இந்திய மத்திய அரசின் உதவியின் அடிப்படையின் பெருமளவான நோயாளர் காவு வண்டிகள் சிறீலங்காவின் வட மாகாணத்திற்கு இந்திய அரசினால் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற இந்த வைபவத்தில் இந்திய அரசின் அனுதாபிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அனைவரும் பங்குபற்றத் தவறவில்லை.

 
இது இவ்வாறு இருக்க அமெரிக்க கடற்படையினர் சிங்கள கடற்படையினருடனான கூட்டு ஒத்திகையில் திருமலைத்துறைமுக கடற்பகுதியில் ஈடுபட்டதாக கடந்த வாரம் செய்திகள் தெரிவிக்கின்றன.

 
இவற்றிற்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போல சீன நிறுவனம் ஒன்றிற்கு கிழக்கு மாகாணத்தின் குடும்பிமலைப் பகுதியில் பெருமளவான நிலப்பகுதியை சிறீலங்கா அரசு வழங்கியுள்ளது.

 
இந்த மூன்று செயதிகளும் சாதாரண செய்திகளாக உங்களுக்கு தெரிந்தாலும் இந்த செய்திகளின் பின் மிகப்பெரும் அரசியல் பின்னனிகளும், போட்டிகளும் ஒழிந்துள்ளன.

 
அமெரிக்காவை பொறுத்தவரையில் ரஸ்யாவை விட சீனா அரசின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் கண்டே அது அச்சம் கொள்கின்றது.
எதிரியின் நண்பனை தனக்கு நண்பனாக்கும் திட்டத்தையே டொனால்ட் டிறம் மேற்கொண்டு வருகின்றார். வடகொரியாவுடனான நல்லிணக்கம், ரஸ்ய அதிபருடனான நட்புறவு என தனது பொருளாதார நலன்களையும், ஆளுமையையும் தக்கவைக்க அமெரிக்க பெரும்பாடு படுகின்றது.

 
ஆனால் இந்த திட்டத்தில் அமெரிக்காவை ரஸ்யா ஒருபோதும் நம்பப்போவதில்லை என்பதை அது தொளிவாகவே காண்பித்துள்ளது. எனவே தான் டிறம்புடனான ரஸ்ய அதிபரின் சந்திப்பின் பின்னர் ரஸ்யா மிக நவீன ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்துள்ளது.

 
பூமியில் உள்ள எந்த இலக்கையும் தாக்கும் தூரவீச்சைக் கொண்ட இந்த ஏவுகணையானது அணுசக்தியில் இயங்கவல்லது. அது மட்டுமல்லாது எதிரிப்படைகளின் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களில் இருந்தும் தப்பிச் செல்லக்கூடியது.

 
அது மட்டுமல்லாது மற்றுமொரு ஏவுகணை பரிசோதனையையும் ரஸ்யா அண்மையில் மேற்கொண்டிருந்தது. மிக்-31 தாக்குதல் விமானத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த அதிவேக ஏவுகணையானது (Kh-47M2 Kinzhal (“Dagger”) air-launched ballistis missile (ALBM) 3,000 கி.மீ தூரவீச்சு கொண்டதுடன் நேட்டோ படையினரின் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களின் கண்களில் மண்ணைத்தூவிச் செல்லக்கூடியது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 
இதனிடையே, அண்மையில் இடம்பெற்ற உலகக்கிண்ண கால்பந்து போட்டியை ரஸ்யாவில் நடைபெறவிடாது தடுப்பதற்கு அமெரிக்காவும், அதன் தோழமை ஐரோப்பிய நாடுகளும் கடும் முயற்களை கடந்த சில வருடங்களாக மேகொண்டிருந்தன. உக்கிரைன் விவகாரம், மலேசிய விமனம் மீதான ஏவுகணைத் தாக்குதல் விவகாரம் என பல விவகாரங்களை அவர்கள் ஊதிப்பெரிதாக்கிய போதும் அவர்களால் ரஸ்யாவை வெற்றிகொள்ள முடியவில்லை.

 
கல்ப்பந்து போட்டி நடைபெற்றது, கால் இறுதிப்போட்டிவரை ரஸ்ய அணியும் முன்னேறியது, உலக நாடுகளின் மக்கள் அங்கு சென்றனர், ரஸ்யாவின் விவகாரங்களை நேரிடையாக கண்டனர். இது ரஸ்யா தொடர்பான மேகுலகத்தின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்துள்ளது. கால்பந்து போட்டிகள் நிறைவடைந்த பின்னர் அமெரிக்க அதிபருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவருக்கு கால்பந்து ஒன்றை பரிசளித்து தனது வெற்றியை கொண்டாடியுள்ளார் விளமிடீர் பூட்டீன்.

 
இந்த சம்பவங்களின் நடுவில் சீனாவானது தனது மிக நவீன விமானங்களை ரஸ்யாவுக்கு அனுப்பியுள்ளது. இரு நாடுகளிற்கும் இடையில் இடம்பெறப்போகும் படைத்துறை ஒத்திகைக்காகவே அவை அங்கு அனுப்பப்பட்டுள்ளன.

 
இந்த வருடத்தில் சிரியா மீது மேற்குலகம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த மிகப்பெரும் வலிந்த தாக்குதலை ரஸ்யா எவ்வாறு நீர்த்துப்போகச் செய்தது என்பதையும் நாம் அறிந்திருந்தோம்.

 
தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் சிறீலங்காவில் இடம்பெற்ற மேற்கூறப்பட்ட மூன்று நிகழ்வுகளினதும் முக்கியத்துவம், சீனாவின் பிடியில் சிறீலங்கா செல்வதை விரும்பாத இந்திய அரசு வடகிழக்கில் தனது ஆதிக்கத்தை செலுத்த முற்படுகின்றது. ஆனால் இவர்கள் இருவரையும் பின்தள்ளி தனது ஆளுமையை அங்கு நிலைநிறுத்த அமெரிக்கா முற்படுகின்றது. ஆனால் இந்த பூகோள அரசியலை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் நிலையில் தமிழ்த் தலமைகளிடம் திறமையுள்ளதா என்பதே தற்போதைய கேள்வி.

 
இந்த மூன்று வல்லரசுகளையும் தன்க்;கு சாதகமாக வைத்திருப்பதற்கு அல்லது அனுசரித்து போவதற்கான திறமை சிறீலங்கா அரசிடம் உள்ளதா என்பதும் தற்போதைய கேள்வியே, சிங்கள அரசின் இந்த உத்தியை உடைத்து அதனை நாம் எமக்கு சதகமாக பயன்படுத்தவேண்டும். அதனை செய்ய நாம் ஒன்றுபட வேண்டும்.

 
ஈழம் ஈ நியூஸ்
.