mannarபத்திரிக்கையாளர் அறிக்கையின் சுருக்க வடிவம். இந்த செய்தியை கொண்டு சேர்க்க உதவி செய்த பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கையாள மன்ற தோழர்கள், மொழிபெயர்ப்பு செய்துதவிய தோழர்கள் அனைவருக்கும் நன்றி. இணைந்து செயலாற்றுவோம், வெல்வோம்.

கிட்டதட்ட 500 சிங்கள குடும்பங்களை தமிழர்களின் பூர்வீக நிலமான மன்னார் மாவட்டத்தில் குடியமர்த்த இருக்கும் இந்த திட்ட நகல் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த நகலில் சிங்கள அரசின் மனித குலவிரோத நடவெடிக்கைகள் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த குடியேற்றத்தினை சிங்கள ராணுவத்தின் தலைமை அதிகாரிகள் முன்னிலையில் அவர்களது ஒத்துழைப்போடு சிங்கள் அரசின் சிவில் நிர்வாகம் முன்னெடுக்கிறது.

மேலும் இதில் அதிமுக்கியமாக சிங்கள அரசின் அதிபர் மாளிகை அதிகாரிகளும்பங்கேற்பதை ஆதாரப்பூர்வமாக விளக்குகிறது. மேலும் இந்த குடியேற்றம் என்பது சிங்கள ராணுவத்தின் துணையோடு மிக விரைவாக துரிதமாக நடத்தப்படுவதை காண முடிகிறது. ராணுவ அதிகாரிகள் சிவில் அதிகாரிகளோடு இணைந்து ஒருவார காலத்திற்குள் நிலத்தினை ஆக்கிரமிப்பது தொடர்பான திட்டத்தினையும், குடியமர்த்தப்படப் போகிற சிங்களவர்களை ஒருவார காலத்திற்குள் தேர்வுசெய்யப்பட வேண்டுமென்கிற கட்டளையும் இந்த ஆவணத்தில் பதிவாகி இருக்கிறது.

தமிழர்கள் பெரும்பானமையாக வாழும் மன்னார் மாவட்டத்தில் சிங்களர்களை குடியேற்றும் நோக்கத்தில் அரசு பதவிகல் உட்பட இலவச நிலங்கள்,பண உதவிகள் போன்ற உதவிகளை 500 சிங்கள குடும்பங்களுக்கு வழங்குகிறது. சூலை 18, 2013 அரசு அதிகாரி M.Y.S. தேஸ்பிரியா மன்னார் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார்.இவர் சிங்கள ராணுவத்தில் பணியில் இருந்தவர்.இதற்கு முன் இந்த பணியில் இருந்த J.A.சரத் ரவீந்தரா என்பவர் சிங்கள குடியேற்ற்ங்களுக்கு ஒத்துழைக்காததால் வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

காணி அதிகாரம் மாவட்ட செயலாளரின் நேரிடையிலான அதிகாரதிற்கு உட்பட்ட காரணத்தினால் M.Y.S. தேஸ்பிரியாவின் நிய்மனம் முக்கியமாக கருதப்படுகிறது. தற்போது நியமிக்க பட்டுள்ள மாவட்ட செயலாளர் மற்றும் இராணுவ மற்றும் சுற்று சூழல் அமைச்சகம் பங்கு பெற்றிருக்கும் கமிட்டி விரைவாக செயல்படுத்த ராஜபக்சே அரசு முயலுகிறது. மேலும் இந்தக் குடியேற்றத்தினை நேரடியாக ராஜபக்சேவின் அதிபர் மாளிகை தனது கட்டுப்பாட்டில் வைத்து செய்ல்படுத்துகிறது என்பதை இந்த ஆவணத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள , நகல் அனுப்புவர் பட்டியலில் குறிப்பிடப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

பிரிகேடியர் மெர்வின் சில்வா என்பவர் முன்னிலையில் இந்த கலந்தாலோசனைக்கூட்டம் சிங்கள குடியேற்றத்திற்கு நட்த்தப்பட்டு பின்னர் அதன் நகல் அனைவருக்கும் பரிமாறப்படுகிறது. மேலும் சிவில் நிர்வாக அலுவலகராக ராணுவ அதிகாரி குணசேனாவும் , மாவட்ட அதிகாரியான தேஸ்பிரியா முன்னாள் ராணூவ அதிகாரியும் இருக்கிறார் என்பது குறிப்பிட்த்தக்கது. இவர்கள் அனைவரும் ராஜபக்சேவின் நேரடிக்கட்டுப்பாட்டில் சிங்கள குடியேற்றங்களை நடத்துகிறார்கள்.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு சிங்கள குடியேற்றம் மிக விரைவாக நடக்கிறது. இப்போது அரசின் கவனம் மன்னார் மாவட்டம் பக்கம் திரும்பியுள்ளது. நிலயுரிமை அதிகாரம் சிங்கள மக்களுக்கு அளித்ததை அரசு உறுதி செய்கிறது. இதுவரை 10 ஆயிரம் சிங்கள குடியேற்றமும், உள்கட்டுமான வள்ர்ச்சியும் அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுள்ளது.வவுனியாவிற்கு இடம்பெய்ர்வதற்கு 6 லட்சம் பணமும் நிலமும் சிங்களவர்கு வழங்கபடுகிறது.

இது ராஜபக்சேவின் மக்ன் நமல் ராஜபக்சே பாராளுமன்ற உறுப்பினராக உள்ள அம்மந்தோட்டா தொகுதி கிராம வாசிகளுக்கு வழங்க பட்டுள்ளது.அத்ற்கு வவுனியாவில் பூர்வீக நிரந்தர வாசிகளாக மாறுவத்ற்கு ஒப்புதல் வாங்கபடுகிறது.

மன்னாரில் சிங்களவர்களின் குடியேற்றம் வடக்கு மாகாண தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சியின் வாக்கு வங்கி பாதிக்ககூடாதென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நவிப்பிள்ளையின் பயணம் நடைபெரும் இத்தருணத்தில் நல்லிணக்க ஆணையம் என்பது கழிப்பறையில் கூட பயன்படுத்தப்பட முடியாத காகிதம் என்பதை இந்த அரசு ஆவணம் தெளிவாக்கி உள்ளது.

ஏனெனில் இந்த குடியேற்றம் என்பது தமிழர்களுக்காகவும் பின்னர் தமிழ் இசுலாமியருக்காகவும் ஒதுக்கப்பட்ட்தாகும். ஆனால் உள் நாட்டில் இடம்பெயெர்ந்த சிங்களவர் என்று இதுவரை இல்லாத புதுக்கதையோடு இதை செயல்படுத்தி இருக்கிறது சிங்கள அரசு.

(மேலும் மன்னார் பற்றிய சில விவரங்களை அடுத்த பதிவில் பதிகிறோம்).