்கட்சி அல்லது சமஷ்டி (பெடரல்) கட்சி தமிழ் மக்களால் உருவாக்கப்பட்டமையும், தமிழ் மிதவாதக் கட்சிகள்கூட அதுவும் 59 வருடங்களுக்கு முன்னரே சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை நாடியமை தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வெளிப்படுத்துவதோடு, 1976இல் இடம்பெற்ற தனிநாட்டுக் கோரிக்கைக்கான வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் பேசும் மக்களின் மக்களின் கோரிக்கையை வலுப்படுத்துகின்றது. அத்துடன் 1983இல் இடம்பெற்ற கறுப்பு ஜூலை என பெயரெடுத்த இனச்சுத்திகரிப்பும், 1987இல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைவான வடக்கு- கிழக்கு இணைப்பும், 2002 போர்நிறுத்த ஒப்பந்தமும், 2003இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவு தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கை தொடர்பில் உலக ஒழுங்கின் பார்வையில் தவிர்க்க முடியாத நிகழ்வுகளுள் முக்கியம் பெறுகின்றன.

1999 ஜி 8 நாடுகளின் அனுமதியுடன் கொசோவோ நேட்டோவால் நிர்வகிக்கப்பட்டது. கொசோவோ வாழ் அல்பேனிய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சுயஅமைப்பாக கொசோவோ விடுதலை இராணுவம் விளங்கியது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயிற்றுவிக்கப்பட்ட காவல்துறையினரும் அங்கு நிலைகொண்டுள்ளனர். அது அவ்வாறிருக்க கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் பேரினவாதக் கட்சிகள் 2002 போர்நிறுத்தத்தை கடுமையாக எதிர்த்தமையும் அதற்கான காரணங்களைுயும் இவ்விடத்தில் மீட்டி பார்ப்பது பொருத்தமாக இருக்கும். 2002 போர்நிறுத்த ஒப்பந்தம் அரச கட்டமைப்புகளை நிர்வாகம் செய்வதற்கு சுதந்திரத்தை உத்தியோக ரீதியாக வழங்கியது. அதன் அடிப்படையிலேயே கட்டுப்பாட்டுப் பகுதிகளும், எல்லைப் பரப்புக்களும் வகுக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையிலேயே குரங்குபாஞ்சான், மணிராசன்குளம் மற்றும் சம்பூர் போன்ற நிலப்பரப்புகள் சர்ச்சையை உண்டுபண்ணியிருந்தன. அத்துடன் சமதரப்பு அந்தஸ்துடனே சிறிலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இதுபோன்ற அம்சங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநாட்டு கோரிக்கையை வலுப்படுத்துவதாக பேரினவாதக் கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதில் உண்மை இல்லாமல் இல்லை.

ஆனால், கொசோவைவிட தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலுப்படுத்தக் கூடிய காரணிகள் இருப்பினும், அந்த காரணிகளை விட பிராந்திய அரசுகளின் தேசிய நலன், உலகமயமாக்கல், பூகோள அரசியல், சக்திமிக்க நாடுகளின் தேசிய நலன் என்பவை தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு பாதகமாகவுள்ளன.

இனக்குழும மோதுகையுடன் இலங்கைத் தீவின் அமைவிடத்தை தொடர்புபடுத்தும் போது அது சிறிலங்கா அர சாங்கத்துக்கு சாதகமானதாகவே உள்ளது. புதிய உலக ஒழுங்கில் தேசங்களின் `அமைவிடங்கள்’ முக்கியத்துவம் செலுத்துகின்றன. போல்கன்ஸ்லில் அமெரிக்காவின் உறுதியான காலூன்றலுக்கு கொசோவோவின் சுதந்திரம் வழியமைத்துள்ளது. அதன்காரணமாகவே ஏனைய சுதந்திரப் போரட்டங்களுடன் `ஒப்பிடும் போது பாதிப்புகள் குறைந்த’ கொசோவோவால் சுதந்திரத்தை விரைவில் பெறமுடிந்தது. ஆனால் ஈழப்போராட்டம் தன்னகத்தே தனித்துவத்தைக் கொண்டிருந்த போதும் பூகோள அரசியல், பொருளாதார அடிப்படையிலான உலக ஒழுங்கை நோக்கி செல்லவேண்டிய விடயங்களும், உலக ஒழுங்கை தன்பக்கம் திருப்புவதற்காக மேற்கொள்ளவேண்டிய விடயங்களும் மீதமாகவே உள்ளன. அதற்கான ஆரம்பப் புள்ளிகளை தற்போது அவதானிக்க முடிகின்ற போதும் அது பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் தொலைவிலேயே உள்ளது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை வெற்றிபெறுதல் என்பது நான்கு பிரதான சக்திகளுடன் தொடர்புபட்டுள்ளது. அவையாவன 1. போராட்டத்தை மேற்கொள்ளும் இனக்குழுமம், 2. சிறிலங்கா அரசாங்கம், 3. இந்திய அரசாங்கம், 4. அமெரிக்கா உள்ளிட்ட சர்வசர்வதேச சக்திகள்.

சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் மனித உரிமை குற்றச் சாட்டுக்கள், வெளிவிவகாரங்களுடன் தொடர்புடைய இராஜதந்திரம் எனச் சொல்லப்படுகின்ற ஆனால், புத்திசாதுர்யம் அற்ற செயற்பாடுகள், அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணுகின்ற. ஈரான், ரஷ்யா, சீனா ஆகியனவற்றுடனான இறுக்கமாக வளர்ந்து வரும் கூட்டமைப்பு ரீதியிலான உறவுகள் போன்றவைகள் தொடருமாக இருந்தால், வல்லமை மிக்கதும் உலக ஒழுங்கில் தாக்கத்தை செலுத்தக்கூடியதுமான நாடுகளுக்கு இலங்கைத் தீவில் ஒரு புதிய `வெளிப்படையான தெரிவு’ தேவைப்படும். அது தமிழீழ விடுதலைப் புலிகளாகவே இருக்கும். புலிகளின் திட்டமிடல், உபாய முறைகள், செயற்படுத்தல் முறைகள், ஒழுக்கத்துடன் கூடிய வலுவான கட்டமைப்பு, மனோபலம், தீர்மானம் எடுக்கும் விதம் போன்றவற்றை விரும்பியோ விரும்பாமலோ ஆச்சரியத்துடனேயே பார்த்து வருகிறது.

அப்படியான தெரிவு ஒன்று இடம்பெறுமாக இருந்தால் அதற்கு தடையாக இருக்கும் புலிகள் `பயங்கரவாதிகள்’ என்ற நிலைப்பாடும் மாறும். உலக வரலாற்றில் ஏன் கொசோவோ வரலாற்றிலேயே அது நடந்திருக்கிறது.

Kosovo Liberation Army (KLA) என கூறப்படுகின்ற கொசோவோ விடுதலை இராணுவமும் முன்னர் யுகோஸ்லாவிய அர சாங்கம் உட்பட வேறு தரப்புகளாலும் பயங்கரவாதிகளாகவே வர்ணிக்கப்பட்டிருந்தார்கள். அமெரிக்காவின் விசேட பிரதிநிதியான ரோபேட் ஜெல்பெட் KLA I பயங்கரவாதிகளாக கூறியிருந்தார். அமெரிக்க அரசாங்கம் உத்தியோகபூர்வமாக KLAஐ பயங்கரவாதிகளாக குறிப்பிடவில்லை என பின்னர் அவரே தெரிவித்திருந்தார்.

சுதந்திரப் போராளிகள், பயங்கரவாதிகள் என்பனவற்றுக்கான வேறுபாடுகள் அடிப்படைக்காரணிகளை விட சக்திமிக்க நாடுகளின் தேசிய நலனை பொறுத்தே வடிவம் பெறுகின்றது என்பதற்கு இது அண்மைய உதாரணம். கொசோவோவுடன் தொடர்புடைய பிறவிடயங்களை அடுத்த வாரம் அலசுவோம்.

மாற்றம் என்ற ஒன்றைத் தவிர உலகில் நிலையானதாக எதுவுமே இல்லை.

————————————————————————————

கடந்த வாரப் பத்தியிலேலே அமெரிக்கா, மேற்குலகு உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கு இலங்கைத் தீவில் புதிய “வெளிப்படையான தெரிவு” ஒன்று இருக்குமானால் அது தமிழீழ விடுதலைப் புலிகளாகவே இருக்கும் என தெரிவித்திருந்தேன். அத்துடன் அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருந்தேன். அது ஒரு நீண்டகால அடிப்படையை நோக்காகக் கொண்டே அலசப்பட்டிருந்தது. அந்த அலசலின் முடீவை சிறீலங்காவில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தால் மாற்றியமைக்க முடியும்.

ஆளுமை மிகு சர்வதேச சமூகத்தை பொறுத்தவரை தமக்கு சார்பான தரப்புக்கள், குறித்த நாடுகளில் ஆட்சிலிருப்பதனையே விரும்புகின்றன. அதற்கேற்றாற் போலவே அந்த நாட்டினை நோக்கிய அழுத்தங்களை அல்லது ஆதரவுகளை நல்குகின்றன. உதாரணமாக பார்ப்போமானால் பாகிஸ்தானில் பெர்சேவ் முசாரபின் ஆட்சியை விரும்பும் அமெரிக்கா தனக்;கு விருப்பமானவர்களையே ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நிலைநிறுத்தியுள்ளது. இவை குறுகிய காலத்துக்கு பொருந்துமே தவிர நீண்ட கால அடிப்படையில் அத்தனை பயன்மிக்க நடவடிக்கையல்ல. அமெரிக்காவின் பிரபலமான எதிரிகளில் மரணமடைந்த முன்னால் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹசைன் மற்றும் ஒசாமா பின் லாடன் போன்றோhர் அடங்குவார்கள். மேற்கூறிய இருவருமே அமெரிக்கா வளர்த்த கடாக்களே. அமெரிக்காவின் உளவு அமைப்பான ஊஐயு யினுடையதும் அமெரிக்கா வெளிவிவகார செயற்பாட்டாளர்களினதும் தோல்வியையே மேற்குறிப்பிட்ட இருவர் தொடர்பான விளைவுகள் எடுத்து காட்டுகிறது. அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையையே அமெரிக்கா கொசோவோவிலும் மேற்கொண்டுள்ளது. அதன் விளைவுளை அவதானிப்பதற்கு சற்று பொறுத்திருக்க வேண்டும்.

kosovo2
அனைத்திலும் முதன்மை பெறுகின்ற ஒரு விடயத்தை இந்த நேரத்தில் நினைவிற் கொள்ளல் வேண்டும். அதாவது, சுதந்திரத்திற்காய் தீராத தாகத்துடன் ஒரு இனக்குழுமம் போராடியது. விடுதலையே அவர்களின் மூச்சாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு இனம் அவர்களை வழிநடத்திய தலைமை மற்றுமொரு மறைமுக கட்டுப்பாடுகளுக்கு முகம்கொடுக்கக்கூடிய முடிவுகளுக்கு இடம்கொடுக்காது என நம்புவோமாக. ஏனெனில், போராட்ட இயக்கங்களின் விடுதலை நோக்கிய பயணம் என்பது நெருப்பாற்று நீச்சலுக்கு நிகரானது. ஏத்தகைய தடைவரினும் அதனை ஏதோவொரு விதத்தில் தகர்தெறிவதற்குரிய திறவுகோலை அவர்கள் கண்டுபிடிப்பார்கள். செய் அல்லது செத்துமடி என்ற தராக மந்திரம் விடுதலைப் போராளிகளுக்கு மிகப் பொருத்தமானதே. தேசிய விடுதலைக்காக அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள், அதற்காக அவர்கள் செய்யும் தியாகங்கள், அதற்குக் கொடுக்கும் விலை போன்றவை சதாரண மனிதர்களின் கற்பனைகளுக்கே எட்டாதவை. அது தொடர்பான ஆய்வுகள் கூட தோற்றுப் போகும்.

உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற, இடம்பெற்றுவரும் சுதந்திரப் போராட்டங்களை உற்று நோக்குகையில் மேற்குறிய பண்புகளை அவதானிக்க முடியும். மீண்டும் வல்லரசுகளின் “ஆட்சி நிறுவலுக்கு” வருவோம். சிறீலங்காவை எடுத்துக் கொண்டால், ஜே.வி.பி ஆட்சிக்கு வரவேண்டுமென சீன கனவுகாண்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியையே அமெரிக்காவும் மேற்குலகும் பெரும்பாலும் விரும்புகிறது. அவர்களுக்கு சார்பான செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி செய்யும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. சந்தர்ப்பவாத இராஜதந்திரத்தையும், மிதாவாத தன்மையையும் காட்டிக் கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாசுக்கான செயற்பாடுகளும் அதற்கான சர்வதேச சமூகம் என சொல்லப்படுவோரின் கைமாற்றையும் 2002 தொடக்கம் 2005 நவம்பர் வரையான காலப்பகுதியில் கண்டுகொள்ள முடிந்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க தூண்டிய காரணிகளை 2005 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த நவீன் திசநாயக்கா, மிலிந்த மொரகொட ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துக்கள் நியாயப்படுத்தியிருந்தன. அந்த நியாப்படுத்தலை வலுப்படுத்துவது போலவே அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரே~;ட உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல வெளியிட்ட கருத்து உறுதிப்படுத்துகின்றது. அதாவது ஒருதுளி இரத்தம் கூட சிந்தாமல் மௌன யுத்தம் புரிந்த ரணில் 6000 உறுப்பினர்களை புலிகள் அமைப்பிலிலுந்து வெளியேற்றி அவர்களை பலவீனமடையச் செய்தார் என நாடளுமன்றில் இறுமாப்புடன் கூறியிருந்தார். அதனுடைய பின்னணியில் வலுவான சர்வதேச சக்திகளின் சர்வதேச பாதுகாப்பு வலையமைப்பு வியாபித்திருந்தமை இன்று வெளிப்படையாகியுள்ள விடயம். அந்த சர்வதேச பாதுகாப்பு வலையமைப்பின் தாக்கத்தை உணர்தமையும் புலிகள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமைக்கான காரணமாக கருதப்படக்கூடியது.

என்ன கொசோவோவில் தொடங்கி வசிங்டனில் வந்து நிற்பது குழப்புகிறதா? வராலாற்று ரீதியான ஈழத்திற்கும் கொசோவோவிற்கும் மேற்கூறிய விடயங்கள் பொருத்தமானவை. கொசோவோவில் வலுவாகக் கட்டியமைக்கப்பட்ட இராணு வல்லமை காணப்படவில்லை. அதன் காரணமாக இராணுவ வலுக் சமநிலை என்ற பேச்சுக்கு அங்கு இடமிருக்கவில்லை. மாறாக உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் சுதந்திரப் போராட்டங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயமான அரசியல் தளத்தினையுடைய அதிகார எதிர்ப்பியக்கங்களின் பலம் முக்கியமானதாகக் காணப்பட்டது. அந்த பலமே பயனற்றதும், இழுத்தடிக்கும் நோக்கினையும் மையமாகக் கொண்ட பேச்சுவார்த்தையிலிருந்து கொசோவோ போராட்டத்தை தூரவிலக்கி வைத்திருந்தது. அது மட்டுமன்றி “ஜனநாயக மாயையை” தோற்றுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தேர்தலை மக்கள் புறக்கணிப்பதற்கும் வித்திட்டது. அத்துடன் கொசோவோவினுடைய சுதந்திரப் போராடத்தில்; இடம்பெற்ற, மற்றுமொரு முக்கிய அம்சம் பிறிஸ்ரினா(Pசளைவiயெ) பல்கலைக்கழக சமூகத்தின் அல்பேனியன் தேசியவாதத்தின் மேலெழுச்சி. 2000ன் ஆரம்பத்தில் கடும் ஒடுக்குமுறைக்கு மத்தியில் தமிழ் தேசியவாதம் எவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினூடே மறுமலர்ச்சி கொண்டதோ அதனையொத்த நிகழ்வு பிறிஸ்ரினா(Pசளைவiயெ) பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றது. விடுதலைப் போராட்டங்களின் அரசியற் செயற்பாடுகளின் உயிர்நாடிகளில் ஒன்றாக சர்வதேச ரீதியில் பல்கலைக் கழகங்கள் செயற்பட்டு வருவதை இவ்விரு சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன. பலகலைக் கழக சமூகங்களைப் பொறுத்தவரை தட்டிக் கழிக்க முடியாத பொறுப்பாகவே தேசசிய விடுதலைக்கான அவர்களின் பங்களிப்பு இருந்து வருகிறது. இதற்காக பிறிஸ்ரினா(Pசளைவiயெ) பல்கலைக்கழக சமூகம் சந்தித்த இழப்புக்கள், விடுதலைக்காக கொடுத்த விலை போன்றவை அளப்பரியவை. இழப்புக்களைக் கண்;டு அவர்கள் பின்வாங்கவில்லை. தமக்குரிய பொறுப்புகளையும், கடமையையும் முன்னிலைப்படுத்திய போது அவர்களுடைய கல்விச் செயற்பாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டது. விளைவு 800 விரிவுரையாளர்கள் அவர்களது பணியிலிருந்து அகற்றப்பட்டார்கள். மொத்த மாணவர் தொகையான 23 ஆயிரத்தில் 22,500 மாணவர்கள் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளில் பங்குபற்றுவதிலிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அல்பேனியன் பண்பாட்டு சுயாட்சி வெளிப்படுத்தல் சுதந்திரம் திட்டமிட்ட முறையில் ஒடுக்கப்பட்டது. ஒரு இனக்குழுமத்தின் மொழியையும், பண்பாட்டையும் சீர்குலைப்பதனூடாக குறித்த இனக்குழுமத்தை அழிக்கும் செயற்பாடு விரைவு, இலகு பெறும். தமிழர்களுடைய போராட்ட வரலாற்றிலே மறக்க முடியாத 1956 சிங்கள மட்டும் சட்டம் தமிழ் தேசியத்தின் எழுச்சிக்கு வித்திட்டது. மொழியுரிமைப் போராட்டம் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமாக மிளிர்தமை இனவிடுதலையில் மொழியின் அடித்தளமாவுள்ளதை எடுத்தியம்புகிறது. ஊடாகவியலாளர்களுடைய வாழ்வியல், ஊடகங்களின் நிலைப்பாடு என்பனவும் இலங்கைத் தீவில் நிலவுவது போன்றதொரு நிலையே காணப்பட்டது. அல்பேனியன் மொழிப் பத்திரிகையான “றிலின்ட்யா” தடைசெய்யப்பட்டது. தொலைக்காட்சி, வானொலிகளின் சேவைகள் நிறுத்தப்பட்டது. லெனின்கிராட், கொசோவோ, இலங்கைத் தீவு எதுவாக இருந்தாலும் சரி, தேசிய விடுதலையில் ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த உயிரை துச்சமென மதிக்கும் தன்மையையே எடுத்து காட்டுகிறது. ஆதன் காரணமாகத்தான் ஒடுக்குமுறையாளர்களின் துப்பாக்கிகள் பேனா முனைகளின் உயிரை காவுவுவதில் முனைப்புக் காட்டுகின்றன.

