supper-singer2009ல் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை இன்னும் உலகம் முழுக்க வாழும் தமிழர் மனதில் இருந்து நீங்க வில்லை.அந்த ரணமும் இன்னும் ஆறவில்லை. ஒட்டு மொத்த அந்த இனப்படுகொலையில் 1,75,000 தமிழ் உறவுகளும், இறுதி நாளில் 40,000கும் மேற்ப்பட்ட தமிழ் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டது, உலகம் முழுதும் அறிந்த உண்மை. 2009-2014 வரை 5 ஆண்டுகளாக உலகும் முழுக்க உள்ள தமிழர்கள் நீதி கேட்டு போராடிக் கொண்டு இருக்கும் நிலை இன்றைய நிலை.

அது மட்டுமிலாமல் வரும் மார்ச் மாதம் ஐநா வில் மனித உரிமை தீர்மானம் நிறைவேறும் நேரத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தப் போவதை அறிந்து மிகவும் சொல்லண்ணா துயரத்திற்க்கு ஆளானோம்.அதே நேரத்தில்(மார்ச்10) ஜெனிவாவில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நீதி கேட்டு நடக்கும் நேரத்தில் இந்த நிகழ்ச்சி ந்டப்பது தான் வேதனையானது.

மார்ச் 1,2 ல் CORAL PROPERTY DEVELOPMENT & CEYLON ARTS CREATION ஆகிய நிறுவனங்களோடு இணைந்து விஜய் டிவி பம்லப்பட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும் மருதானை st.Joseph கல்லூரியிலும் நிகழ்ச்சி நடப்பதாக அறிந்தோம்.இலங்கையில் தமிழர்கள் ஆடிப்பாடி மகிழ்வாக உள்ளதாக உலகத்திற்க்கு காட்டும் இலங்கை சிங்கள இனவாத அரசின் ராஜதந்திர நிகழ்வாக தான் இது நடக்கிறது.இதற்கு விஜய் டிவியும் துணை போவது கொடுமையானது.

தமிழக முதல்வர் சட்டமன்ற தீர்மானத்தோடு மட்டுமில்லாமல் தேர்தல் அறிக்கையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு,சர்வதேச பன்னாட்டு விசாரனை தேவை என தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளார்.இந்த சூழலில் கொழும்பில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதும்,அதற்கு விஜய் டிவி துணை போவதும் தமிழக அரசுக்கும் எதிரானது.

எங்கள் பினங்களின் மேல் ஏறி நின்று யாரும் பணம் பார்க்க முயல வேண்டாம். எங்கள் உணர்வுகளை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறொம்.இதையும் மீறி நிகழ்ச்சி நடந்தால் மானமுள்ள தமிழர்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

இதனிடையே, இலங்கை சென்று கச்சேரி மேற்கொள்ள இருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியாளர்களுக்கு தமிழ் அமைப்பினர் மற்றும் மாணவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன்-4 நிகழ்ச்சியின் மூலம் இறுதிச் சுற்று வரை வந்து பிரபலமானவர்கள் திவாகர், பார்வதி, சயித் சுபாகன், சரத் சந்தோஷ் மற்றும் சோனியா. இதில் திவாகர் என்பவர் சூப்பர் சிங்கர் சீசன்-4 பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் ஐந்து பேரும் வருகிற மார்ச் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் இலங்கை கொழும்புவில் உள்ள செயின்ட் ஜோசெப் கல்லூரியில் நடைபெறவுள்ள இசைக் கச்சேரியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.இதனை கோரல் பிராப்பர்டி டெவலப்பர்ஸ் எனும் இலங்கையை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், இவர்களின் இந்த இலங்கை பயணத்திற்கு மாணவ அமைப்பினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அதைக் கருத்தில் கொள்ளாமல் பணம் மற்றும் புகழுக்காக இந்த இசைக் கலைஞர்கள் செய்யும் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.