பெரியாரியவாதிகளுக்கே உரித்தான பொதுவான நோய்தான் டாக்டர் ஷாலினியையும் தாக்கியிருக்கு.

நிறைய முற்போக்கு கருத்துக்கள் பேசுவாங்க, பெரியார் அதை சொல்லியிருக்கார், இதை சொல்லியிருக்கார்னு பேசுவாங்க.

 

அதையெல்லாம் எப்படியாவது மடை மாற்றி திமுகவிற்கு வாக்குகளாக விழச்செய்ய வேண்டும் என்ற பதட்டம் மட்டும் பெரியாரியவாதிகளிடம் எப்போதும் இருக்கும்.

 

பெரியாரிசம் என்றால் என்னவென்றே தெரியாமல் கருத்தியல் ரீதியாக, செயல்பாட்டு ரீதியாக யாரேனும் முன்னேறி செல்ல முயற்சித்தால் பெரியாரிஸ்ட் சித்தாந்த கருப்பு சங்கிகள் உக்கிரமாகி களமாட ஆரம்பித்துவிடுவார்கள்.

 

தேர்தல் வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாமல் மொத்த வேட்பாளர்களில் 50% இடங்களை பெண்களுக்கு இடமளித்திருக்கும் நாம் தமிழர் கட்சியை நான் பொறாமையோடுதான் பார்க்கிறேன்.

 

இதுபோன்று நடக்க அதிமுக, திமுகவில் சாத்தியமே இல்லை.

 

மாற்று கொள்கை கொண்ட வேறொரு கட்சி ஒரு நல்ல செயலை முன்னெடுக்கும்போது அதை பாராட்ட வேண்டும் இல்லையேல் அமைதியாக கடந்து செல்ல வேண்டும்.

 

இது இரண்டையுமே செய்ய முடியாதபோது வேறு ஏதோ ஒரு தேவை, ஆசை இதுபோன்ற வன்மத்தை தூண்டி விடும் என மனோவியல் படித்த டாக்டருக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

 

நாதகவிற்கு பதில் திமுக 10 பெண் (50%) வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் இதே மருத்துவர் ஷாலினி ‘இது பெரியாரின் கருத்தியலுக்கு கிடைத்த வெற்றி’ என பீத்திக்கொண்டிருப்பார்.

 

இங்கு எதுவும் செயலின் அடிப்படையில் அல்ல செய்பவரின் அடையாளத்தை கொண்டே தீர்ப்பு வழங்கப்படும் என பெரியாரிச பானி நவீன EMI கட்டப்பஞ்சாயத்தை செய்து எதிர்பாராமல் அதற்குள் அகப்பட்டிருக்கிறார் ஷாலினி.

 

தன் அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி ‘லாபி’ செய்து சாகித்ய அகாடமி விருது வாங்கி, அதையே தகுதியாக கொண்டு மதுரையில் போட்டியிட சீட் வாங்கிய சு.வெங்கடேசனை நிச்சயம் தமிழர்கள் ஓட்டுப்போட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என சொன்ன டாக்டர் ஷாலினியால் “படித்த, எளிய நிலையை சார்ந்த, மீனவ சமூக கூலித்தொழிலாளி பெண்ணான நாம் தமிழர் கட்சி காளியம்மாளை பாராளுமன்றத்திற்கு அனுப்புவோம்” என சொல்ல முடியவில்லை. இங்குதான் பெரியாரிசமும், கம்யூனிசமும் அம்பலப்பட்டு நிற்கிறது.

 

அரசியல் லாபி மூலம் குறுக்குவழியில் விருது வாங்கின வெங்கடேசனுக்கு இருக்கும் தகுதி, ஒரு கூலித்தொழிலாளி காளியம்மாளுக்கு இல்லை என நினைப்பதற்கு பெயர்தான் Elite கம்யூனிசம், Elite பெரியாரிசம்.

 

பெரியாரிசத்திற்குள் ஒளிந்துகொண்டிருக்கும் கருணா குடும்பத்து பரம்பரை கொத்தடிமைகளை இனம் காண இது போன்ற நிறைய ஷாலினிகள் கருத்து சொல்ல வேண்டும்.

 

– நன்றி: நம்பிகைராஜ்