சம்பந்தர் – விக்கினேஸ்வரன் – சுமந்திரன் முக் கூட்டணியின் தொடரும் துரோகம்

0
726

கடந்த வாரத்திற்குரிய இந்த முக்கூட்டணியின் தமிழின துரோகங்களை சில நாட்களுக்கு முன்புதான் பட்டியல் இட்டிருந்தோம். இந்த வாரத்திற்குரிய பட்டியல் இது. இது சற்றே பெரிய பட்டியல் என்பதனால் கொமன்வெல்த் மாநாட்டை ஒட்டி நடைபெற்ற ஆர்பாட்டங்களை மட்டும் வைத்து ஒரு சிறிய பட்டியல்.

முதலில் சுமந்திரன்.
camoron-jaff
பிரித்தானிய பிரதமர் கமருனின் யாழ் வருகையின் போது இவர் செய்த தகிடுதத்தங்கள் நிறைய. ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம். யாழ் நூலகத்தில் கமருனுடனான தனிப்பட்ட சந்திப்பின்போது கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களை திட்டமிட்டு ஓரங்கட்டியதுடன் சம்பந்தர் விக்கினேஸ்வரனுடன் தன்னை இணைத்து கொண்டார். குறி;ப்பாக போரில் பாதிக்கப்பட்ட “hயடக றனைழறள” என்று சொல்லப்படும் தமிழினப்பெண்களின் அவலத்தின் குறியீடான அனந்தி எழிலனை திட்டமிட்டு தடை செய்த சூத்திரதாரி.

மக்கள் ஆர்ப்பாட்டமும் செய்திருக்க தேவையில்லை இந்த முக்கூட்டணி கமருனை சந்தித்திருக்கவும் தேவையில்லை. ஒற்றை ஆளாக அனந்தி எழிலனை சந்திக்க வைத்திருந்தாலே போதும் எமது மக்களின் பிரச்சினை கமருன் வருகையின்போது அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். மக்களும் இனஅழிப்பு அரசின் காவல்துறையிடம் தடியடி வாங்கவும் நேர்ந்திருக்காது. ஆனால் திட்டமிட்ட முறையில் சிங்கள கைக்கூலியான சுமந்திரன் சிங்கள நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அனந்தியை தவிர்க்கும் வேலையை செய்திருக்கிறார்.

குறைந்தது மக்களிடம் அவர்களது மகஜர்களை வாங்கி அதையாவது கமருனிடம் சேர்ப்பித்திருக்கலாம். அதுவும் நடக்கவில்லை. மாகாணசபையின் உறுப்பினராக தடியடி வாங்கியபடி ஓடி ஓடி அனந்தி சசிதரன் மக்களின் மகஜர்களை கமருனிடம் சேர்ப்பிக்க முற்பட்ட காட்சி உண்மையில் கொடுரமானது. சம்பந்தர் – விக்கினேஸ்வரன் – சுமந்திரன் கூட்டணி வாக்குகளுக்காக புலிக்கோசம் போட்டுவிட்டு தற்போது புலிகளோடு சேர்த்து மக்களையும் நடுத்தெருவில் விட்ட காட்சியின் ஒற்றைக்குறியீடு அது.

இது கூட பரவாயில்லை. இதே சுமந்திரன், கமருன் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் வலிவடக்கு ஆர்ப்பாட்டத்திற்கு செல்வதாக இல்லை. எனவே மக்கள் சுன்னாகம் இடம்பெயர்ந்த முகாம் முன்பொ அல்லது நூல்நிலையம் முன்போ கூட முற்பட்டபோது, “இல்லை அப்படி வேண்டாம், கட்டாயம் அங்கு வருவார்” என்று மக்களையும் ஊடகவியலாளர்களையும் மட்டுமல்ல சக கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கே அப்பட்டமான பொய்யை சொல்லி மக்கள் போராட்டத்தை திசைதிருப்பி விட்டிருக்கிறார்.

ஏற்கனவே மக்களை ஆர்ப்பாட்டங்களுக்கு போகவிடாமல் இன அழிப்பு அரசின் புலனாய்வாளர்கள் பலவழிகளிலும் தடுத்ததையும் மீறி போனவர்களை இந்த சுமந்திரன் நுட்பமாக அடக்கியிருக்கிறார். இதனால் பாரியளவில் மக்கள் செய்ய இருந்த கவனயீர்ப்பு தடைப்பட்டிருக்கிறது. சிங்களவன் கூட இப்படி விசுவாசமாக செயற்படமாட்டான்.

போதாததற்கு ஒரு புலம்பெயர் இணையத்திற்கு வழங்கிய செவ்வியில் “தம்மை கேட்காமல் முன்னனுமதி இல்லாமல் நடந்த போராட்டம் இது. அதனால்தான் அடிவாங்க வேண்டியேற்பட்டது” என்று உளறுகிறார். திரும்ப திரும்ப போராடும் மக்களை குற்றவாளிகளாகவும் இனஅழிப்பு அரசின் செய்கைகளை நியாயப்படுத்தவும் முற்படும் இந்த அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்வது..?

அடுத்து நம்ம விக்கினேஸ்வரன்.
viki-poss
இவர் நூல் நிலையத்தில் வைத்து கமருனிடம் “ஐக்கிய இலங்கை, நல்லிணக்கம்” குறித்து நிறையவே உளறியதாக பிரித்தானிய தூதரக வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. இவர் நூல் நிலைய மொட்;டை மாடியிலிருந்து மக்கள் அடிவாங்கியதை ரசித்து விட்டு பின்கதவால் ஓடியிருக்கிறார். அதே வேகத்தில் தமிழனை இழிவு படுத்துவதையே குலத்தொழிலாகக் கொண்ட “இந்து” பத்திரிகையாளரை கூப்பிட்டு “தமிழ்நாட்டு போராட்டங்களால்தான் இங்கு தமிழர்கள் அடிவாங்குகிறார்கள். தமிழ்நாட்டு போராட்டங்கள் நிறுத்தப்பட்டால் நாம் புருசன் பொண்டாட்டியா வாழலாம்” என்று வழக்கம் போல – இல்லை இன்னும் சற்று அதிகமாகவே உளறியிருக்கிறார்.

அது கூட பரவாயில்லை. தனக்கு “பெண்களுக்கு ஆன்மீக ஆலோசனை என்ற பெயரில் “பிள்ளை” கொடுத்து தற்போது களி தின்று கொண்டிருக்கும் பிரேமானந்தா ஆசிர்வாதம் இருக்கிறது” என்றும், “இறைவன் எங்களை கைவிடமாட்டார்” என்றும் நிறையவே உளறிக்கொட்டியிருக்கிறார். இது கூட பரவாயில்லை இவ்வளவையும் சொல்லிவிட்டு தாம் அறிவு பூர்வமாக – யதார்த்தமாக சிந்திக்கிறோமாம். தமிழக மக்கள் உணர்வு பூர்மாக சிந்திக்கிறார்களாம் என்று கூறியதுதான் இந்த கொமடியின் உச்சம்.

அடப்பாவி “பிள்ளை கொடுத்த” சாமியார் எல்லாம் தமிழ் மக்களை காப்பாற்றுவான் என்பது அறிவுபூர்வமும் யதார்த்தமும். பிராந்திய – பூகோள அரசியலை கவனத்தில் கொண்டு நடத்தப்படும் எதிர்ப்பு அரசியல் போராட்டங்கள் எல்லாம் முட்டாளத்தனமானது. விளங்கிடும்.

ஒன்று மட்டும் உண்மை. தமிழ்சினிமாவில் வடிவேல் இல்லாத இடத்தை இப்ப விக்கினேஸ்வரன் நிரப்பி கொண்டிருக்கிறார். உண்மையில் ஒரு அரசியல் வடிவேல்தான் விக்கினேஸ்வரன்.

இறுதியாக நம்ம சம்பந்தர்.
sampanth
இவரைப்பற்றி என்ன சொல்வது, மேற்குறிப்பிட்ட இரு நபரையும் வைத்து தமிழர் விரோத அரசியலை செய்பவரே இவர்தானே.. நூல்நிலைய மாடியிலிருந்து மக்கள் அடிவாங்கியதை ரசித்து விட்டு தப்பியோட முற்பட்டவரை மக்கள் வழிமறித்தபோது இவருடைய பெயராலும் அங்கு கூடி நின்ற பெண்களுக்கு நாலு அடி விழுந்ததுதான் மிச்சம். அதையும் இரசித்தபடி அவர் போய் விட்டார்.

மக்கள் தாக்கப்பட்டது குறித்து இந்தக்கணம் வரை எந்தக் கண்டனமும் இல்லை. சிங்கள எசமானினதும் இந்திய எசமானினதும் கட்டளைக்காக இந்த 3 விசுவாச நாய்கள் வலாட்டிக்கொண்டு காத்திருக்கின்றன. உத்தரவு கிடைத்ததும் தமிழர்கள் முன் புதிய அவதாரங்களுடன் அவர்கள் காட்சியளிப்பார்கள்.

நீண்ட காலமாகவே நாம் கவனித்த அம்சம் என்றாலும் இந்த புதிய நிகழ்வுகள் எமக்கு வேறு சில எச்சரிக்கைகளை தருகின்றன. எல்லாவற்றிலும் கைவைத்த இந்த மூவரணி தற்போது தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை அடக்கவும் திசைதிருப்பவும் முற்படுவதை காணமுடிகிறது. இது மிகவும் ஆபத்தானது.

எப்போதும் நாம் எதிரிகளை வெளியிலேயே தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த மூவரணிதான் சமகாலத்தில் தமிழர்களின் நேரடி எதிரிகள். இவர்களை நாம் மட்டுபடுத்தாவிட்டால் எமது விடுதலை என்பது கனவாகவே போய் விடும்.

கற்று கொண்ட பாடங்களிலிருந்து உடனடியாக மாற்று வழிகளை நாம் யோசிக்க வேண்டும். கூட்டமைப்புக்கு சமாந்தரமாக உடனடியாக வேறு ஒரு அமைப்பை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

இனஅழிப்பில் பாதிகக்ப்பட்ட – காணாமல்போனவர்களின் பிரதிநிதிகளும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் பல்கலை மாணவர்களும் இணைந்த ஒரு மாற்று அமைப்பை உருவாக்குவது ஒன்றுதான் இதற்கு தீர்வாக அமையும். இது கூட்டமைப்பை உடைக்க அல்ல – கூட்டமைப்பை நெறிப்படுத்த…

காலத்தின் கட்டாயம் இது. சிந்திப்போம்..

ஈழம்ஈநியூஸ்