அனைத்துலகத்தி;ற்கு கொடுத்த வாக்குறுதி மற்றும் தனிப்பட்ட முறையில் சம்பந்தர் விக்கினேஸ்வரனுக்கு கொடுத்த வாக்குறுதியையும் மீறீ மீண்டும் வடக்கிற்கு இராணுவ ஆளுனரையே இனஅழிப்பு அரசு நியமித்திருக்கிறது.

australia_minister_met_chandarsir5
இலங்கையிலுள்ள ஏனைய மாகாணங்களுக்கு சிவில் அதிகாரிகள் ஆளுனராக இருக்கும்போது வடக்கிற்கும் கிழக்கிற்கும் மட்டும் இராணுவ ஆளுனர்கள்.

இது எதைக்காட்டுகிறது?

01. தமிழர்களை எப்போதும் இராணுவரீதியாகத்தான் எதிர்கொள்ளப்போகிறோம் என்கிறார்கள்.

02. தமிழர் நிலத்தில் தொடரும் இராணுவ ஆட்சியையும் இராணுவ அடக்குமுறையையும் உறுதி செய்கிறது.

03. தமிழர்களை படுகொலை செய்த இராணுவ அதகாரிகளின் கீழ் தமிழர்களை கொண்டுவருவதனூடாக தொடரும் இன அழிப்பை உறுதி செய்கிறார்கள்.

04. தமிழர்களின் வாழ்வு, கலை, பண்பாடு, பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு என்பன இராணுவமயமாக்கும் இந்த வேலைத்திட்டம் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை அம்பலப்படுத்துகிறது..

ஆனால் வெளிஉலகத்திற்கு இதை விளக்குவது ஒருபக்கம் இருக்கட்டும்.. அனைத்தையும் பார்த்துவிட்டும் ‘ஐக்கிய இலங்கைதான் தீர்வு’ என்று சொல்லும் சம்பந்தரும், “நடப்பது இனஅழிப்பு அல்ல அதை நிருபிக்க எம்மால் முடியாது அதனால் அதை கோரமுடியாது” என்று கதை விடும் சுமந்திரனும் இன்னபிற ஏமாற்றுகாரர்களும் இருக்கும்வரை எப்படி நாம் நீதியை நோக்கி நகர்வது?

இராணுவ ஆளுனர் சந்திரசிறீயின் மீள் நியமனம் என்பது தொடரும் இனஅழிப்பின் அப்பட்டமான ஒரு வடிவம். இதையும் நாம் புரியவில்லையென்றால் எதைத்தான் புரியப்போகிறோம்.

ஈழம்ஈநியூஸ்.