ஒவ்வொரு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் தனிப்பட்ட தனித்துவமும், மகத்துவமும் உள்ளது. அதேபோல் சில பொருத்தப்பாடுகளும் உள்ளது. அத்தகைய சில பொருத்தப்பாடுடைய போராட்டப் போக்கையே மேலே அலசினோம்.

உலகளாவிய ரீதியில் அமெரிக்கா இஸ்லாம் மதத்துக்கு எதிரானது என்ற கருத்து வலுவாகவுள்ளது. ஆனால், அமெரிக்காவுக்கு நிரந்தரமான எதிரியென்று எதுவுமே இல்லையென்பதை இஸ்லாம் மதத்தின் மீது பற்றுக்கொண்டு அதனை அடிப்படையாகவும் கொண்டு நடத்தப்பட்டு சுதந்திரத்தை அடைந்துள்ள அல்பேனிய இனக்குழுமத்தினரின் போராட்டம் வெளிப்படுத்துகின்றது. அமெரிக்காவினுடைய தேசிய நலனென்பது பிராந்தியத்துக்கு ஏற்றபடி குறிப்பாக காலத்துக்கு அமைவாக மாற்றமடையும். அதில், மதம், இனக்குழும், பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகம் போன்றவையெல்லாம் நிலையானவை அல்ல. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடியவர் என எதிர்பார்க்கப்படுபவர்களில் முன்னிலையில் உள்ளவர்களான கிலாரி கிளிங்கள் மற்றும் பரக் ஒபாமா ஆகியோருக்கு இடையிலான பிரச்சாரப் போர் மேற்கூறிய கருத்தை மெய்ப்பிக்கிறது.

விடுதலைப் போராட்ங்கள் கற்கவேண்டிய ஏனைய அனுபவங்களையும், சர்வதேச சமூகத்தின் தலையீடுகளின் விளைவுகளையும் அடுத்த வாரம் அலசுவோம்.

————————————————————————————

சிறீலங்காவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு சுமார் 21 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1920 களின் நடுப்பகுதியில் தமிழர்களுக்கான ப+ரண சுயாட்சியை வலியறுத்தி யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர்களுடைய போராட்டம் 2008 ல் ஒரு புதிய பரிமாணத்துக்குள் நுழைந்துள்ளது. இந்த நுழைவு என்பது சாதக பாதக தன்மைகளை தன்னகத்தே கொண்டு காலத்திற்கு ஏற்ற வடிவங்களை சுமந்து நகர்கிறது. காலத்திற்கு ஏற்ற வடிவங்கள் என்பது மேர்துகையுடன் சம்பந்தப்பட்ட தரப்புக்ளை சர்வதேச சமூகம் உட்பட்ட தரப்புக்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே சுழல்கிறது. எமக்கு முன்னால் பரந்துள்ள காலநீட்சிக்குள் சிக்குண்டு போயுள்ள இனக்குழும மோதுகையென்பது இன்று சர்வதேச சமூகத்தின் தேசிய நலனை முதன்மைப்படுத்தும் பொறிக்குள் அகப்பட்டுப் போயுள்ள துர்ப்பாக்கிய நிலையை அவதானிக்க முடியும்.

மேற்குறிய நிலைக்கு ஒப்பான சூழல் எத்தகையதாக கோசோவோவில் காணப்பட்டது என்பதை கீழே நோக்குவோம். கொசோவோவின் சுதந்திரத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 1244 க்கும் குறிப்பாக 1244 ன் பிரிவு 10 க்கும் இடையில் இறுக்கமான பிணைப்பு நிலவுகிறது. பிரிவு 10 “உறுதியான சுயாட்சி”தொடர்பாக. விரிவாக விபரிக்கின்றது. கொசோவோவின் சுதந்திரத்தின் அடிநாதமாக திகழ்பவற்றில் “உறுதியான சுயாட்சி”தொடர்பான பிரிவு 10 மிக முக்கியமானது. சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் 2002 ல் தாய்லாந்தின் சட்டாகிப் துறைமுகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் “உறுதியான சுயாட்சி” தொடர்பாக ஆராயப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை சர்வதேச சமூகத்தால் இலங்கைத் தீவினுடைய இனக்குழும மோதுகைத் தீர்வுக்கு அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் “உறுதியான சுயாட்சி” முன்மொழியப்பட்டு வருகிறது. இலங்கைத் தீவினுடைய இனக்குழும மோதுகைக்கு தீர்வாக “உறுதியான சுயாட்சி” யை சர்வதேச சமூகம் முன்மொழிகின்றது என்ற அடிப்படையில் தமிழர்ளுக்குள்ள சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கப் போகிறது என்ற நம்பிக்கைக்கு தமிழர் தரப்புகளோ, அல்லது நாட்டை துண்டாடுவதற்கு சர்வதேசம் சமூகம் தயாராகி விட்டது என்று தேவையற்ற அச்சத்திற்கு சிங்களத் தரப்புகளோ இடம்கொடுக்க வேண்டிய அவசர சூழல் இன்னும் ஏற்படவில்லை.

ஒரு விடயத்தை சர்வதேச சமூகம் புரிய ஆரம்பித்துள்ளது. அதாவது தமிழர்களுடைய போராட்டத்தை புறந்தள்ள முடியாது என்பதே அதுவாகும். ஆனால், புரிய ஆரம்பித்துள்ள என்ற அடிப்படையில் அவர்கள் நியாயமான முறையில் செயற்படுவார்கள் என எதிப்பார்க்க முடியாது. ஆவர்களுடைய நியாயத்தில் பிரிக்க முடியாததாக அவர்களின் தேசியநலனும் ஒன்றுபட்டுள்ளது. அதேவேளை தனியரசுகளை அங்கீகரிப்பதற்கான சர்வதேச சூழல் இரண்டாயிரத்தின் நடுப்பகுதியோடு தோற்றம் பெற்றுள்ளதை மறுதலிக்க முடியாது. ஆதன் மையங்களாகவே மொன்ரிநிக்ரோ, கிழக்கு தீமோர், கோசோவோ மற்றும் சீனாவிற்கு அச்சத்தை உண்டுபண்ணியுள்ள தாய்வான் சுதந்திரப் பிரகடனம் செய்யப் போகிறது என்ற செய்தி போன்ற நகர்வுகளை அவதானிக்க வேண்டும். அத்துடன் இவையெல்லாவற்றுக்கும் இடையில் புதைந்து போயுள்ள விடயமாக எனது பத்தியில் அடிக்கடி வலியுறுத்தி வருகின்ற சக்திமிக்க நாடுகளின் தேசியநலன் முன்னிலை வகிப்தையும் கவனிக்க வேண்டும். போல்கன் பிராந்தியத்திலும் சர்வதேச ஒழுங்கு ரீதியாகவும் தனக்கு சவாலாக வளர்ந்து வரும் ர~;யாவுக்கு நெருக்கடியை கொடுத்து தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எத்தகைய கையாளலை அமெரிக்கா கொசோவோ விடயத்தில் கையாண்டதோ, அத்தகைய செயற்பாட்டைத்;தான் தாய்வான் நோக்கிய தனது கொள்கையிலும் செய்யக் கூடும். ஏனெனில், ஆசியா பிராந்தியத்தில் தனக்கு சவாலாக சீனா வளர்ந்து வருவதோடு பொருளாதார ரீதியில் தனக்கு சவால் மிக்க நாடாகவே சீனா மாறிவிட்டமையும் அமெரிக்காவின் அத்தகைய முடிவுக்கு வழிவகுக்கும். அமெரிக்காவின் அத்தகைய முடிவை மாற்றுவதற்கு “ஒரு சீனா” என்ற கொள்கையை முன்வைத்து அமெரிக்காவில் நடத்தப்பட்டு வருகின்ற போராட்டங்கள், அமெரிக்க செனற்றுக்கு கொடுக்கப்பட்டுவரும் அழுத்தங்கள் போதாது. ஆமெரிக்காவின் நலனை வலுப்படுத்தக் கூடிய பெரியதொரு விட்டுக்கொடுப்பை சீனா செய்ய முன்வருமானால் மட்டுமே அதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளது. ஆனால், அதற்கு சீனா முன்வருவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லையென்பதையே சீனா மேற்கொண்டு வரும் அண்மைய நகர்வுக்ள் வெளிப்படுத்துகின்ன.

