சம்பந்தன் கூறிய விடையத்தைப் பற்றி ஜெயலலிதா அவர்கள் கவனத்தில் எடுக்கமாட்டார் என எதிர்பார்க்கின்றோம் – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

0
628

திரு சம்பந்தன் அவர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு எழுதிய கடிதற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தமது மாறுபட்ட கருத்தினை எழுதியுள்ளார்கள்.

அன்பான தமிழ் மக்களுக்கு

அண்மையில் திரு சம்பந்தன் அவர்கள் எம்மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு கடிதத்தினை அனுப்பி இருந்தார். அதில் தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் மட்டுமே வாழவே விரும்புகின்றனர். எனவே அப்படியான தீர்வை பெற்று தருவதற்கு ஒத்துளைப்பு வழங்கும் வண்ணம் கேட்டிருந்தார்.

இக்கூற்று இங்கு பிரச்சனையான விடையமாக உள்ளது. இது திரு சம்மபந்தன் அவர்களின் தனிப்பட்ட கருத்தே அன்றி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதோ வடகிழக்கு வாழ் தமிழ்மக்களின் ஒட்டுமொத்த கருத்தாக இல்லை

அதனால் வடகிழக்கு வாழ் தமிழ் மக்களிடமே உண்மையில் என்ன தீர்வை விரும்புகின்றனர் என்பதனைக் கேட்கவேண்டும். அதற்கு பொதுவாக்கெடுப்பே கண்டிப்பாக தேவையானதாக இருக்கும். இதே வழியையே தொன் சூடானும் மேற்கொண்டது. எனவே பொதுவாக்கெடுப்பு நடத்துவதே வடகிழக்கு மக்களின் பிரச்சனைக்கு சரியான வழியாக இருக்கும்.

இவ் பொதுவாக்கெடுப்பினையே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களினாலும் முன்மொழியப்பட்டது. இதனையே ஜெயலலிதா அவர்கள் யூன் 3, 2014 அன்று இந்தியப் பிரதமர் திரு மோடி அவர்களைச் சந்திக்கும்போதும் வலியுத்துவார் என்று எதிர்பார்திருக்கின்றோம்.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு முன்னர் ஒரு தடவை அத்தகைய வாக்கெடுப்பு நடத்துவதற்கான ஆதரவை மக்களிடம் பெற்று அதனை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி இருந்தோம்.

இதனையே ஜெயலலிதா அவர்களும் முன்மொழிந்த போது மிகுந்த மகிழச்சியும் பெருமையும் அடைந்தோம். அதனையே தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவேண்டும் என்பதை நாம் வலியுறுத்தினோம்.

திரு சம்பந்தன் கூறிய விடையத்தைப் பற்றி ஜெயலலிதா அவர்கள் கவனத்தில் எடுக்கமாட்டார் என எதிர்பார்க்கின்றோம்.

நன்றி

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு