Stephen Timms Mpஇலங்கை அரசின் மீது சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றை வலியுறுத்தி பிரித்தானிய தமிழர் பேரவை அனைத்து மட்டங்களிலும் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. பிரித்தானியாவின் அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் பேச்சுக்கள் இடம் பெறுகின்றன.

அன்டி-லவ்:

சிறுபான்மை தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் பிரித்தானிய அரசு இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளும் அனைத்து செயற்;பாடுகளுக்கும் தாம் 100 வீதம் ஆதரவளிப்பதாக தொழிற்கட்சியின் எட்மன்டன் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் அன்டி-லவ் பிரித்தானியப் பேரவைக்கு உறுதியளித்துள்ளார். இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் பிரித்தானியா பெரிதும் கரிசனை கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் ஐ நா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை வலியுறுத்தும் வகையிலேயே பிரித்தானியா நகர்வுகளை முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இலங்கையில் தமிழின அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகள் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறுவதையும் அன்டி-லவ் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீபன்-ரிம்ஸ்:

ஈஸ்ட்ஹாம் தொகுதிக்கான தொழில் கட்சியைச் பாராளுமன்ற உறுப்பினர் Stephen Timms அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை உறுபினர்கள் சிலர் இன்று சந்தித்தனர்.இச் சந்திப்பின் போது ஸ்ரீபன்-ரிம்ஸ்: தான் பிரித்தானிய ஆளும் கட்சியுடன் இணைந்து தாம் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்துவதாக உறுதி அளித்துள்ளார் .

சேரா-சம்பியன்:

ரொதஹம் பிரதேசத்தின் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சேரா-சம்பியன் தாம் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் பிரித்தானியர் தமிழர் பேரவைக்கு ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளதுடன் சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றின் முக்கியத்துவம் குறித்து தாம் பிரித்தானிய அரசுடன் இணைந்து தமது குரலை எப்பொழுதும் கொடுப்பதாக குறிப்பிடார்.

ஸ்ரீவ்-வேகர்:

ஹைவிகம் பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீவ்-வேகர் பிரித்தானியா இலங்கை விடயம் குறித்து தெளிவான ஒரு தீர்மானத்தையே கொண்டுள்ளதாகவும் அது ஓர் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் தேவை குறித்தே வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டதுடன். பிரித்தானியத் தமிழர் பேரவையின் சார்பாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமருனை இவ்விடயம் குறழத்து அணுகஉள்ளதாகவும் உறுதியளித்தார்.

போல்-வுலொம்பீல்ட்

செப்பீல்ட் தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் போல்-வுலொம்பீல்ட் தமிழர்கள் விடயம் தொடர்பில் தாம் கரிசனை கொண்டுள்ளதை குறிப்பிட்டதுடன் . இலங்கையின் விடயத்தில் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் அவசியம் குறித்து நகல் வரைபில் எவையும் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்காமை தமக்கு பெருமு; அதிர்ச்சியளிப்பதாகவும் இது குறித்து பிரதமர் டேவிட் கமருன் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் பேச உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தில் இங்கிலாந்து ஸ்கொட்லாந்து வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து போன்ற அனைத்து நிலப்பரப்புகளிலும் தமிழர்கள் பரந்து வாழ்கின்றோம். எம் மக்கள் எம் மண் எமது உரிமை குறித்து சர்வதேசத்தின் கரங்களை நம்பால் ஈர்த்து நீதி கேட்க வேண்டியது நமது கடமையே. நீங்களும் உங்களது பிரதேசத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை இது விடயம் தொடர்பில் உடனடியாக தொடர்பு கொண்டு குரல் எழுப்புங்கள். இது தொடர்பில் உங்களுக்கு உதவிகளை வழங்க பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்வமாக எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர்.