கொசோவோவினுடைய சுதந்திரப் பிரகடனத்தை தாய்வானும் அங்கீகரித்தது. ஆனால், தாய்வான் சுதந்திரப் பிரகடனம் செய்யுமிடத்து கொசோவோ அதனை அங்கீகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன. ஏனெனில், சீனாவினுடன் நல்லுறவை பேணி தனது தேசிய நனை வலுப்படுத்துவதற்கே கொசோவோ திட்டமிடுவதாக மேற்கத்தேய ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்தநிலையில், மீண்டும் இலங்கைத் தீவின் விடயங்களுக்கு வருவோம். தமிழர்களுடைய பிரச்சினைக்கு 13 ஆவது சட்டமூலமோ இல்லையேல் 17வது திருத்த சட்டமோ உரிய தீர்லை வழங்கப் போவதில்லையென்பது இலங்கைத் தீவினுடைய இனக்குழும மோதுகை தீர்வை ஆழமாக ஆய்வு செய்பவர்களுக்கு புரியும். அதேபோல் முக்கிய கட்சிகள் இல்லாத ஆனால் சர்வகட்சி என அழைக்கப்படுகின்ற சர்வகட்சி மாநாடும் ஒரு “சளாப்பலுக்கான” இழுத்தடிப்பு நாடகம் என்பதை அதன் மாதிரி நாயகன் அமைச்சர் திஸ்ஸவித்தாரண அவர்களின் சோகக்கதைகளினூடகவே தெரியவருகிறது. ஆதனை ஆரவாரப்பட்டு வரவேற்ற சர்வதேச சமூகமே இன்று அது தொடர்பாக அடக்கி வாசிக்க முற்படுகிறது. ஆகவே அவர்களுடைய தேசிய நலனையம் கருத்தில் கொண்ட தலையீட்டுக்கு வழிவகுப்பதாகவே “உறுதியான சுயாட்சி” என்ற முன்மொழிவு காணப்படுகிறது. இது தமிழர்களின் தனியரசுக்கு வழிவகுக்குமா அல்லது ஒற்றையாட்சிக்குள்ளேயே கொண்டுபோய் நிறுத்துமா என்பதை சர்வதேச சூழலும், சர்வதேசத்தை நோக்கிய சிறீலங்கா அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது.

நாடுகள் தொடர்பாக அமெரிக்கா வருடா வருடம் வெளியிட்டு வருகின்ற அறிக்கையில் இம்முறை சிறீலாங்கா அரசாங்கத்தின் மீது கடுமையாக குற்றம் சாட்டாப்பட்டுள்ளமை, ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா சபையின் மனித உரிமைக் தொடர்பான கூட்டத்தொடரில் சிறீலங்காப் பிரதிநிதிகள் சந்தித்து வரும் சவால்கள், சமநேரத்திலேயே அழுத்தத்தை உண்டுபண்ணக்கூடிய வகையில், சிறீலங்காவிற்கு எதிர்காலத்தில் வழங்கக் கூடிய உதவிகள் தொடர்பாக ஆராய ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு கொழும்பு வந்துள்ளமை மற்றும் எதிர்வரும் காலத்தில் மேற்குநாடுகளின் உதவிகளை தவிர்த்து பிராந்திய நாடுகளிலேயே கடனுக்கும் உதவிகளுக்கும் “தங்கியிருக்கப்” போவதாக வெளிவிவகார செயலாளர் பாலித கொகன்ன அவர்கள் கருத்து தெரிவித்துள்ளமை போன்ற நகர்வுகள் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறிய புதிய பரிமாணத்துக்குள் நழைந்துள்ள அண்மைய நகர்வுகள் ஆகும். இவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சாதகமான விடயங்களாவே எதிர்க்கட்சி உட்பட்ட பல்வேறு தரப்புகளாலும் நோக்கப்படுகிறது. சுதந்திரப் பிரகடனங்களை நோக்கிய பாதையில் மேற்குறிப்பிட்டது போன்ற நகர்வுகள் படிக்கற்களாக அமைந்துள்ளதை வரலாற்றை புரட்டிப் பார்க்கின்ற போது அறிய முடியும்.

கொசோவோவிற்கான சுயாட்சி திட்டத்தை தொடர்சியாக சுலோபோடன் மிலேசெவிக் நிராகரித்து வந்ததையடுத்து, பெல்கிரேட்டுக்கான தனது சிறப்பு தூதுவராக அமர்த்தியிருந்த ரிச்சாட் கோல்புறுக்கை உடனடியாக பெல்கிரேட்டிலிருந்து திரும்புமாறு அப்போதைய(1999) அமெரிக்க ஜனாதிபதி பில் கினிங்டள் அவர்கள் கட்டளையிட்டிருந்தார். அதேயாண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றதைத் தொடர்ந்து சர்வதேச கண்காணிப்பாளர்களும் கோசோவோவை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. சர்வதேச கண்காணிப்பாளர்களின் வெளிறே;றத்தைத் தொடர்ந்து 1999 பெப்ரவரியில் யுகோஸ்லாவியாவின் 4500 இராணுவம் 60மேற்பட்ட யுத்த டாங்கிகள் மற்றும் ஏனைய போராயுதங்களுடன் கொசோவோ எல்லைகளை நோக்கி விரைந்தது. இதனால் அல்பேனிய இனத்தவர்கள் அண்டைநாடுகளில் ஒன்றான மசிடோனியாவுக்குள் அகதிளாக தஞ்சமடைந்தனர். இவ்வாறான நிலைமைகளையடுத்து, கொசோவோ மோதுகைக்கு தீர்வுகாணும் முகமாக முன்வைக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்படிக்கையை சேர்பியா ஏற்றுக்கொள்ள மறுத்தால், நேட்டோ படைகள் சேர்பியாவை தாக்க தயாராக இருப்பதாக புதிய எச்சரிக்கையொன்றை பில்கிளிங்டன் அவர்கள் விடுத்தார்.

மேற் பந்தியிலே கூறப்பட்ட பலவிடயங்களினையொத்த சம்பவங்கள் இலங்கைத் தீவிலும் அண்மையில் இடம்பெற்று வருகிறது. இது தொடர்பாக சர்வதேச சமூகம் எத்தகைய நிலைப்பாட்டை எடுத்து வருகிறது மற்றும் இலங்கைத் தீவிற்கு பொருத்தப்பாடான கொசோவோவின் ஏனைய விடயங்களை அடுத்த வாரம் அலசுவோம்.

————————————————————————————

மார்ச் 17, இந்த தினத்திற்காய் பலநாள் காத்திருந்தேன். விடுதலை என்பது பலத்த விலைகொடுப்பின் பின்னர் இடம்பெறுகின்ற ஒரு பிரசவம். அது அடையப்படும் வரை அனுபவிக்கின்ற வலிகளுக்கு எல்லையில்லை. அதேபோல் விடுதலையை அடைந்த பின் கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. விடுதலைக்கான பாதையை சரிவர அமைக்காவிட்டால் விடுதலை அடைந்த பின் புதிய போராட்டங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும். தங்கியிருத்தலையும் தயவான வேண்டுகோள்களையும் தவிர்த்து தன்காலே தனக்குதவி என்ற அடிப்படையோடு தனது உரிமைக்கான போராட்டத்தில் நியாயப்பாடுகளை எடுத்துச்சொல்லி வளைந்து கொடுக்காமல் நகர்த்தப்படும் போராட்டங்கள் பின்பற்றக்கூடிய வரலாறுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும்.

