India-modiமோடி ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் உருவாக்கப்பட்ட ஆட்சிமாற்றத்தின் தொடர்ச்சியாக இலங்கை வந்து இனஅழிப்புக்கு வெள்ளையடித்துவிட்டு சென்று விட்டார்

 

13 வது திருத்த சட்டத்தை வேறு ஒரு புது டிசைனில் தமிழர்களுக்கு தீர்வாக மீண்டும் முன்மொழிந்து விட்டு சிங்களத்துடன் உப்புச்சப்பில்லாத நான்கு ஒப்பந்தங்களை வெளிப்படையாகக் கைச்சாத்திட்டுவிட்டு திரும்பியிருந்தாலும் கிடைக்கும் உள்ளக தகவல்களின் படி 

 

01. ஆழ்கடல் மீன்பிடிப்பில் இலங்கைக்கு உள்ள உரிமைகளைப் பயன்படுத்த சீனாவுக்கு கடந்த வருடம் அனுமதி வழங்கப்பட்ட விவகாரம்.

 

02. சீன அணு நீர்மூழ்கிகள் இலங்கைக்கடலில் உலாவரும் விவகாரம்.

 

03. திருகோணமலை சீனன் குடா மற்றும் காலி உட்பட பல துறைமுகப் பகுதிகள் சீனாவிற்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரங்கள் என்று இந்திய கடலை சுற்றியுள்ள கடற்பாதுகாப்புக்கள் சீனாவினால் கேள்விக்குறியாகியுள்ளது தொடர்பாகத்தான் அழுத்தமாகப் பேசப்பட்டு  உறுதிமொழிகள் பெறப்பட்டதாக தெரிய வருகிறது.

 

என்றுமே நம்பகமான தோழனான சீனாவை சிங்களம் என்றுமே இழக்க விரும்பாது. பிராந்திய அரசியல் நகர்வுகளுக்கு ஏற்றதுபோல் தன்னை அடிக்கடி நிறம் மாற்றிக் கொள்ளும் இந்தியாவை சிங்களம் என்றுமே நம்பத் தயாராக இல்லை

 

அந்த அடிப்படையில் கிடைக்கும் தகவல்களின்படி மேலோட்டமான உறுதிமொழிகளே சிங்களத்தால் இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இது மோடியின் பயணத்தில் பாதி வெற்றியையே உறுதி செய்திருக்கிறது. இந்தளவாவது உறுதிமொழிகளை பெற முடிந்ததே ஓரளவு வெற்றிதான் என்று இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தம்மளவில் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.

 

ஏனென்றால் மகிந்தவின்; ஆட்சியில் கிட்டத்தட்ட இலங்ககைத்தீவில் பாதியும்  அதை சுற்றியுள்ள கடற்பரப்பும் சீனாவிடம் தாரைவார்க்கப்பட்டிருந்தது. எனவே புதிய அரசுடன் இந்த ஒப்பந்தத்தை எட்டியதே வெற்றிதான்.

 

ஆனால் இது நிரந்தரமானதா? அதுதான் இல்லை.. 

 

தமிழர்களை குறிப்பாக புலிகளை அழித்ததனூடாக என்றைக்கும் இந்திய கொள்கை வகுப்பாளர்களை கொதிநிலையில் வைத்திருக்கக்கூடிய நிரந்தர இராஜதந்திர பொறிமுறையை சிங்களம் உருவாக்கிவிட்டது. இதிலிருந்து என்றுமே இந்தியா மீள முடியாது.

 

புலிகளின் ஆட்சிக்காலத்தில் தமது கடற்பாதுகாப்பு குறித்து, சீனாவின் கடல் அத்துமீறல் குறித்து இந்தியா கிஞ்சித்தும் கவலைப்பட்டது கிடையாது.. புலிகளின் கடல்அணிகள் பெரும் கடல்அரண் ஒன்றை உருவாக்கியிருந்ததன் விளைவாக அன்னிய அத்துமீறல்கள் எதுவுமே இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிகழவில்லை.

 

சுயநலனும், குறுகிய நோக்கமும் கொண்ட இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தூரநோக்கற்று செயற்பட்டடு தமிழர்களை அழித்ததனூடாக புலிகளின் கடல் அணையை உடைத்து தமக்கு தாமே உலை வைத்துவிட்டு இன்று சிங்களத்திடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

 

இந்திய கொள்கை வகுப்பாளர்கள் போல முட்டாள்கள் உலகத்தில் யாரும் கிடையாது.. ஒரு நாட்டின் கொள்கை வகுப்பாக்கம் தூர நோக்கில் இருக்க வேண்டுமேயொழிய சமகால நிகழ்வுகளை முன்வைத்து பழிவாங்கும் மறுத்தான் கொடுக்கும் கொள்கைவகுப்பாக்கம் அதன் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் உதவாது என்பது வெளிவிவகார கொள்கை வகுப்பாக்கம் சொல்லும் எளிய பாடம்

 

ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அதை மறந்தார்கள்.

 

தமிழர்களுக்கும் இந்திய அரசிற்கும் இடையில் நடந்த சில துன்பியல் நிகழ்வுகள் ஒரு தற்செயல் நிகழ்வு. அது எந்த திட்டமிடலும் இல்லாமல் நடந்த சடுதியான ஒரு எதிர்வினை. அது ஒரு திட்டமிடப்பட்ட வன்மம் இல்லை. எனவே இருதரப்பு நலன்களையும் கருத்தில் கொண்டு தூர நோக்கில் இந்தியம் தமிழர்களின் நேசக்கரத்தை இறுகப் பற்றியிருக்க வேண்டும்.

 

ஆனால் சில மோசமான தனிநபர்களின் கொள்கை வகுப்பாக்கம் இன்று இந்தியத்தை சிங்களத்திடம் நிரந்ரமாக பிச்சை எடுத்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

 

தவறான வெளிவிவகாரக் கொள்கை அதை முன்னெடுக்கும் நாட்டை ஆபத்தான பாதையில் இட்டுச் செல்லும் என்பதுடன் அந்த நாடு தனிமைப்படுத்தப்படும் ஆபத்தையும் பிற நெருக்குதல்களையும் சந்திக்க வேண்டிவரும் என்பதை மறந்து ராஜீவ்ஜே.ஆர் ஒப்பந்தம் முதல் 2009 தமிழின அழிப்பு வரை இந்தியா செயற்பட்டு இன்று ஒரு இக்கட்டில் நிற்கிறது.

 

புலிகளின் கடல் அரண்உடைந்து போனதால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினூடாக சீனாஇ பாகிஸ்தான் தென்புறத்தினூடாக இந்தியாவை வளைக்க முற்படுகின்றன. இதற்கு சிங்களம் உடந்தையாக இருப்பது குழந்தைகளுக்கும் தெரியும்

 

அதுதான் தற்போது வந்து மோடி பிச்சை எடுத்துக்கொண்டு திரும்பியிருக்கிறார்.

 

தமிழர்கள்  நேசசக்தி என்ற வரலாற்று உண்மையை உணர்ந்து  தமிழீழத்தை அங்கீகரிப்பதனூடாக தனது அனைத்து நெருக்கடிகளிலிருந்தும் இந்தியா தப்ப முடியும். இந்தியா சிந்திக்குமா?

 

அல்லது படிப்படியாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது பிடியை முழுயைமாக இழந்து தனிமைப்படப்போகிறதா? அல்லது தவணைமுறையில் கொழும்பு சென்று பிச்சை எடுத்துக்கொண்டு வரப்போகிறதா இந்தியா?

 

ஈழம்ஈநியூஸ்.