சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர அரசினை முடுக்கி தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தியதன் பின்னனியில் இந்திய அரசு

0
571

சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர அரசினை முடுக்கி தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தியதன் பின்னனியில் இந்திய அரசே இருக்கிறது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களோடு மோதல் போக்கினை திட்டமிட்டு இந்திய அரசு செய்து வருகிறது. இது இந்த மாநிலங்களில் இருக்கும் தமது தேசிய கட்சி அல்லது கூட்டணி கட்சிகளைக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறையை அரசின் உதவியோடு நிகழ்த்துகிறது.

mahi
தமிழர்களின் எதிர்வினை ஆந்திர அரசு அல்லது கருநாடக அரசு அல்லது கேரள அரசை நோக்கி அமையாமல் அம்மக்களினை எதிர்த்து நகரவே செய்யும் என்ப்தை திட்டமிட்டு இது போன்ற பொறுக்கித் தனத்தினை செய்து கொண்டிருக்கிறது.

சராசரி மக்களிடம் இருக்கும் மனநிலை என்பது வெறுப்பு அரசியல் சார்ந்ததல்ல. உழைக்கும் மக்கள் சக உழைக்கும் மக்கள் மீது வெறுப்பினையோ அல்லது ஒதுக்குதலையோ செய்வதில்லை. ஆனால் இந்த மனநிலையை இந்திய அரசு திட்டமிட்டு உருவாக்குகிறது. சிறிய முரண்பாடுகளை பெரிது படுத்துகிறது. வன்முறையை தூண்டுகிறது. வன்முறையில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் தமிழர்கள் நிகழ்த்தும் எதிர்வினைகளை கடுமையாக ஒடுக்குவதன் மூலம் முரணை வளர்த்துகிறது.

இதுவே ஆந்திர எல்லையிலும் நிகழ்ந்துள்ளது. சந்திரபாபு நாயுடு போன்ற மக்கள் விரோத அரசுகள் கடந்த காலத்தில் ஆந்திரமக்களை பலிகொடுத்த அரசியல் தரகர்கள் இந்தியாவின் இந்த சதித்திட்டத்தினை மிக அழகாக நிறைவேற்றுகிறார்கள்.

அண்டை மாநிலங்களின் உழைக்கும் மக்களோடு இணைந்து நின்று இந்திய அரசின் அயோக்கியத்தனத்தினை எதிர்த்துப் போராடி அதை அம்பலப்படுத்துவதே இன்று முக்கியம்.

இந்திய அரசு ஆங்கிலேயனின் பிரித்தாளும் சூழ்ச்சியை நீண்டகாலம் கடைபிடித்துவரும் பொறுக்கித்தனமான அரசு. இதை அடையாளம் காண்போம்.

ராஜபக்சே மட்டுமல்ல நம் எதிரி. மோடி, சந்திரபாபு நாயுடு, பொம்மை அரசாக இருந்து கண்மூடி மெளனம் காக்கும் தமிழக அரசு , தமிழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தமிழர்களை இந்த அயோக்கியத்தனத்திற்குள் தள்ளியவர்கள்.

ஆந்திர அரசின் அரச வன்முறையை கண்டறிவோம். எதிர்கொள்வோம். எதிர்த்து போராடுவோம். இந்திய அரசின் சூழ்ச்சியை மக்களிடத்தில் கொண்டு செல்லுவோம்.

நன்றி: திருமுருகன் காந்தி.