கொசோவோ சுதந்திரப் பிரகடனம் மேற்கொண்டு ஒரு மாத நிறைவை கடந்த மார்ச் 17 நிறைவுசெய்தது. பெரும் ஆரவார நிகழ்வுகள் எதுவும் ஒரு மாத பூர்த்தியை முன்னிட்டு அங்கு இடம்பெறவில்லை. மாறாக சேர்பியர்கள் பெரும்பான்மையாக வாழும் வடகொசோவோவின் மிற்றோவிகாவில் களோபரங்கள் நிறைந்த ஆர்ப்பாட்டங்கள்தான் நடைபெற்றன. கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்கும் சக்திகள் கொசோ வோவையும் அதற்கு ஆதரவான சர்வதேச கூட்டணிகளையும் நெருக்கடிக்குள் தள்ளி குழப்பத்தை உண்டுபண்ணும் முகமாக பல்வேறு வடிவங்களில் காய்களை நகர்த்தி வருகின்றன. இதன் பின்னணியில் ரஷ்ய- சேர்பியா கூட்டணி வலுவாக செயற்பட்டு வருகின்றன. நெருக்கடிகள் சர்வதேச ரீதியாகவும் கொசோவோவிற்குள்ளேயும் வியாபிக்க தொடங்கியுள்ளன. ரஷ்ய- சேர்பியா கூட்டணியின் சர்வதேச ரீதியான தந்திரோபாய நகர்வுகள் வெற்றியளிப்பதற்கான சாத்தியப்பாடுகள் வலுகுறைவாகவே காணப்படுகிறன. அதேவேளை, மிற்றோவிகாவில் நடந்த, நடைபெறப்போகின்ற வன்முறைகளை கட்டுப்படுத்துவது கடினமாகவே இருக்கும்.

kosovo
கொசோவோவின் சுதந்திர பிரகடனத்திற்கு பின்னரான வன்முறைத் தொடரின் முதல் அத்தியாயமே கடந்த மார்ச் 17 இல் இடம்பெற்ற வன்முறைகள். ஒன்பது வருடங்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் சபை கொசோவோவை நிர்வகிக்கத் தொடங்கிய பின் இடம்பெற்ற மிக மோசமான வன்முறையாக இந்த வன்முறை சர்வதேச ஊடகங்களால் நோக்கப்படுகிறது. இதில் 20 ஐக்கிய நாடுகள் சபை காவல்துறையினரும் 8 நேட்டோ சமாதானப் படையினரும் காயமடைந்திருக்கிறார்கள். வன்முறை உருவெடுத்த நீதிமன்ற வளாகம் மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அங்கு சேர்பியர்களால் ஏற்றப்பட்ட சேர்பியக் கொடியும் ஐக்கிய நாடுகள் சபை பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்களில் சேர்பியர்களான முன்னால் நீதிமன்ற ஊழியர்கள், சேர்பிய உயர்கல்வி பயிலும் மாணவர்கள், ஆத்திரத்துடன் காணப்படும் ஏனைய இளம் சமுதாயத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து சேர்பியர்கள் பெரும்பான்மையாக வாழும் கொசோவோவின் வடபகுதியையும் அல்பேனிய இனத்தவர் வாழும் தெற்குப் பகுதியையும் இணைக்கும் இபர் ஆற்றுப் பாலம் மூடப்பட்டுள்ளது. நேட்டோவின் வான் தாக்குதல் இடம்பெற்றதை நினைவுகூரும் மார்ச் 19 காலப்பகுதி எப்போதும் பதற்றம் நிறைந்ததாகவே போல்கன்சில் காணப்படுகிறது. அண்மைய வன்முறைகளுக்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட தரப்புகளின் தவறுகளே வன்முறைக்கு தூபமிட்டன. ஆனால், வழக்கம் போலவே சக்திமிக்க சர்வதேச சமூகம் தவறை யார் மீது அல்லது எந்த நாடு மீது சுட்டிக்காட்டுகிறதோ அவரோ அல்லது அந்த நாடே குற்றத்தை இழைத்ததாகக் கருதப்படும் மனோபாவம் இம்முறையும் வளர்ந்து வருகிறது.

மார்ச் 17 சம்பவங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வெளிவிவகாரங்களுக்கான கொள்கை வகுப்பாளர் ஜவியர் சொலன் அவர்கள், “இந்த குற்றச் செயல்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவை கொசோவோவின் நல்லதொரு எதிர்காலத்தை நோக்கிய முன்னெடுப்புகளை அச்சுறுத்துகின்றன” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்திலே ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ என்ற முக்கூட்டு அணியின் தேசிய நலன்களை கருத்தில் கொண்ட காய்நகர்தல்களும் மேற் கூறிய முக்கூட்டு அணி, சுதந்திர தேசங்களின் உருவாக்கத்துக்கு பொதுவான நீதியின் அடிப்படையில் செயற்படாமல் உச்சகட்ட சுயநலனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றமையும் நினைவிற்கொள்ளப்பட வேண்டும். கொசோவோ தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல, கொசோவோவின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைவணங்குகிறேன். ஆனால், கொசோவோவின் சுதந்திரம் என்பது முக்கூட்டு அணியின் சுயநலனை முதன்மைப்படுத்தியதாக உள்ளது என்ற துர்ப்பாக்கிய சேதியையும் பகிர்கின்றேன். ஏனெனில், இவை சுதந்திரத்திற்காய் போராடும் இனக் குழுமங்களுக்கு தேவையானதொரு பாடமாக இருக்கும். இத்தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒரு விடயத்தை காலத்தின் தேவைகருதி மீளவும் ஒருமுறை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

சூடானில் தென்சூடான் மற்றும் டாபூர், அல்ஜீரியாவில் பேபர்ஸ் மற்றும் பயபிறா, தாய்லாந்தில் தென் தாய்லாந், சீனாவில் உய்குர், திபெத், தாய்வான், இந்தோனேசியாவில் மலுகு மற்றும் செலிபெஸ் தீவுகள், ஈரானிலுள்ள அக்வஸ் அரேபியர்கள், ரஷ்யாவில் செச்சினியா மற்றும் டயெஸ்ரன், துருக்கியில் குர்திஸ், இந்தியாவில் காஷ்மீர், நாகலாந்து போன்றவை மற்றும் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் போன்றவற்றினை விஞ்சி ஒப்பிட்டளவில் பாதிப்புகள் குறைந்த கொசோ வோவின் போராட்டம் முதன்மைபெற்றமையென்பது வல்லரசுகளுக்கிடையிலான போட்டியையும் உலக ஒழுங்கில் ஏற்படத் தொடங்கியுள்ள மாற்றத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ என்ற அணிகளின் தேசிய நலன்களை கருத்தில் கொண்ட காய்நகர்தல்களையுமே பறைசாற்றுகிறது.

சர்வதேச நெருக்கடிகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் புருசல்சை தளமாகக் கொண்ட Uvolrvcouxvci ?ru&u& Krxah எனக் அழைக்கப்படும் சர்வதேச நெருக்கடி குழுவின் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தின் ஒருமாத நிறைவைக் குறிக்கும் அறிக்கையில், கொசோவோவின் பிரதம மந்திரி ஹசிம் தசி வாசித்த சுதந்திரப் பிரகடனத்தின் பெரும்பகுதி அமெரிக்காவினாலேயே எழுதப்பட்டது என்றும் உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட கொசோவோ கொடியினை தெரிவுசெய்வதிலும் அமெரிக்கா திரைமறைவில் செயற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இத்தகைய செயற்பாடுகள் தொடரின் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டப்பட்டமை கவனிக்கத்தக்கது.) இவ்வுதாரணங்கள் சுதந்திரத்துக்காய் பிற சக்திகளில் தங்கியிருப்பதன் விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றன. கொசோவோ சுதந்திரப் பிரகடன ஒரு மாத நிறைவை உற்றுநோக்கினால் நகர்த்தப்படும் காய்கள் கொசோவோ மக்களின் நலன்களைவிட சக்திமிக்க நாடுகளின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே நகர்த்தப்படுவதை புரியலாம்.

கொசோவோவின் சுதந்திரத்திற்காய் தியாகங்களும் அர்ப்பணிப்பும் நிறைந்த போராட்டத்தை நடத்திய இயக்கம் `முடுயு’ என அழைக்கப்படும் கொசோவோ விடுதலை இராணுவம். இதன் தலைவராக இருந்து விடுதலைக்காக தன்னுயிரை ஈர்ந்தவர் அடெம் ஜஸ்ஹரி ஆவார். கொசோவோவின் சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அடெம் ஜஸ்ஹரி அவர்களின் நினைவுதினம் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. ஆனால், சுதந்திரம் அடைந்த பின் அனுஷ்டிக்கப்பட்ட முதலாவது நினைவு தினமோ வழமைக்கு மாறாக குறைந்தளவான மக்கள் தொகையுடன் எழுச்சி நிகழ்வுகள் எதுவுமின்றி அமைதியான முறையில் இடம்பெற்றது. இதில் தேசியவாதத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் நடைபெறவில்லை. இதில் கலந்துகொண்ட பலர் அடெம் ஜஸ்ஹரியின் முகம் பொறிக்கப்பட்ட ரி-சேட்டுக்களை அணிந்திருந்தனர். அமெரிக்காவின் பின்னணியுடன் கைச்சாத்திடப்பட்ட ஆச்சே- இந்தோனேசியா புரிந்துணர்வு உடன்பாட்டுக்குப் பின் ஆச்சே மக்களாலேயே அல்லது அதன் முன்னால் போராளிகளாலோ ஆச்சே மக்களின் வாழ்விற்காய் மரணித்த போர் வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களால் பாரம்பரியமாக பேணப்பட்டு வந்த கொடி ஏற்ற முடியாமல் போனமையும் குறிப்பிடத்தக்கது. இதையொத்த செயற்பாடுகளினூடாக சுதந்திரத்திற்காய் உண்மையிலேயே போராடிய வீரர்களைவிட தமது பங்குதான் குறித்த தேசத்தின் சுதந்திரத்தில் பிரதான பங்கு வகித்தது என்ற தோற்றப்பாட்டை முன்னிறுத்த சர்வதேச சக்திகள் முயல்கின்றன. இதனூடாக குறித்த இனக்குழுமங்களின் பார்வையை தமக்கு சாதகமாக்கி தமது நலன்களை அடைவதற்கு ஏற்ற சூழலை உள்ளக ரீதியாகவும் ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டது. இந்தியா இன்றைக்கும் தனது சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினத்தை எழுச்சியுடன் அனுஷ்டிக்கிறது என்றால் அது தனது சுதந்திரத்திற்காய் தனித்துத் தானே போராடியதன் பயன் என்பது புரியும்.

கொசோவோ சுதந்திரப் பிரகடனம் மேற்கொண்டு ஒரு மாதம் நிறைவடைந்த வேளையிலே 28 நாடுகள் அதனை அங்கீகரித்துள்ளன. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் 16 நாடுகளும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 6 நாடுகளும் உள்ளடங்கும். கொசோவோவின் எழுச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்பட்ட அளவை விட குறைந்தளவான பங்களிப்புகளையே சர்வதேசம் நல்கி வருகிறது.

உதவிகள் கூட தமது நலனை மையப்படுத்துகின்ற அதேவேளை, கொசோவோ தலைமையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நீண்டகால நோக்கை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் உயர்மட்ட பிரதிநிதிகளின் விஜயம் , முதலீடுகள் , வர்த்தக உடன்படிக்கைகள் கைச்சாத்து மற்றும் ஏனைய உதவிகள் இடம்பெற்று வருகின்றன.

கொசோவோவின் எழுச்சியை நோக்காகக் கொண்டு 120 நாளை இலக்காகக் கொண்ட ஆக்கபூர்வ நிலைமாற்றத் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு அம்சமாக அமுல்படுத்தப்படவுள்ள பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்காக ஐ.நா.சபை செயலாளரின் விசேட பிரதிநிதி மர்ட்டி அக்திசாரி , சர்வதேச சிவிலியன் பிரதிநிதிகள் குழுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் , ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தை நிலைநாட்டும் தூதுக்குழுவினர் மற்றும் நேட்டோ ஆகிய உயர்மட்ட பிரதிநிதிகள் கொசோவோவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இவர்களுடைய வருகைகள் எல்லாம் கொசோவோ மக்களின் எதிர்பார்ப்பினை இதுவரை பூர்த்தி செய்யத் தொடங்கவில்லை.

உயர்மட்ட பிரதிநிதிகளான ஜாவியர் சொலான, சுவீடன் வெளிவிவகார அமைச்சர் ஹால பில்ட் மற்றும் நேட்டோ செயலாளர் ஜெனரல் ஜப் டி ஹீப் பெஷர் ஆகியோரும் கடந்த ஒரு மாதத்துக்குள் கொசோவோவிற்கு விஜயம் செய்த உயர்மட்ட பிரதிநிதிகள் ஆவர். ஆனால், 120 நாளை இலக்காகக்கொண்ட ஆக்கபூர்வ நிலைமாற்றத் திட்டம் இன்னும் தடுமாற்ற நிலையைத் தாண்டவில்லை.

கொசோவோ தனது சுதந்திரப் போராட்ட காலத்திலே தூரநோக்குடன் செயற்படாமையும் இதற்கான பிரதான காரணமாகும். தனியரசுக்கான அடித்தளமாக இருக்கக்கூடிய ஒரு நிழல் அரசு அங்கே முறையாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை. குறிப்பாக நீதி, நிர்வாகத்துறை, காவல்துறை , பொருளாதாரக் கட்டுமானங்கள் உட்பட்ட ஏனைய கட்டுமானங்கள் அங்கு நிறுவப்பட்டிருக்கவில்லை. அத்துடன், அவற்ற நிர்வகிக்கக் கூடிய அறிவுறுத்திறனும் அங்கு காணப்படவில்லை. அப்படிப்பட்ட ஒரு தேசத்தை சர்வதேசம் அவசரப்பட்டு அங்கீகரித்ததற்கான மர்மம் என்ன என்பது விரைவில் வெளிவரும்.

சுதந்திரப் போராட்டங்களை நடத்தும் இயக்கங்கள் சுதந்திரப் பிரகடனங்களை மேற்கொள்ளும் போது பூகோள அரசியலை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கை சரிவரக் கணித்து தூரநோக்குடன் மேற்கொள்ள வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட அதன் கூட்டணியை நம்பியே கொசோவோ தனது சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொண்டது. குறித்த சில சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கும் தேசங்களுக்கு சுதந்திர பிரகடனத்துக்குத் தேவையான நிழல் அரசு இருக்கின்ற போதும் சர்வதேசம் ஏன் அத்தகைய தேசங்களை அங்கீகரிக்க முன் வரவில்லை என்ற வினா தற்போது முனைப்படைந்து வருகிறது.

சர்வதேச சமூகம் அந்தத் தேசங்களை நோக்கி இதுவரை உரிய நகர்வை மேற்கொள்ளவில்லை. ஏனெனில் , அவர்களுக்குரிய தேசிய நலன் அதற்குள் புதைந்திருக்கவில்லை. ஆனால், உலக ஒழுங்கின் இயங்கு தளம் தனது தேசிய நலனை பூர்த்தி செய்யும் உத்தியுடன் போல்கன்ஸில் இருந்து ஆசியாக் கண்டம் நோக்கி நகரத் தொடங்கி விட்டது. அந்த நகர்வு புதிய தெரிவுகளுக்கு வழியமைக்கும். அது இலங்கைத் தீவில் எத்தகைய மாற்றத்தை உண்டுபண்ணும் என்ற எதிர்வுகூறல்களை உலக ஒழுங்கின் தேசிய நலன்களை அடிப்படையாக வைத்து அடுத்த வாரப் பத்தியிலே அலசுவோம்.

————————————————————————————

கொசோவோ – சுதந்திரம் சொல்லும் பாடம் என்னும் தொடர் பத்தியின் இறுதி அத்தியாயத்திலே சந்திக்கிறோம். இந்தத் தொடரிலே கொசோவோவினுடைய பின்னணி, முக்கியமான வரலாற்று நிகழ்வுகள், சர்வதேச தலையீடுகள், கொசோவோ விடுதலையில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் பங்களிப்பு , அடக்கு முறையின் செயல் வீச்சு, அதில் குறிப்பாக சேர்பியாவின் பங்கு, கொசோவோ விடுதலைப் போராட்டம் சந்தித்த சவால்கள், சாதிப்புகள், அவலங்கள், அக்கிரமங்கள், அநியாயங்கள், கொசோவோ விடுதலைப் போராட்டத்தில் காணப்பட்ட தவறுகள், கொசோவோ விடுதலைப் போராட்டத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள், பூகோள அரசியல், புதிய உலக ஒழுங்கு, சர்வதேச சக்திகளின் தேசிய நலன்கள், கொசோவோ புலம்பெயர்ந்த சமூகத்தின் பங்களிப்பு, சமகாலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஏனைய விடுதலைப் போராட்டங்களுடன் ஒப்பிடுகையில் பாதிப்புகள் குறைந்த கொசோவோ விடுதலைப் போராட்டங்களுடன் ஒப்பிடுகையில் பாதிப்புகள் குறைந்த கொசோவோ விடுதலைப் போராட்டத்துக்கு முக்கியத்துவமளித்து முதன்மைநிலைக்குக் கொண்டுவந்ததற்கான பின்னணிக் காரணிகள் மற்றும் குறிப்பாக கொசோவோ விடுதலைப் போராட்டத்தில் பாரிய நெருக்கடிகளுக்கும் , மனிதப் பேரவலங்களுக்கு மத்தியிலும் கொசோவோ வாழ் அல்பேனிய இனத்தவரின் விடுதலைக்கான விலைகொடுப்பு போன்ற விடயங்கள் அலசலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

மேற்கூறியவற்றின் அடிப்படையில் காலத்திற்கும் மக்களுக்கும் அவசியமான மூன்று பிரதான காரணிகளை இலங்கைத் தீவின் இனக்குழும மோதுகையுடன் தொடர்புபடுத்தி இந்தத் தொடரை நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

காலநீட்சியிலே பூகோள அரசியல், புதிய உலக ஒழுங்கு , சர்வதேச சக்திகளின் தேசிய நலன்கள் ஆகிய மூன்று பிரதான காரணிகளின் சுழற்சிப் போக்கு ஒன்றோடொன்று இறுகப் பின்னிப் பிணைந்துள்ளது. இந்தப் பிணைப்பினுடைய சூட்சும பிரசவம் தான் “தலையீடுகள்”. தலையீடுகள் தமக்கான சாதகத் தன்மைகளைப் பிரதானமாகக் கொண்டு சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு வடிவங்களில் மிக நாசுக்காக மேற்கொள்ளப்படுகின்றன.

விடுதலைப் போராட்டங்களும் சுதந்திரப் பிரகடனங்களும் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தலையீடுகளுக்கு உட்பட வேண்டிய கட்டாயத் தன்மை நிலவுகிறது. அமெரிக்கா எழுதிக் கொடுத்ததைத்தான் கொசோவோவினுடைய சுதந்திரப் பிரகடனமாக வாசிக்க வேண்டிய கட்டாயம். புதிய தேசமாக மிளிர்ந்த கொசோவோவினுடைய தேசியக் கொடி தெரிவிலும் அமெரிக்க நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் போன்றவற்றைப் பார்க்கும் போது சுதந்திரத்தினுடைய அர்த்தப்பாடு மாற்றமடைகிறது. அந்த மாற்றம் இன்னொரு சூட்சும சுழற்சியை உண்டாக்குகிறது.

அது யாதெனில் அடக்குமுறையிலிருந்து மட்டுப்பாட்டுச் சுதந்திரம்- தங்கிநிற்றல் – கட்டுப்பாடு- ஏற்புக் கடப்பாடு என்பதுவே அதுவாகும். அனைத்து விடுதலைப் போராட்டங்களிலும் மேற்குறிப்பிடப்பட்டவை இடம்பெறுவதில்லை. ஆனால், அதில் ஒரு அம்சமாவது இடம்பெறாத போராட்டமில்லை. இவ்வாறான புதிய சூட்சும சுழற்சியினுடைய தாக்கம் கிழக்குத் திமோரில் இடம்பெற்றதை விட கொசோவோவில் இடம்பெற்று வருவது அதிகம்.

மேற்கூறிய புதிய சூட்சும சுழற்சியைத் தவிர்த்து தனித்துவத்துடன் நகரமுனையும் போராட்ட சக்திகள் எண்ணுக்கணக்கற்ற தடைகளுக்கும் சவால்களுக்கும் முகம்கொடுக்க வேண்டிய சூழல் உருவாக்கம் தொடர்கிறது. நீண்டகாலம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற அடையாளத்தை மையப்படுத்திய இலட்சியப் போராட்டத்தில் தனித்துவத்தை இழப்பதென்பது அதன் இலக்கினை விட்டுக்கொடுப்பதற்கு ஒப்பானது.

சுதந்திரப் போராட்டம் என்பது மக்கள் நினைத்தபடி நகர்வதல்ல. மாறாக மக்களின் நலனை, அந்த மக்களைத் தாங்கி நிற்கும் தேசத்தின் எதிர்காலத்தை நீண்டகால நோக்கில் கருத்திற்கொண்டு அதற்கேற்றபடி நகர்த்தப்படுவதாகும். அந்தப் பயணத்தில் வெற்றிகள் மட்டுமன்றி தோல்விகள், பின்னடைவுகள் , இழப்புகளும் கூடவரும். இது பல சந்தர்ப்பங்களில் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பிற்கும் மாறி மாறி வரும்.இவை தவிர்க்க முடியாதவை. இதனுடைய அர்த்தம் தான் போராட்டம் எனப்படும். போர் – ஆட்டம் இவையனைத்தையும் புரிந்து அதற்கேற்றபடி தம்மைத் தயார்படுத்தி விடுதலைப் பயணத்தில் பற்றுறுதியுடன் ஈடுபட்டு அரசியல் விழிப்புணர்ச்சியுடன் மிளிரும் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம் வரலாற்றில் தோற்றதுமில்லை. தோற்கப்போவதுமில்லை என்பதே நியதி.

ஒவ்வொரு போராட்ட வரலாற்றுக்கும் ஒரு தனித்துவமும் இருக்கும். அதேவேளை, ஒரு முன்மாதிரியும் உண்டு. எரித்திரிய போராட்டத்தில் அமெரிக்காவின் தலையீடு இருந்தபோதும் எரித்திரிய போராளிகள் அரவணைத்துப் போக வேண்டிய சூழலில் அதற்கேற்றபடி நடந்தார்கள். பின்பு தமக்கு சாதகமான சூழலை உருவாக்கி தமது தனித்துவத்தை நிலைநாட்டினார்கள்.

கொசோவோ மிக அண்மையில் பிறப்பெடுத்த குழந்தை. அது தனது எதிர்காலத்தை நோக்கிய வளர்ச்சிக்கான நிலைமாற்றத்தை எவ்வாறு கையாளப் போகிறது என்பதிலேயே அதனுடைய நீண்டகாலம் நோக்கிய நிலைபேறான தனித்துவம் தங்கியுள்ளது. தனித்துவத்தை நிலைநாட்டக் கூடிய சந்தர்ப்பங்கள் கொசோவோவினாலேயே உருவாக்கப்பட வேண்டும் . அதற்குரிய தொடக்கப்புள்ளி கனிந்துள்ளது.

உதாரணமாக போருக்காகவும் ஆக்கிரமிப்புக்காகவும் அமெரிக்கா வளர்த்த பருந்து இஸ்ரேல். அதேபோல் வெண்புறாவாக சோடிக்கப்பட்டது நோர்வே. அமெரிக்கா ஒரு பக்கத்தால் அச்சுறுத்தும், மறுபுறத்தே நோர்வேயூடாக சமாதானப் போதனை செய்யும்.

இது எதிரிகளுடன் மனதில் வஞ்சகமிருக்க நட்புறவு கொண்டாடும் முறைமை. அது எதிரிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான இரத்தம் சிந்தாத இன்னொரு தந்திரோபாயம். நோர்வே போன்ற புதிய நண்பர்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா தற்போது ஈடுபட்டுள்ளது. அந்தப் புதிய நண்பனில் கொசோவோவும் ஒரு அங்கம். கொசோவோவை எப்படி அமெரிக்கா பயன்படுத்தப் போகின்றது என்பதைப் பார்க்கும் முன், கொசோவோ சுதந்திரப் பிரகடனத்தை அண்மித்த ஒரு நிகழ்வை நோக்குவோம்.

கொசோவோ சுதந்திரப் பிரகடனம் செய்ததை அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளுமே உடனடியாக அங்கீகரித்தன. ஆனால், தாமதமாகவே தான் நோர்வே கொசோவோவை அங்கீகரிப்பதாக அறிவித்தது. அந்தக் காலப்பகுதியில் இரட்டை வேட அறிக்கையொன்றினையும் நோர்வே வெளியிட்டது. அது கொசோவோவை அங்கீகரிப்பதாக அறிவித்த அதேவேளையில், தான் தொடர்ந்தும் சேர்பியாவுடன் நல்லுறவை பேணப்போவதாகவும் அவர்களின் ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தது.

இந்தச் செயற்பாட்டை நடுநிலைமை எனக்கூறமுடியாது. ஏனையவர்களை முட்டாள்களாக்குவதாகவே கருதக்கூடியது. அடக்குமுறையாளனையும் ஒடுக்கப்பட்டவனையும் ஒரே தராசில் நிறுத்த முடியாது. இது ஏனைய அடக்கு முறையாளர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாகவே இருப்பதுடன் மறைமுகமாக வன்முறையை அங்கீகரிக்கிறது. இனக்குழும மோதுகைகளில் நடுநிலைமையென்பது நியாயத்துக்கு எதிரான செயற்பாடாகவே இருக்கும். மீண்டும் நாம் கொசோவோவை எப்படி அமெரிக்கா பயன்படுத்தப் போகின்றது என்ற விடயத்துக்கு வருவோம்.

கொசோவோவின் சுதந்திரத்தை அங்கீகரித்த தேசங்களில் தாய்வானும் உள்ளடங்கும். தாய்வான் வெகுவிரைவில் தனிநாட்டுக்கான சுதந்திரப் பிரகடனத்தை மேள்கொள்ளப் போகிறது. அதன் பின்னணியிலும் அமெரிக்கா செயற்படுகிறது. ஏனெனில், முன்னர் நான் குறிப்பிட்டது போல் சீனாவுக்கு எதிரான நெருக்குவாரத்தை அதிகரிப்பதற்கு தாய்வானை பயன்படுத்தப் போகிறது அமெரிக்கா. ஆனால், இறுதியாக சுதந்திரத்தை அடைந்த ஒரு நாடு, அதனை அங்கீகரித்த ஒரு தேசத்தை அங்கீகரிப்பதற்கான சாத்தியங்கள் வலுகுறைவாகவே உள்ளதாக மேற்கத்தேய ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஏனெனில், சீனாவுடன் நல்லுறவை வளர்ப்பதற்கு கொசோவோ பயன்படுத்தப்படுவதனூடாக சீனாவை வரம்புமீறாமை நிலைக்கு உட்படுத்தலாம் என்று அமெரிக்கா எண்ணுகிறது. இந்த நல்லுறவில் நன்மை, தீமை என்ற இரண்டும் கலந்துள்ளது. இது அமெரிக்கா, சீனா, கொசோவோ என்ற மூன்று தரப்புக்குமே பொருந்தும். இதனூடாக சீனா, கொசோவோவில் தனது முதலீடுகளை ஆரம்பிக்கலாம். அது சீனாவுக்கு தனது பொருளாதார நலனை வியாபிப்பதற்கும், இலாபத்தை ஈட்டுவதற்கும் சர்வதேச ரீதியில் செல்வாக்கு செலுத்துவதற்கும் காரணமாக அமையும். அதேவேளை இளைய தேசமென்ற அடிப்படையில், தன்னை ஸ்திரப்படுத்தி, உட்கட்டுமான வசதிகளை கட்டியெழுப்பி வலுமிக்க நாடாக மிளிர்வதற்கு கொசோவோவிற்கு வழியமைக்கும். இதில் அனைத்திலும் பலமான நாடு அதிக நலன்களை ஈட்டிக்கொள்ளும்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல், போல்கன்சில் கொசோவோ, ஆசியாவில் ஜப்பான், ஐரோப்பாவில், பிரித்தானியா என்று வலுவான பிராந்திய நண்பர்களை வியாபிக்கிறது. அமெரிக்கா, ரஷ்யாவை சுற்றி தனது நலனுக்காக பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குவதில் சவால்களுக்கு முகம்கொடுக்கும் அமெரிக்கா சீனாவை சுற்றிய தனது நலனுக்கான பாதுகாப்பு வலையமைப்பு உருவாக்கத்தில் சடுதியான முன்னேற்றத்தை கண்டுவருகிறது. அதன் செயற்பாடாகவே திபெத் கொந்தளிக்கிறது. தாய்வான் உறுமுகிறது, வியட்நாமுடனான உறவு வலுவடைகிறது, ஜப்பானுடனான நெருக்கம் இறுக்கமடைந்துள்ளது. இந்தியாவுடன் தேனிலவு நடக்கிறது. இது,பூகோள அரசியல், புதிய உலக ஒழுங்கு, சர்வதேச சக்திகளின் தேசிய நலன்கள் ஆகிய மூன்று பிரதான காரணிகளின் வெளியீட்டுக்கான அண்மைய உதாரணம். அதனை இன்னும் தெளிவாக விளங்க வேண்டுமாயின் ஆசியாவை நோக்கி எமது பார்வையை திருப்புவோம். இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவும் பாகிஸ்தானும் நண்பர்கள் என்ற வரையறைக்குள் உட்படுத்தப்படுவதிலும் பார்க்க போட்டியாளர் அல்லது எதிரி நாடுகள் என்ற வகைக்குள் உட்படுத்துவதே பொருத்தமாக இருக்கும். ஆனால், அதனை எந்தக் கட்டத்திலும் இந்தியா வெளித்தெரியும் படி கூறிக்கொள்ளப் போவதில்லை. இந்தியா மட்டுமில்லை அத்தகைய சூழலிலுள்ள எந்த நாடுமே அத்தகைய ஒரு நிலைப்பாட்டையே எடுக்கும். அதுதான் இராஜதந்திர நகர்வு. அதிலே, வெளியில் நண்பனாக காட்டிக்கொள்ளுதலும் மறைமுகமாக குறித்த நாடுகளுக்கு எதிராகச் செயப்படுவதும் வழமை. இது தேசிய நலனை மையமாக கொண்டு நகர்த்தப்படும் இராஜதந்திர பொறி. இதில் முன்னரே குறிப்பிட்டது போல் பல்வேறு நலன்கள் இலக்குகளாக காணப்படும். அத்தகைய செயற்பாடுகளுக்கு உதாரணமாக இந்தியா செயற்பட அண்மைய இரு உதாரணங்களை நோக்குவோம்.

சீனாவுக்கு எதிராக திபெத்தியர்களின் போராட்டம் ஆசியாவில் குறித்த நாடுகளில் வலுவடைந்து வருகிறது. ஆர்ப்பாட்டங்கள் அந்தந்த நாடுகளில் இடம்பெறும் போது குறித்த அரசாங்கங்கள் அதனை அடக்குவதில் முனைப்பு காட்டுகின்றன. அத்தகைய ஒரு சம்பவம் இந்தியாவிலும் அண்மையில் இடம்பெற்றது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு அதனை அடக்குவதற்கு கைக்கொண்ட முறைமை ஜனநாயகவாதிகளால் விரும்பத்தக்கதல்ல. வன்முறை பிரயோகிக்கப்பட்டே அந்த ஆர்ப்பாட்டம் நசுக்கப்பட்டது. அதனை ஊடகங்களும் தணிக்கை கட்டுப்பாடுகள் எதுவுமின்றி ஒளிபரப்பு செய்திருந்தன. இதனூடாக இந்தியா சீனாவுக்கு தான் நண்பன் என்று காட்டிக்கொள்ள முனைவதுடன் காஷ்மீர், நாகலாந்து போன்ற தனது நாட்டுக்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரு செய்தியாகவும் அதனை கையாண்டிருக்கிறது. இந்தியா விரும்புகிறதோ இல்லையோ, சீனாவுக்கு எதிரான நெருக்குவாரங்களும், பாகிஸ்தானில் நிலவுகின்ற ஸ்திரமற்ற தன்மையும் இந்தியாவின் தேசிய நலனுக்கு சாதகமானதே. அதனை அகரீதியாக விரும்பினாலும் வெளியிலே குறித்த நாடுகளில் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் என்பதில் அக்கறை உள்ளது போலவே காட்டிக் கொள்ளும்.

மற்றைய உதாரணம் இலங்கைத் தீவுடன் தொடர்புடையது. சிறீலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் இந்தியாவுக்கான விஜயத்தற்கு இன்னொரு பக்கம் உண்டு. அதிலும் ஆழமான இராஜதந்திரம் பொதிந்துள்ளது. தமிழ் தரப்பினர் அதனை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கiயாக பார்த்தார்கள். அதனையும் தாண்டிய விடயங்கள் என்னவெனில், சிறீலங்கா இராணுவத் தளபதிக்கு தனது நாட்டில் சிறந்த வரவேற்புக் கொடுத்து கா~;மீர் வரை கூட்டிச் சென்றதனூடாக, சிறீலங்காவுடன் மிக நெருக்கமான உறவை வலுப்படுத்தி வரும் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் “செயற்பாட்டு ரீதியான சேதி” அடித்து கூறப்பட்டுள்ளது. மற்றும் கா~;மீருக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அழைத்து சென்றதனூடாக ஆயுத போராட்டத்தில் அனுபவம் உடைய ஒருவரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. அதனை கா~;மீர் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராக எதிர்கால திட்டமிடல்களில் உட்படுத்தலாம். அத்துடன், தனது எதிர்பார்ப்புகளிலிருந்து விலகிச்செல்லும் சிறீலங்காவுக்கு கடிவாளம் போடும் நடவடிக்கைக்கு வழியமைத்தல் போன்ற அம்சங்கள் “அமர்க்கள வரவேற்புக்குள்” புதைந்து போயிருந்தன.

அத்தகைய பல்வேறுபட்ட தேசியநலனை அடிப்படையாகக் கொண்டே இராஜதந்திர நகர்வுகள் தொடர்கிறது. அதுவே ப+கோள அரசியல் மற்றும் புதிய உலக ஒழுங்கின் நிர்ணயிப்பு சக்தியாக விளங்குகிறது.

ஆகவே, சுயநிர்ணய உரிமை வேண்டி நிற்கும் தேசங்கள் மேற்கூறிய சூட்சும சுழற்சிக்குள் விரைவாக, விவேகமாக தம்மை உட்படுத்துவது அவர்களின் சுதந்திரம் நோக்கிய பயணத்தை இலகுபடுத்தும்.